ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, May 2, 2009

தொடர் செய்திகளை வலைதளத்தில் பாருங்கள்

www.mdmkonline.com என்ற வலைத்தளத்தில் தொடர் வரும் ஈழ செய்திகளை காணலாம்.

-தோழர்.

Monday, April 20, 2009

பெரும் கொடுமை பேரவலம் - ஆயிரக்கணக்கில் தமிழ் உயிர் போகிறது

பெரும் கொடுமை பேரவலம் - ஆயிரக்கணக்கில் தமிழ் உயிர் போகிறது

மக்களை மனிதக் கேடயமாக்கி முன்னேறிய சிங்களப் படை 'பாதுகாப்பு வலய'த்தில் கோரத் தாண்டவம்: 1,496 தமிழர்கள் படுகொலை; அவர்களில் 476 பேர் சிறுவர்கள்

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை - தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் - பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்.

மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் - பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து - ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் வெடிகணைகள், குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் இன்று மூர்க்கத்தனமாக நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து - 'பாதுகாப்பு வலய' பகுதிகளில் இருந்து வெளியேறிச் சென்று நேற்றைய நாள் தம்மிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி, இன்று அதிகாலை அளவில், அம்பலவன்பொக்கணை பகுதி ஊடாக சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

மக்களை மனிதக் கேடயங்களாக்கி சிங்களப் படையினர் முன்னேறியதால் - எதிர்த்தாக்குதல்களை நடத்த முடியாமல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகளின் வன்னி கட்டளை மையத்தை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

இருந்த போதும் - தமது இந்த மனிதக் கேடய முயற்சிக்கு ஒத்துழைக்காத மக்கள் மீது சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர், இதன் போது பெருமளவிலான மக்களைக் கொன்றனர்.

இந்த தாக்குதல்களும் படையெடுப்பும் - இன்று திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணி தொடக்கம் நடத்தப்பட்டன.

சிங்களப் படையினர் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான தமிழர்கள் மூச்சுத் திணறி இறந்ததாகவும், ஒரு கட்டத்தில் தானும் அவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் 'புதினம்' வன்னிச் செய்தியாளர் இந்தப் பேரவலத்தின் நடுவில் இருந்து தெரிவித்தார்.

சிங்களப் படையினர் வீசிய ஒரு வகையான குண்டுகள், வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி கொல்லப்பட்டுள்ளர். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன.

சிங்களப் படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த இந்த பகுதிகளில் - ஏராளமான கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஏராளமானோர் இப்போது அதிகளவில் இறந்து கொண்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இப்போதும் முள்ளிவாய்கால், வலைஞர்மடம் பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன எனவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, April 12, 2009

கொடுமையிலும் கொடுமை சிங்கள அரக்கர்களின் அட்டகாசம் தினந்தோறும் வடியும் தமிழ் ரத்தங்கள் சாகும் தமிழ் பிஞ்சுகள் .

கொடுமையிலும் கொடுமை சிங்கள அரக்கர்களின் அட்டகாசம் தினந்தோறும் வடியும் தமிழ் ரத்தங்கள் சாகும் தமிழ் பிஞ்சுகள் .


பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிறு அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

இப்பகுதியில் 45 நிமிட நேரத்தில் 300 க்கும் அதிகமான எறிகணைகள் சிறிலங்கா படையினரால் ஏவப்பட்டன. இவை அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய மக்கள் வாழ்விடங்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.

வட்டுவாகல், மந்துவில் ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வாழ்விடங்களான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் பகுதிகள் நோக்கியும் சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர்.

இன்று பிற்பகல் 4:00 மணிவரை நடைபெற்ற மேற்படி தாக்குதல்களில் 294 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதிகளில் உள்ள சகல மருத்துவ நிலையங்கள் உட்பட திலீபன் மருத்துவ சேவைப் பிரிவினராலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேவேளையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பதுங்குகுழிகளுக்குள் நீர் நிரம்பியுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்புத் தேட முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தளன் வீதிக்கு மேற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் மாத்தளன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் மக்களை நோக்கியும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேவேளையில் பாதுகாப்பு வலயத்தின் சகல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் சிறிலங்கா வான்படையினரின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தினர். இதனால், கடும் மழைக்கும் மத்தியில் மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடி அவலப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க தற்போதைய நிலை தொடர்பாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் து.வரதராஜா தகவல் தெரிவிக்கையில்:



படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்த 700-க்கும் அதிகமான மக்களை மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

கடும் மழையினால் நேற்று முன்தினம் கப்பலில் நோயாளர்களை ஏற்ற முடியாத நிலையில் கப்பல் திரும்பிச் சென்றுவிட்டது. நேற்றும் கப்பல் வரவில்லை. இந்நிலையில் தாக்குதல்களில் படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

மாத்தளன் மருத்துவமனை பகுதியில் பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது. விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர்கள் மழையில் நனையும் இடர் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர் து.வரதராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் தொடர்ச்சியான மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் கூடுதலாகப் பரவுவதற்கான சூழல் உள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் கூரை விரிப்புக்களின் கீழ் வாழ்ந்து வருவதனால் காற்றுடன் கூடிய மழை மக்களை பாதித்துள்ளது. மாத்தளன் மருத்துவமனையும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

'மக்கள் பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களினால் நாள்தோறும் படுகாயமடையும் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என த.சத்தியமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.



வைகோ சரண்டர் பின்னணி… வன்னியிலிருந்து வந்த கட்டளை!



நண்பர்களே இந்த கட்டுரை அல்லது செய்தி ஜூனியர் விகடனில் வந்தது : இதில் நமக்கு பல மாற்றுக்கருத்து உண்டு இருந்தாலும் உங்களின் பார்வைக்கு வைக்கிறோம். பல பேர் இதை படித்திருக்கலாம் .

நட்புடன்
தோழர்

vaiko-order-from-vanni

”முறிந்தது கூட்டணி… வைகோ வழி, தனி வழி!” என்று ம.தி.மு.க. வட்டாரமே முடிவுக்கு வந்திருக்க… ஏப்ரல் எட்டாம் தேதி மாலை தொடங்கி, ஒன்பதாம் தேதி விடியலுக்குள் மளமளவென சில நிகழ்வுகளால் உரசல்கள் ஒட்டப்பட்டு… மறுபடி ‘ஃபெவிகால்’ கூட்டணியானது!
‘இரண்டு தொகுதிகள் தருகிறோம்’ என்று ஆரம்பித்த பேரம்தான் நான்கில் முடிந்திருக்கிறது. ”உண்மையில் நான்கு தொகுதிகளை ஏற்றுக்கொள்ளும் மூடுக்கு ஏழாம் தேதி மாலையே வந்துவிட்டார் வைகோ.

ஆனால், விருதுநகர், தஞ்சை, மத்திய சென்னை, நீலகிரி என்று ஜெ. தருவதாகச் சொன்ன தொகுதிகளில் விருதுநகர் போக மூன்றுமே வைகோவைக் கசப்படைய வைத்தது. அதுதான்
பேச்சுவார்த்தையையும் இழுத்தது. தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் இதில் தலையிட்டு… ‘வைகோவை இழப்பது கூட்டணிக்கு நல்லதல்ல’ என்று சொன்னதைத் தொடர்ந்தே மத்திய சென்னை வாபஸ் பெறப்பட்டு, வைகோ விரும்பிய ஈரோடு தரப்பட்டது.

