ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Sunday, February 22, 2009

நாளை கறுப்பு கொடி கண்டனம் - வைகோ

வக்கீல்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் - நாளை கறுப்பு கொடி கண்டனம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை கறுப்பு கொடி கண்டன போராட்டம் நடத்தப்படும் என மதிமுக செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து நாளை காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.

வழக்கறிஞர்கள் மீது தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது. காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாளை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகோ.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.