ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, February 28, 2009

தீக்குளித்த வாலிபர்-கண்ணீர் விட்டு அழுத வைகோ

வேலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த தேமுதிக தொம்டர் சீனிவாசனை மருத்துவமனையி்ல் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்ணீ்ர் விட்டு அழுதார்.வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேமுதிக தொண்டரான சீனிவாசன் (36) நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்தார்.பலத்த தீக்காயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றிரவு சீனிவாசனை சந்திக்க வந்தார். எரிந்துபோன நிலையில் குற்றுயிராகக் கிடக்கும் அவரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத வைகோ சீனிவாசனின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம், சீனிவாசனின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ,வள்ளிப்பட்டு சீனிவாசன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்துள்ளார். அவர் தேமுதிகவில் முழு ஈடுபாட்டுடன் பாடுபட்டு வந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனின் மனைவி கண்ணீர் விட்டு கதறுகிறார். தேமுதிக கட்சி தலைவருக்காக எந்த கட்சி கூட்டம் நடந்தாலும், அவரது எந்த படமாக இருந்தாலும் சென்று பார்ப்பார் என்று கூறுகிறார்.இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்க போகிறேன் என்று கூறியபோது வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைத்தேன். எனது கணவரின் உடல் முழுவதும் வெந்து போய் இருப்பதால் எனது ஒரே மகன் அவரை பார்க்க வரவே அச்சப்படுகிறான். அவர் பிழைக்கவில்லை என்றால் நானும், எனது மகனும் உயிரோடு இருக்க மாட்டோம் என்று கூறுகின்றார்.
இதற்கு நான் என்ன பதில் சொல்ல (கண் கலங்குகிறார்). இந்த சம்பவம் நெஞ்சை பிளக்கிறது. லட்சக்கணக்காக மக்களை கொல்லும் திட்டம் இலங்கையில் நடக்கிறது.இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் கொடுத்து விட்டு, அவர்களுக்கு மருந்து வழங்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நிதி திரட்ட போவதாக சொல்கிறார்கள். அந்த நிதி யாருக்கு கொடுப்பதற்கு? சிங்கள ராணுவத்திற்கா?துளி மருந்து வாங்கவும் நிதி வழங்க கூடாது. அது முறையாக இலங்கை தமிழர்களுக்கு போய் சேராது.இதுவரை அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்டவில்லை. லண்டனில் கூட இலங்கை பிரச்சினை குறித்து 3 நாட்கள் விவாதம் நடந்தது. இங்கு நாம் 7 கோடி பேர் இருந்தும் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.இலங்கையில் போரை நிறுத்தகோரி, இந்த நிமிடம் வரை இந்திய அரசு சார்பில் சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ, பிரணாப் முகர்ஜியோ இலங்கை அரசை வலியுறுத்தவில்லை.வினையை விதைத்திருக்கிறார்கள், வினையை அறுப்பார்கள்.வக்கீல்களை, போலீசார் தாக்கியது திட்டமிட்ட தாக்குதல். போலீஸ் அதிகாரிகள் அரசு சொன்னதை கேட்டுக்கொண்டு செய்தனர்.
வக்கீல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்.தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் வைகோ.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.