அப்போதும் சமாதானம் அடையாத வைகோவை மாற்றியது, வன்னிக் காட்டிலிருந்து அவருக்கு வந்த அன்புக் கட்டளைதான்!” என்று விவரம் சொல்கிறார்கள் ‘தாயக’ தம்பிகள்!

ஜெயிலுக்கு நேரமாச்சு..!

ஏப்ரல் எட்டாம் தேதி இரவு வைகோவுக்கு ஒரு புதிரான இரவாகத்தான் இருந்தது.

சென்னை அண்ணாநகர் வீட்டில் இருந்த வைகோ, போனும் கையுமாகத்தான் இருந்தார்.

தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், மறுநாள் காலை பொதுக்குழுவைக் கூட்ட விருந்ததே காரணம்.

தேர்தலில் தனித்துப் போட்டி என்பதை அறிவித்து, அதற்கான வியூகங்களைக் கூட்டிக் கழித்துப் பார்க்கத் தொடங்கியிருந்தாராம் வைகோ.

அவருடைய மனஓட்டம் தெரிந்து, டெல்லியிலிருந்து பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள் சிலரும் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள். பி.ஜே.பி., ம.தி.மு.க., சரத்குமார், கார்த்திக், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்று ஒரு புதுக் கூட்டணிக்கான ஃபார்முலா அந்த இரவில் போடப்பட்டு, வைகோவிடம் தெரிவிக்கப்பட்டதாம்!

‘பொதுக்குழுவுக்குப் பிறகு என் முடிவைச் சொல்கிறேன்’ என்று பிடிகொடுக்காமலே பேசியிருக்கிறார் வைகோ.

இதற்குள், ‘இலங்கைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் பேசிவிட்டு வந்த பேச்சுகளுக்காக உங்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தாலும் பாயலாம்’ என்று காக்கித்துறை நண்பர்கள் சிலர் ‘அலர்ட்’ செய்ய… தேர்தல் நடக்கும்போது தான் சிறையில் இருக்கவும் நேரலாம் என்று யோசித்த வைகோ… உடனடியாக சில முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தாராம்.

அதிகாலை வந்த ஓலை!

அதைத் தொடர்ந்து, ‘தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து ஒலிக்காத வண்ணம், வைகோவை கைது செய்துவிட திட்டம் தயாராகிறது.

அதற்காகவே அவரது பேச்சு குறித்த லீகல் ஒப்பீனியனை அரசு வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்!’ என்று ஒரு தகவலை இங்கிருந்து கடல்கடந்து அனுப்பி வைத்தார்களாம் இலங்கைத் தமிழ்ப் போராட்ட ஆதரவாளர்கள் சிலர்.

அதன் விளைவாகத்தான் வன்னி காட்டுப் பகுதியிலிருந்து அவருக்கு ஒன்பதாம் தேதி அதிகாலையில் ஓர் அன்புக் கட்டளை வந்ததாகச் சொல்லப்படுகிறது!

‘முப்பத்தேழு விடுதலைப் புலிகளை உங்கள் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்ததற்காக உங்கள் தம்பி ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.

ஈழப் பிரச்னைக்காக ஒன்றே முக்கால் வருடம் சிறையில் இருந்தீர்கள்.

அதற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்கவேண்டிய நேரம் இது.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
அந்தக் கூட்டணியின் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப்போவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது.

அ.தி.மு.க. என்பது எங்களுக்கு ஆதரவான கட்சியல்ல… என்றாலும், அரசியல்ரீதியாக அதுதான் இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான முக்கியக் கட்சி! நீங்கள் அங்கே இருப்பதுதான் சரி…’ என்று உருக்கத்தோடு இருந்ததாம் அந்த வன்னிக் காட்டுக் கட்டளை!

இதுகுறித்து வைகோவுக்கு நெருக்கமான சிலர், ”தன் கட்சியைக் கரைக்கப் பார்க்கும் தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருந்த வைகோ, தனக்குப் பிரியமானவர்கள் இட்ட கட்டளையைக் கேட்டு பளிச்சென்று தெளிவாகிவிட்டார்.
கேட்ட தொகுதிகள் அத்தனையும் கிடைக்காமல் போனாலும்… தன் கொள்கைக்கான அரசியல் தீர்வு கிடைத்தால் போதுமென்று முடிவெடுத்தார்! விடிந்தும் விடியாத பொழுதில், அ.தி.மு.க. தரப்புக்குப் போன் போட்டுப் பேசினார்.

மளமளவென்று தொகுதி உடன்பாட்டுக் கடிதம் தயாராகி வந்தது.

அவரும் கையெªழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு… தெளிவான மனதோடு பொதுக்குழுவுக்குக் கிளம்பிப் போனார்…” என்கிறார்கள்.

தான் கைதாகலாம் என்ற சிந்தனை அவருக்குள் சுழன்றுகொண்டே இருக்க… ‘கொள்கைகளை நாடெங்கும் கொண்டுபோக வசதியாக நமக்கென ஒரு சேனல் தொடங்கப்படும்’ என்று பொதுக்குழுவின் ஆரம்பித்திலேயே அறிவித்தார் வைகோ.

அடுத்து தொகுதியின் பெயர்களைச் சொல்லுகையில், கடைசியாக விருதுநகர் பெயரை நிறுத்தி நிதானமாகக் கூற… அதுதான் வைகோ போட்டியிடும் தொகுதி என்று புரிந்து, பொதுக்குழு மண்டபத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரமானதாம்.

புலி வேட்டை…

இலங்கைத் தமிழர் பிரச்னையை இங்கே தேர்தல் பிரச்னையாக எப்படி கொண்டுசெல்வது என்று தீவிரமாக யோசித்துவரும் வைகோவுக்கு, அங்குள்ள நிலவரம் குறித்து சில புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறதாம்.

அதுகுறித்து ம.தி.மு.க-வினர் சிலர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள் -

”வன்னிப் பகுதியில் 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புலிகளோடு தமிழர்களும் தங்கியிருக்கிறார்கள்.

அங்கு மொத்தம் மூன்று லட்சம் தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள்.

ஆனால், ராணுவம் நாற்பதாயிரம் பேர் என்கிறது. அரசுத் தரப்போ எழுபதாயிரம் பேர் தங்கியிருப்பதாக அறிக்கை விடுகிறது.

ஆக, லட்சக்கணக்கான தமிழர்களைக் கொல்ல ராணுவம் முடிவெடுத்தே உயிர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் இரண்டாவது சிறப்புப் படையணி ஒன்று உருவாக்கப்பட்டு, தாக்குதலை ஆரம்பிக்கும் என்று ராணுவம் அறிவித்திருக்கிறதாம்.

புலித் தலைவர் பிரபாகரன் இப்போதும் களத்தில் இருந்துதான் போராடுகிறார்.

அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பொட்டு அம்மானிடம் பொறுப்பை விட்டுக் கொடுத்துவிட்டதாக வரும் தகவல் சரியல்ல.
ஆனால், இலங்கை அரசு திட்டமிட்டுள்ள அடுத்த தாக்குதலை உலக நாடுகள் தடுக்காமல் அனுமதித்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழும் பெரிய மனித அழிவாகவே அது இருக்கும்!” என்கிறார்கள் இவர்கள்.

ஆபரேஷன் விருதுநகர்..!

தொகுதிப் பங்கீட்டுப் பூசலில் வைகோ வெளியே வந்துவிடுவார் என்ற நிலை மாறியதில், தி.மு.க. முகாமுக்கு சற்று அதிர்ச்சிதானாம்.

வைகோவின் மீதான இலக்கை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறதாம் அறிவாலயம்.

”தேசியக் கட்சிகளான பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் மேலிடங்கள் எப்போதுமே வைகோ மீது ஒருவிதப் பரிவுடன் இருப்பதுவழக்கம்.

எனவே, வைகோ போட்டியிடும் தொகுதியில் மட்டும் காங்கிரஸ்வேட்பாளரை சுணங்க வைக்கும் முயற்சிகூட நடக்கலாம் என்று தி.மு.க-வுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அந்த சந்தேகத்துக்குத் துளிகூட இடம் தராத வகையில், காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்கும் விருதுநகரை தி.மு.க. திரும்ப வாங்கி, அங்கே தன்னுடைய வேட்பாளரை நிறுத்தக்கூடும்.

பதிலுக்கு ஆர்.எஸ்.பாரதிக்காக ஒதுக்கிய தென்சென்னையை காங்கிரசுக்குத் தரக்கூடும்.

மதுரைக்கு அடுத்து, அழகிரியின் உச்சகட்ட அதிரடிப் பார்வை விருதுநகர் மீதுதான்.

ஆக, விருதுநகர் ஒரு போர்க்களம்தான்!” என்று தகவல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன!

- எஸ்.சரவணகுமார்

Saturday, April 11, 2009

கபட வேடதாரி கருணாநிதி இங்கே இந்த ஈழ நண்பனின் மடலை படியுங்கள்

கபட வேடதாரி கருணாநிதி : இந்த ஈழ நண்பனின் மடலை படியுங்கள்

சுயநல அரசியல்வாதிகளை வீட்டிற்கு அனுப்பி எமக்கு வாழ்வு கொடுங்கள்: தமிழக உடன் பிறப்புகளுக்கு ஈழத்தமிழனின் கோரிக்கை!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்' இழப்புக்களையும் கொடுரங்களையும் இந்தக்கலியுகத்தில் நாம் அனுபவித்து விட்டோம். வகைப்படுத்தவோ உதாரணத்திற்கோ எதையும் இங்கே நிகரிட முடியாது. என்று தொடருகின்றார் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஈழத்தமிழன். அவரது கோரிக்கையின் முழுவடிவம்,

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்'

இது பகவத்கீதையில் மிகமுக்கியமான இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வாக்கியம். நடைமுறை யதார்த்தமும் இவ்வாறே காணப்படுகின்றது. ஆனாலும் அளவுக்கதிகமான இழப்புக்களையும் கொடுரங்களையும் இழப்புக்களையும் இந்தக்கலியுகத்தில் நாம் அனுபவித்து விட்டோம். வகைப்படுத்தவோ உதாரணத்திற்கோ எதையும் இங்கே நிகரிட முடியாது.

வீரத்தையும் உறுதியையும் தான் இங்கு குறிப்பிடுகின்றேன். மரங்களுக்கும் மண்புழுவுக்கும் ஆராய்ச்சிக்கட்டுரையும் வாழ்வியல் வரலாறும் பாதுகாப்பும் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் இந்த உலகம் எங்கள் அவலத்தை, அழிவைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இன்றைய நவீன நாகரீக உலகத்தின் மீது எனது மனக்கவலையெல்லாம்.

இருந்தும் ஈழத்தமிழனின் தலைமையின் உறுதியும், வைராக்கியமும் சர்வதேசத்தின் மெளனத்தையும், மனச்சாட்சியையும் சம்மட்டியால்த் தாக்கியிருக்கிறது. உண்மை நிலையை உலகு நீக்கமற ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இதுதான் இன்று இந்திய வல்லாதிக்கத்திற்கும் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கும் பெருத்த தலைவலியாக உருவெடுத்திருக்கும் இக்கட்டான நிலை. இந்தியாவின் சதியும் திட்டமிடலும் தான் இலங்கை சிங்கள அரசிற்கு தனது தகுதிக்கு மீறிய சண்டித்தனத்தை அழித்தொழிப்பை கண்மூடிச் செயல்பட வைத்தது.

இந்தியா தனது கொள்கை வகுப்பாளர்களையும் தமிழ்ப் பாரம்பரியத்திலுள்ள அரசியல்வாதிகளான கலைஞர் கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்களின் ஆலோசனையுடன் மிக மிக கமுக்கமாக காய் நகர்த்தி நல்லது செய்வது போல உலகுக்கும் மக்களுக்கும் பாவனை காட்டி, பல நாடகங்களை தமிழக அரசு மூலம் நிகழ்த்தி காலத்தை இழுத்தடித்து, புலியழிப்பு என்ற பெயரில் சிங்கள அரசை உச்சாடனப்படுத்தியிருந்தனர். இங்கு தமிழனென்றால் புலி! புலியென்றால் தமிழன்! பிரித்துப் பார்ப்பதற்கு எதுவுமில்லை இதுதான் யாதர்த்தமுமாகும்.

ஜனவரி இரண்டாம் நாள் கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது! இன்னும் ஜந்து தினங்களில் எல்லாம் முடிந்து விடும். நடைபெற்ற நாடகங்களெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிடும் அதன் பின் ஒப்புக்குச் சப்பாணியாக கருணாவையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ உட்கார வைத்து விட்டு பழைய ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்திற்கும் குறைவான சோனியா – ராஜபக்ஷே ஒப்பந்தம் என்று ஒன்றை ஒப்புக்குச்செய்து உலகுக்குகாட்டி ஈழமக்களை ஓரங்கட்டிவிட்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றிவாகை சூடலாம் என்பதே சோனியா – மன்மோகன்சிங்- கருணாநிதி ஆகியோரின் கனவுத்திட்டம். இந்தக் கனவெல்லாம் எந்தளவுக்கு நனவாகுமோ சாத்தியப்படுமோ தெரியவில்லை.

வட இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலக் கட்சிகள் காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலைச் சந்திக்க அறவே விரும்பவில்லை.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மாநிலக்கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு முன்றாவது அணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற வெளிப்படையாககச் செயல்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சொல்லும்படியான பலம் காங்கிரசுக்கோ திமுகவுக்கோ கிடைக்கப் போவதில்லை

பாமக, மதிமக, இடதுசாரிக்கட்சிகள், அஇஅதிமுக வுடன் தேர்தல் கூட்டுச்சேர்ந்து விட்டனர். திமுக ஒன்று தான் கைவிடாமல் காங்கிரஸைப் பிடித்து வைத்திருக்கிறது. கருணாநிதி தனது தலைமையிலான மாநில ஆட்சிக்கு பங்கம் ஏற்படாமல் தக்கவைத்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் தனது தந்திரவலையில் காங்கிரஸ் கோஷ்டிகளை மிகுந்த சிரமத்துடன் வெளியேறி விடாமல் பிடித்து வைத்திருக்கிறார். மத்தியில் காங்கிரஸின் ஆட்சி இருப்பதால் திமுக வின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்பட்டது.

இனிவரும் தேர்தலில காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் பட்சத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிகளை கருணாநிதியால் மட்டுமல்ல எவராலும் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசும் கேள்விக்குறியாகும் என்பது திண்ணம்.

கருணாநிதியின் கவலையெல்லாம் எவர் செத்தாலென்ன வாழ்ந்தாலென்ன தனது அதிகாரத்துக்கும் (குடும்பம்) பிள்ளை குட்டிகளின் பதவிக்கும் எந்த பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே!

தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக ஆட்சியிலிருக்கக் கூடியதான சூழ்நிலையும் குடும்ப உறுப்பினர்களின் பதவி அதிகாரத்துக்கு இடரில்லாத எந்தக் கூட்டணியையும் அவர் வரவேற்கத் தயார்! கொள்கை கோட்பாடு பற்றி எவர் கேட்டாலும் ஜந்து கருத்துப்பட பதிலளித்து வெளியேறக்கூடிய தந்திரம் அவரது கைவந்த கலை. எதையும் வெட்டியாடும் வல்லமையும் அவரிடமுண்டு. பதவிக்காக அவரால் எதுவும் செய்ய முடியும்.

பதவிப்போதை (வெறி)யில் அப்பா இருக்கிறார் என்று அவரது முதல்தார மகன் மு.க.முத்து சமீபத்தில் ஒரு பத்திகைப்பேட்டியின் போது கூறியிருந்தார் அவரது தொண்ணூறாவது வயதிலும் அவரது (இராஜ)தந்திரம் எவராலும் எளிதில் எடைபோட முடியாதது. அவர் இருக்கும் வரை தலைமைப் பொறுப்பை எவரிடமும் அவர் கொடுக்கப் போவதுமில்லை. அவரது குடும்பத்தைத் தவிர வேறு எவரும் திமுகவில் வளர அவர் அனுமதிக்கப் போவதுமில்லை. மக்களால் மட்டும்தான் அவரை வெல்ல முடியும்.

பெப்ரவரி மாதம் புலிகள் பின்வாங்கிக் கொண்டிருந்த நேரம் (எதிரிக்கு ஜாதகம் சரியில்லாத நேரம் 'படுபட்சி' பார்த்து பில்லி, சூனியம் ஏவுவது மந்தரவாதிகளின் தந்திரம் )இச்சந்தர்ப்பத்தைக் கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு தமிழ்நாடு வழியாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பல இராணுவத் தாங்கிகளை (TANK)யும், இராணுவத் தளபாடங்களையும், இராணுவத்தையும் ஈழத்தமிழினத்தை அழிப்பதற்காக அனுப்பி வைத்திருந்ததை அறிந்திருப்பீர்கள்.

புலிகளின் தாக்குதலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் பல இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இன்னும் இராணுவத்தினர் காயப்பட்டு திக்குமுக்காடிய போது ஈழமக்களுக்கு மருத்துவம் செய்யப் போகின்றோம். எனக்கூறிய இந்திய அரசு ஜம்பத்தியிரண்டு மருத்துவர்களையும், மூன்று கோடி இந்திய ரூபாய்க்கான மருந்துகளையும் ஒரு விமானம் முலம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை என்ற இடத்திற்கு அனுப்பிவைத்து பூச்சாண்டி காட்டினார்கள்.

ஆனால் அந்த விமானத்தில் வந்தவர்கள் வைத்தியர்கள் அல்லவென்றும், அவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான 'றோ'வின் உளவாளிகள் என்றும், அதில் ஒருசிலர் இராணுவ மருத்துவர்களென்றும், முல்லைத்தீவில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு உரிய சிகிச்சையளிக்க வந்தவர்களென்றும் பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.

அழித்தொழிப்புக்கு ஆயுதங்களையும், ஆளணிகளையும், பணம், பொருள் என எல்லாவற்றையும் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்துக்கொண்டே அபிவிருத்தி செய்கிறோம் என உலகுக்கு பாசாங்கு காட்டி நிற்கிறது இந்தியா.

ஏப்ரல் பதின்நான்குக்கு முன் புலிகளையும் தமிழர்களையும் பூண்டோடு அழித்து விடுங்கள் என்ன தேவையோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று புதுடில்லி அரசு ராஜபக்ஸவுக்கு கட்டளையிட்டுள்ளது. அதன் எதிரொலிதான் தினமும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட மரணங்கள், படுகொலைகள்.
இவையனைத்தும் மக்கள் பாதுகாப்பு வலயங்கள் என வரையறுக்கப்பட்ட இடங்களிலேயே நடத்தப்படுகின்றன.

வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களையும் வெளியேற்றிவிட்டு நடத்தப்படும் இப்படுகொலைகள் காலத்தால் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. இப்படுகொலைகளுக்கு இலங்கை அரசை உச்சாடனப்படுத்தியது இந்தியாவின் புலனாய்வுத்துறையான 'றோ'வும், சோனியா அரசுமென்பதை தயவு செய்து எவரும் மறந்துவிடவேண்டாம்.

ஜரோப்பிய யூனியன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற அந்நிய நாடுகளும் ஐ.நா. போன்ற அமைப்புக்களும் சண்டையை நிறுத்தச்சொல்லியும் கண்டனங்கள், எதிர்ப்புக்கள் தெரிவித்தும் இந்தியா எதையும் சட்டை செய்யவில்லை.

ஏப்ரல் முதலாம் திகதிக்கு முந்திய நாட்களில் இந்திய இராணுவத்தினர் இருநூறுக்கு மேற்பட்டவர்களும் சிங்கள இராணுவத்தினர் நான்காயிரத்தக்கு மேற்பட்டோரும் புலிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்திய இராணுவத்தினரின் உடல்கள் 'புனே'என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பது இந்தியாவை சிந்திக்க வைத்திருக்கிறது. ஈழப்பிரச்சினையே தேர்தலில் படுதோல்விக்கு வித்திடப்போகின்றதென்பதை கருணாநிதியே சோனியாவின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்.

இருபத்தியொன்பது ஏப்ரல் பாமக, அஇஅதிமுக வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டது. கருணாநிதி இப்படி நடக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. இந்நிகழ்வை அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை. விஜயகாந்தாவது தனக்கோ காங்கிரசுக்கோ கை கொடுப்பார் என எதிர்பார்த்து நூல்விட்டுக் கொண்டிருந்தார். விஜயகாந்தும் அது தோல்விக் கூட்டணியென்தை அறிந்து இவர்களை உதாசீனப்படுத்திவிட்டு தனியே தேர்தலைச் சந்திப்பேன் என்று போய்விட்டார்.

தமிழீழ ஆதரவு அலை, திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு அலையாக உருவெடுத்து விட்டது. நாஞ்சில் சம்பத், இயக்குனர் சீமான் ஆகியோரின் சிறையும் நீதிமன்றத்தில் பொலிஸாரின் அத்துமீறலும் இன்றைய ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் யார் காரணம்? ஏனிந்த கொந்தளிப்பு! இதை சோனியா, மன்மோகன் சிங் ஆகியோரை விட கருணாநிதியே நன்கறிவார்.

தமிழ்நாட்டின் முதன் முதல் உயிராயுதமாகிய தூத்துக்குடி முத்துக்குமரன் ஆளுனர் மாளிகை வாசலில் தமிழீழ விடிவுக்காக தன்னை அக்கினிக்கு இரையாக்கியதும் அதன் தொடர்ச்சியாக பதினொரு மண்ணின் மைந்தர்கள் தங்களைத் தீப்பிளம்பாக்கிக் கொண்டார்கள். அவர்களின் விலை மதிக்கமுடியாத உயிர்களின் பெறுமதியை இழப்பை கருணாநிதியின் செழித்த குடும்பமோ, சோனியாவின் செல்வக்குடும்பமோ ஈடுசெய்யுமா?

தொடர்ந்து இன்றுவரை ஆயிரமாயிரம் அமைப்புக்களும் மக்களும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் பெண்கள் அமைப்புக்களும் கட்சிகளும் உண்ணாநோன்பு பேரணி வேலை நிறுத்தம் என இலட்சோப லட்சம் மக்கள் அணி திரண்டு விட்டனர். கடுகளவு கூட அசையாமல் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் இருக்கும் இவர்களை தயவு செய்து இனங்கண்டு கொள்ளுங்கள்.

தேர்தல் திருவிழாவை ஈழப்பிரச்சினை என்ன எதிர் விளைவுகளைத் தருமென்று அவர்கள் அனுமானித்திருக்கவில்லை. புலிகளை ஜனவரி முப்பதுக்குள் அழித்துவிடலாம் மே மாதம் தானே தேர்தல் சாவகாசமாகப் பிரச்சாரம் செய்யலாம் என்ற கணக்கு ஈழத்தலைவனின் உறுதியாலும் தமிழர்களின் வீரத்தாலும் தவிடுபொடியாகிவிட்டது.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்'

இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.தமிழ்நாட்டின் மைந்தர்கள் நெருப்பில் எரியும் போது முதுகு வலி, நோவு என்று குளிர்சாதன ஜந்து நட்சத்திர மருத்துவமனையில் ஒழிந்து ஓய்வெடுத்தவர்கள் காலங்கடந்து இன்று புலம்புகின்றனர்

நான் கருணாநிதியை நிறைய விமர்சிக்கத் தேவையில்லை காரணம் அவரைச்சுற்றி இப்போது நெடுமாறன் ஐயா, வைகோ, மருத்துவர் ராமதாஸ், ஜெயலலிதா போதாக்குறைக்கு விஜயகாந்தும் சேர்ந்து தினமும் ஜந்து முனையில் ரவுண்ட் கட்டி கேள்விக்கணை தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருணாநிதியுமோ சளைக்காமல் உறக்கமின்றி கேள்வி பதில் கடிதம் ஆகியவற்றால் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார். அவரது வயதுக்கு இந்த நெருக்கடி தேவைதானா என்று என் மனம் இரங்கல் தெரிவிக்கிறது.

கடைசியாக ஏப்ரல் முதலாம் திகதி (முட்டாள் தினத்தன்று) சோனியா தனக்கொரு கடிதம் அனுப்பியதாகவும் ஈழத்தமிழர்கள் தாம் விரும்பிய ஒரு தனி ஆட்சியை பெறுவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கும் என்றும் சன் ரிவி மூலம் தெரிவிக்கப்பட்டது.

யாரை நம்ப வைக்க இந்த நாடகங்கள் !! சகல கபட நாடகங்களையும் நாம் கண்டு களித்து விட்டோம். திரும்பிப் பார்ப்பதற்கு சிலவற்றை இங்கு தருகிறேன்.

• ஓட்டு மொத்த எம்.பிக்கள் இராஜினாமா!

• இந்த ஆட்சி இனியும் தேவை தானா!

• இந்த உயிர் தேவையா!

• அனைத்துக்கட்சிகளின் கூட்டு தீர்மானம்!

• மனிதச் சங்கிலி;!

• அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லி பயணம், பிரதமர் சோனியா சந்திப்பு!

• உண்ணாவிரதமிருப்பேன்!

• யுத்தநிறுத்தம் செய்யப்படும்!

• சோனியாவும் மன்மோகனும் ஒப்புக்கொண்டனர்!

• பிரணாப் முகர்ஜி இலங்கை பயணம்!

• இறையாண்மை தடைபோடுகிறது!

• அது வேறு நாட்டு உள்விவகாரம்

இன்னும் பல அவற்றில் எனது அறிவுக்குப் புலப்படாத அண்ணா காலத்துக் கதைகள், நேரு காலத்து உதாரணங்கள், இராஜராஜ சோழன், குலோத்துங்கன் பற்றிய பரிமாணங்கள் என்று புலம்புகிறாரே தவிர தமிழருக்கு என்று ஆக்கபூர்வமாக உருப்படியாக ஒன்றை செய்தாரா? ஏதாவது ஒன்றை அவர் கூறினாலும் அவரைத்தவிர வேறு எவருக்கும் அது புரிவதில்லை அல்லது புரியக்கூடாதவை! அல்லது அந்த அர்த்தத்தில் நான் பேசியிருக்கவில்லையென்பார். எல்லாம் அவருக்குத்தான் வெளிச்சம்.

என் இனிய சகோதர சகோதரிகளே தாய்மார்களே எங்கள் துயரை நீங்கள் நன்கு அறிவீர்கள்

தினமும் உணவின்றி உறக்கமின்றி வீடு, வாசல், உடைமை இழந்து வருடங்களாகிப் போய்விட்டது. நல்ல குடிநீர் கூட கிடையாத எமக்கு இப்போது உள்ளது இருக்கும் வரை இந்த உயிர் மட்டும்தான்!! அதைக்காக்க நீங்கள் செய்த, செய்கின்ற தியாகங்கள், போராட்டங்கள் நிகரில்லாதவை! அதற்கு நன்றியொன்று கூறி உங்களை எங்களிடமிருந்து பிரித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நீங்கள் இருக்கும்வரை நாங்களும் இருக்க விரும்புகின்றோம். எனவே எவர் எங்களின் இந்த நிலைமைக்கு காரணமாயிருந்தாரோ அவர்களுக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுங்கள்.

இனியும் தீக்குளித்து உங்கள் உயிரை அழித்துக் கொள்ளாதீர்கள்! சாவது நாங்களாகவே இருக்கட்டும். நீங்கள் தீர்மானிக்கும் சக்தியாகவே இருங்கள். பத்துக்கும் மேற்பட்ட உங்கள் உறவுகள் தங்கள் உயிரை தீயில் மாய்த்துக்கொண்டபோதும் உங்கள் அரசு உங்களுக்கென்ன மரியாதை செய்து நடவடிக்கை எடுத்தது.

எனவே எங்களுக்காவும் வாழுங்கள்!

அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய இந்த நேரத்தைச் சரியாக பயன்படுத்துங்கள்.

சுயநல அரசியல் முதலைகளை சாமானியராக்குங்கள்.

இப்போ சந்தர்ப்பம் உங்கள் கையிலுள்ளது.

உங்கள் தெரிவு எங்களுக்கொரு தீர்வை விரைவில் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்...........................

மீண்டும் சந்திப்போம்!

ஒரு ஈழத்தமிழன்
தமிழீழம்.

Thursday, April 9, 2009

வைகோ மீது வழக்கு பதிவு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம் .

வைகோ மீது வழக்கு பதிவு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாகவும் வழக்கு.

மேற்படி விவரங்களை சில மணித்துளிகளில் தெரிவிக்கிறோம்.

-தோழர்


கொத்து கொத்தை வடியும் தமிழர் ரத்த்தங்களும் வீழும் உயிரகளும்

வன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் கொலைவெறித் தாக்குதல்: இன்று (வியாழன்) 322 பொதுமக்கள் படுகொலை; 300க்கு மேல் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பாதுகாப்பு வலயப் பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர்.

பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் பகுதிகளை நோக்கியே சிறிலங்கா படையினர் இத்தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 322 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் 212 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடினர்.

இதேவேளையில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என அனைத்துலக ஊடகங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்த நிலையில் மீண்டும் இப்பகுதியை நோக்கி அது தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, April 7, 2009

இலங்கை தமிழர் நலனுக்கு மத்திய அரசே பொறுப்பு : பா.ம.க., வலியுறுத்தல்


சென்னை: 'நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழர்களின் நலத்திற்கும், உத்தரவாதத்திற்கும் அளிக்கக் கூடிய பொறுப்பு மத்திய ஆட்சியின் கரங்களில் தான் இருக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் இடங்கள் இடுகாடாகவும், சுடுகாடாகவும் மாறி வருகின்றன. அங்கு குழந்தைக் குட்டிகளோடு குடும்பம் குடும்பமாய் ஒப்பாரி குரல் தான் கேட்கிறது. மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.


இந்தியப் பேரரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம், இந்த ஆண்டு ஜனவரியில் தமிழக சட்டசபையில் முதல்வரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்தியப் பேரரசு அசைந்து கொடுக்கவில்லை. 'பேசியிருக்கிறோம், சொல்லியிருக்கிறோம், வேண்டுகோள் விடுத்திருக்கிறோம், வற்புறுத்தியிருக்கிறோம்' என்று சொல்லி, காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார்களே தவிர, இலங்கையில் போர் நிறுத்தப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்த அவகாசத்தில் இலங்கையில் தமிழனம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் மீது ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக இனவெறி பிடித்த சிங்கள ராணுவத் தளபதி கொக்கரிப்பு செய்திருக்கிறார். இதனால், தமிழர்கள் கூட்டம் கூட்டமாக செத்துமடியும் சூழல் உருவாகும்.


இந்த கொடுமை நடந்தேறினால், உலகில் இதுவரை நடந்திராத இனப் படுகொலை, இலங்கையில் அரங்கேறிவிடும். எனவே, நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கு உத்தரவாதம் அளிக்ககூடிய பொறுப்பு மத்திய ஆட்சியின் கரங்களில் தான் இருக்கிறது. அந்த கரங்களைப் பிடித்துக் கொண்டு கேட்கிறோம்.
இலங்கையில் சீரழியும், செத்து மடியும் எங்கள் தமிழ் ஜாதியை காப்பாற்றுங்கள். மத்திய அரசின் செவிகளில் விழும்படி உரக்க குரல் கொடுங்கள்; அதற்காக முழு பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கும், அதற்கு தலைமையேற்று நடத்துகின்ற முதல்வருக்கும் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


தமிழக மக்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள். நடேசன் நம்பிக்கை

ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த 'ஜனசக்தி' நாளேட்டுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முழு விபரம்:

போர் நிறுத்தத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு குரல் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லையே?... 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் ஈழ ம‌ண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தும் யாராலும் தடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?...

பல காரணங்கள் உள்ளன.

தடுக்கும் வல்லமை படைத்தவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு உடையவர்களாகவும் இருப்போர் அதனை உரிய முறையில் தடுக்கத் தவறியது ஒரு காரணம். நியாயமான அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை, இந்த உலகம் "பயங்கரவாதம்" எனச் சித்திரித்தது அடுத்த காரணம். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு இந்த உலகமே திரண்டு உதவிகள் செய்வது இன்னொரு காரணம். தனது தென் கோடியில் தனக்குப் பலமான பாதுகாப்பாய் - உண்மையான நண்பர்களாய் - எப்போதும் இருக்கின்ற தமிழீழத் தமிழர்களை இந்தியா அவ்வாறு கருதத் தவறியது இவற்றுள் முக்கிய காரணம்.

இப்போது ந‌டந்து வரும் போரில் இதுவரையில் மொத்தம் எத்த‌னை த‌மிழ‌ர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்?... வீடு இழ‌ந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர்?... காய‌ம் அடைந்த‌வ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு பேர்?...

நாங்கள் சொல்லுகின்ற தகவல்களை இப்போதைக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுவோம். பக்க சார்பற்ற விதத்தில் ஐ.நா. சபையினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் - இப்போது அவர்களுக்குத் தெரியாமலேயே வெளியாகிவிட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் - கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 2,683 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7,241 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் - ஜனவரி முதல் நாளிலிருந்து மார்ச் 31 ஆம் நாள் வரை வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,001. மூன்றரை இலட்சம் வரையான மக்கள் - தமது வாழ்விடங்களை, வீடுகளை, தொழில்களை, கல்வியை, வாழ்க்கையை, எல்லாவற்றையுமே இழந்துவிட்டு - வெறும் கடற்கரை மணலில், வெறும் கூடாரங்களுக்குள் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதன் வாழுவதற்கு மிக மிக அடிப்படையான விடயங்களான உணவு, உடை, உறக்கம், சுகாதார வசதி, மருத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பும் நிம்மதியும் - எதுவுமே இந்த மக்களுக்கு இல்லை.

உலக நாடுகள் பலவும் வலியுறுத்திய பிறகும் ஏன் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசு முன்வரவில்லை?

அனைத்துலக நாடுகளும் சரி, இந்தியாவும் சரி உரிய முறையில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் போட்டனவா, அல்லது போரை நிறுத்திவிட்டுப் பேச்சுக்களுக்கு வரக் கூடிய சூழ்நிலைக்கள் சிறிலங்கா அரசை உரிய முறையில் தள்ளினவா என்பதை இதைப் படிக்கின்ற மக்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

போரில் பெரிய அளவில் புலிகள் தாக்குதல் நடத்தாமல் பின்னோக்கி போய் இப்போது சிறு பகுதியில் மட்டுமே இருக்கிறார்களே..?

போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். போரியல் பரிமாணத்தில் நோக்கும் போது - கட்டுப்பாட்டு நிலப்பரப்பு சுருங்கிவிட்டது என்பதும் உண்மை தான்.

எமது போராட்டத்தின் காரணங்களையும், அடிப்படைகளையும், வரலாற்றையும் சரிவர உணர்ந்து கொள்ளாத, இந்தியா உட்பட, பல உலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவதாலேயே, சிறிலங்கா படைகளால் இவ்வாறு முன்னேறி வர முடிகின்றது. அது தான் உண்மை.

ஆனால், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம், உலக அரங்கில் - அனைத்துலக தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த ஆதரவை என்றுமில்லாத அளவுக்கு இப்போது பெற்றிருக்கின்றது. கோடிக்கணக்கான தமிழர்கள், எமது தேசத்தின் கொடிகளோடு உலக வீதிகளிலே இறங்கி எங்கள் உரிமைக்குரலை இப்போது எழுப்பி வருகின்றார்கள். உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கி, அதன் மனத்தை வெல்லும் பெரும் போராட்டத்தில் நாங்கள் இப்போது மாபெரும் வெற்றியை பெற்று வருகின்றோம்.

உண்மையில் எமது போராட்டம் நீங்கள் கூறுவது போல சிறு பகுதிக்குள் சுருங்கிவிடவில்லை; இப்போது தான் அது புதிய அரசியல் பரிமாணங்களைப் பெற்ற உலகப் பரப்பு எங்கும் என்றுமில்லாத அளவுக்கு வியாபித்து வருகின்றது.

பொதுமக்கள் மீது தற்கொலைத் தாக்குதல் என்ற செய்தி, முஸ்லிம்கள் பங்கேற்ற மீலாது விழா ஊர்வ‌ல‌த்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பற்றி...?

ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்லிவிடுகின்றேன். பொதுமக்களைக் கொல்வதனை இலக்காகக் கொண்டு எந்தவொரு கரும்புலித் தாக்குதல் நடவடிக்கையையும் எமது இயக்கம் எப்போதுமே நடத்தியது கிடையாது. அது எமது கொள்கையும் அல்ல.

பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்திய இடங்களில் கூட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே?

சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான தமிழினப் படுகொலைத் திட்டத்தையே இது அம்பலப்படுத்துகின்றது அல்லவா?..


அதுவாகவே ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடாத்தி, தமது வாழ்விடங்களிலிருந்து மக்களை விரட்டி, பின்னர் அந்த மக்களை தானே "பாதுகாப்பு வலயம்" எனக் குறிப்பிட்டு ஒரு பிரதேசத்துக்குள் அடைக்கலம் புக வைத்துவிட்டு - அந்தப் பிரதேசத்தை ஒரு கொலைப் பொறியாக்கி, பீரங்கிகளாலும் வானூர்திகளாலும் குண்டுகளை வீசி தமிழர்களை வஞ்சகமாக கொல்கின்றது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரசு இவ்வாறு செய்வதில் எமக்கு எவ்வித ஆச்சிரியமும் இல்லை. ஆனால், இந்தக் கோரமான இன அழிப்புப் போருக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் அங்கீகாரத்தையும், ஆதரவையும் வழங்குகின்றன என்பதுதான் எமக்கு கவலையைத் தருகின்ற விடயமாகும்.

புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில்தான் இருக்கிறாரா?... அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் வருகின்றனவே?...

எமது தலைவரைப் பற்றி வெளிவருகின்ற அவ்வாறான செய்திகள் எல்லாம் வதந்திகளே. அவர் இங்கே எமது மக்களோடு வாழ்ந்த படியே தான் இந்தப் போரையும், போராட்டத்தையும் வழிநடத்திக்கொண்டிருக்கின்றார்.

உண்மையில் பிரபாகரன் அவர்களின் தற்போதைய மனநிலை என்ன?... தமிழக மக்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்?...

அவர் மிகுந்த உறுதியோடு போராட்டத்தை வழி நடாத்திக்கொண்டிருக்கின்றார். நெருக்கடிகள் சூழும் போது அசாதாரணமான உறுதியைப் பெறுவதும், கூடுதல் தன்னம்பிக்கையைப் பெறுவதுமே அவரது இயல்பு.

தமிழக மக்களின் மீது அவர் எப்போதுமே பெரும் மதிப்பும் பேரன்பும் வைத்துள்ர். தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று இப்போது எமக்கு ஆதரவாய் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல, எமது போராளிகளுக்கும், எமது மக்களுக்கும் கூட நம்பிக்கையையும் துணிவையும் அளித்திருக்கின்றது.

உலகத்தில் எங்கும் நடக்காத அளவுக்கு செய்தியாளர்களை சிறிலங்கா அரசு கொலை செய்து வருகிறதே. ஊடகங்களையும் அவர்கள் முடக்கி போட்டிருக்கிறார்களே..?

பேச்சு சுதந்திரத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் வலியுத்துகின்ற அதேவேளையில், சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்தும் நிற்கின்ற உலக நாடுகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.

"நாட்டின் இறையாண்மை" என்ற போர்வையில் ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த அநீதியான நடவடிக்கை, தமிழின அழிப்புப் போரின் இன்னுமொரு பரிமாணமே அல்லாமல் வேறொன்றும் அல்ல.

வித்தியாதரனை சிறையில் அடைத்ததும், ஏனைய தமிழ் ஊடகத்துறையினரை நேரடியாகவே மிரட்டிப் பணிய வைத்ததும், ஈழத் தமிழர்கள் அவலங்களைச் சொல்லும் தமிழகச் சஞ்சிகைகளை விநியோகித்ததற்காக 'பூபாலசிங்கம் புத்தகசாலை' உரிமையாளரை சிறையில் அடைத்ததும் - எல்லாமே, தமிழர் படுகொலை பற்றிய உண்மைகள் வெளியே வராமல் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஏதேச்சதிகார நடவடிக்கைகளே ஆகும்.

"ச‌கோத‌ர‌ யுத்தம்" என்று திரும்ப‌ திரும்ப‌ முத‌ல்வ‌ர் கருணாநிதி சொல்லிக்கொண்டிருக்கிறாரே... ச‌கோத‌ர‌ யுத்த‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டாம‌ல் இருந்தால் ஈழ‌ம் எப்போதோ கிடைத்திருக்கும் என்கிறாரே...?

80-களின் நடுப்பகுதியில் தமிழர் போராட்ட இயக்கங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு தவறான கையாடலை இந்தியா மேற்கொண்டது என்பதும், அதன் விளைவாக - "விடுதலைக்காக போராடுகின்றோம்" என வந்தவர்கள் பலர் ஈழத்தையே கைவிட்டுத் துரோகிகளாக மாறிப் போனதும், அதன் பின்னர் - இந்தியப் படை தமிழீழத்தில் இருந்த காலத்தில் அந்த துரோகிகள், அதுவரை சிங்களப் படைகளே செய்திருக்காத அளவுக்குக் கொடூரமாகத் தமிழ் மக்களையே கொன்று குவித்த வரலாறும், கலைஞர் ஐயா அவர்கள் அறியாதது அல்ல.

பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ள் எப்போதோ ப‌த்திரிகைக்கு அளித்த‌ பேட்டியில் ஈழ‌த்தில் நான் ச‌ர்வாதிகாரியாக‌ இருப்பேன் என்று சொல்லியிருப்ப‌தை சுட்டிக்காட்டி, அப்போதிருந்தே புலிக‌ள் மீதான‌ எங்க‌ள் ந‌ம்பிக்கை பொய்த்து விட்ட‌து என்று க‌ருணாநிதி சொல்லியிருக்கிறாரே...?

எங்கள் தலைவர் அப்படிச் சொன்னதான நினைவுகள் எதுவும் எனக்கு இல்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் அவர் தவறான ஒரு நோக்கத்தோடு அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என நான் நம்பவில்லை. அப்படியான பத்திரிகைப் பேட்டி எதுவும் இருந்தால், அதை எனக்குக் காட்டுவீர்களானால் எப்படியான கேள்விக்கு, எவ்வாறான சூழலில், என்ன நோக்கத்தோடு அவர் அப்படி சொல்லியிருப்பார் என்பதை வைத்து உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து முத்துக்குமார், ரவிச்சந்திரன், அமரேசன், ரவி, மலேசியா ரவி என வரிசையாக தீக்குளிப்புகள் நடக்கின்றன. உங்கள் கருத்து?

முதற்கண் - தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த எல்லோருக்கும் தமிழீழ மக்களின் சார்பிலும், எமது இயக்கத்தின் சார்பிலும் நான் தலைசாய்ந்து வணக்கம் செலுத்துகின்றேன். தம்மையே வருத்தி அவர்கள் செய்த அந்தத் தியாகங்கள் மனித மொழிகளால் மதிப்பளிக்க முடியாத அளவுக்கு ஒப்பற்றவை.

ஆனால் - உயிர்கள் உன்னதமானவை. அவை மிகப் பெறுமதியானவை. உயிர்கள் விலையாகக் கொடுக்கப்படுகின்ற போது அவற்றுக்கு நிகரான விளைவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தத் தியாகங்களுக்கு மதிப்பளித்தும், தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் - சரியான முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தவறுகின்றனர் என்பது தான் எமக்கு வேதனையை அளிக்கின்றது.

"காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது" என்று முத்துகுமார் தனது இறுதி சாசனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்னும் காலத்தை தாழ்த்திகொண்டு தானே இருக்கிறது இந்திய அரசு?

முத்துக்குமாரும் நீங்களும் இந்தியாவின் குடிமக்கள். இந்தியாவைப் பற்றி உங்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இன்னொருவர் பதில் சொல்லிவிட்டீர்கள். இதில் இனி நான் சொல்லுவதற்கு எதுவுமே இல்லை.

புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி?

தமது சொந்த வாழ்விடங்களில் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அவர்களது நிலத்தின் மீது ஒரு படையெடுப்பை நடத்தி, அந்த மக்களை விரட்டியடித்துவிட்டு, வளமான அவர்களது நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்து, நாசமாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றி, சிங்கள மயமாக்கி, தமிழர்களின் தேசியத் தன்மையைச் சிதைக்கவே முனைகின்றது சிறிலங்கா அரசு.

அதற்காகவே மக்களை நாம் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் என்று அது கதைகளை உருவாக்கி, இந்த மண்ணிலிருந்து அனைத்துலக ஆதரவுடன் தமிழர்களை வெளியேற்றி நிரந்தர அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்க அது முனைகின்றது.

"மனிதக் கேடயம்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகத்திற்குப் பின்னால் சிங்களப் பேரினவாதம் புதைத்து வைத்திருக்கும் ஆழமான அரசியல் சதியையும், இந்த சதி 61 ஆண்டு கால வரலாற்றில் பல பரிமாணங்களை எடுத்துள்ளது என்பதையும், அனைத்துலக சமூகம் மட்டுமன்றி தமிழினமும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மக்களை, அவர்களது போராளிகளான நாங்கள், எமது கேடயங்களாக வைத்திருக்க வேண்டிய தேவை தான் என்ன?

இதுகால‌ம் வ‌ரையில் எதிர்நிலையில் இருந்த ஜெய‌ல‌லிதா இப்போது மனம் மாறி உண்ணாவிர‌த‌ம் இருந்திருக்கிறார். ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ அ.தி.மு.க‌. சார்பில் ஒரு கோடி ரூபா நிதியும் திர‌ட்டப்பட்டிருக்கின்றது. இல‌ங்கைக்குள்ளேயே த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌னி ஆட்சி வேண்டும் என்ப‌தை வ‌ர‌வேற்கிறோம் என ஜெய‌ல‌லிதா கூறுகின்றார். உங்கள் கருத்து?


தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், அவற்றை அடைவதற்கு உரிய தீர்வு என்ன என்பதையும் அவர் இப்போது புரிந்து வருகின்றார் என்பதையே இது காட்டுகின்றது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவர் அளிக்கும் மதிப்பாகவும் இதனை நாம் கருத முடியும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எமது போராட்டத்தின் ஒரு நிபந்தனையற்ற காவலனாக விளங்கினார். அவர் உருவாக்கி வளர்த்த அந்த மரபு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது மீண்டும் உயிர்ப்புப் பெற்று தொடருகின்றது என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழ மக்களுக்கான அவர்களது இந்த ஆதரவு நிலை இனி எப்போதும் மங்காது நிலைத்து இருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் விருப்பம் ஆகும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாய் இருப்பது தொடர்பாக தான் பெருமைப்படுவதாக வைகோ அவர்கள் அண்மையில் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த ஆதரவாய் உள்ளார்கள். உங்கள் கருத்து?

வைகோ அவர்கள் எமது போராட்டத்தின் சலசலப்பற்ற ஒரு துணைவனாக எப்போதுமே இருந்து வருகின்றார். தமிழீழ மக்களின் போராட்டம் தொடர்பான ஒரு தெளிவான, ஆழமான பரிந்துணர்வு அவருக்கு எப்போதும் இருக்கின்றது. அவரை எமது நண்பனாகப் பெற்றதற்காக நாங்களும் பெருமைப்படுகின்றோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் எல்லோருமே தமிழீழ மக்களின் அவலங்கள் கண்டு நேர்மையாகவே துடிக்கின்றவர்கள். ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்று, தம்மைத் தாமே ஆளும் சூழல் பிறக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடையவர்கள். இவ்வாறான அரசியல் தலைவர்களது ஆதரவு தான் தமிழீழ மக்களுக்கு நிம்மதியையும், எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையையம் தருகின்றது.

சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளையும் தடவாளங்களையும் இந்திய அரசுதான் தந்து கொண்டிருக்கிறது என்று தொடந்து சொல்லப்பட்டு வந்த போது இந்திய அரசு அதை மறுத்து வருகிறதே?

எமது போராட்டத்தை அழிப்பதற்காக இன்று நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா ஆற்றிய பங்கு மிகப் பெரியது என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். அதுவே உங்கள் கேள்விக்கான பதிலாக அமைகின்றது.

இந்திய‌ நாடாளும‌ன்ற‌த் தேர்த‌லில் ஈழ‌ப் பிர‌ச்ச‌னை த‌மிழ‌க‌த்தில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்கிற‌ பேச்சு இருக்கிற‌து. ஆயுத‌ உத‌விக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ரும் காங்கிர‌சுட‌ன் தி.மு.க‌. கூட்ட‌ணி சேர்ந்திருக்கிற‌து. ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

தமிழகத்தின் 7 கோடி தமிழர்கள் தான் தமிழீழ மக்களின் பலம்; அவர்களே எமது நம்பிக்கை. தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வே தமிழக மக்களின் முதன்மைச் சிந்தனையாகவும் இப்போது உள்ளது. அதற்காக - எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு.

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நீங்க‌ள் வைத்திருக்கும் அர‌சிய‌ல் தீர்வு தான் என்ன?

1985 ஆம் ஆண்டில், பூட்டான் தலைநகர் திம்புவில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சமரச முயற்சியின் போது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் சார்பாக - தமிழர் பிரச்சினை தீர்வின் அடிப்படைகளாக "திம்பு கோட்பாடு" முன்வைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் மத்தியத்துவத்தில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு - தமிழர்களின் தன்னாட்சி உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரிக்கின்ற ஒரு நியாயமான அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

மதிமுக தொண்டனின் கேள்வியும் பதிலும்

மதிமுக தொண்டனின் கேள்வியும் பதிலும்

விடுதலைப்புலிகளின் தடையை நீக்க கோரி தமிழக மாணவர்கள் குழு ரெயிலில் நூதன போராட்டம் சென்னையில் நடத்தியது , நெல்லையில் காசி ஆனந்தன் துவக்கி வைத்தார் , சென்னையில் தலைவர் வைகோ அவர்கள் அவர்களை வரவேற்று பேசினார்கள்.

அப்பொழுது சில மாணவர்கள் வைகோ அவர்களுக்கு எதிராகவும் அதிமுக கூட்டணிக்கு எதிராகவும் கோசம் எழுப்பினார்களே?

ஆம் உண்மைதான் .

சரியாக எட்டு மன்னிக்கு வரவேண்டிய குருவாயூர் புகைவண்டி கால தாமதமாக ஒன்பது மணி பக்கத்தில் வந்தது.

எட்டு மணி முதல் வைகோ அவர்கள் கால் கடுக்க காட்திருண்டார்கள் . நாங்கள் அவர்களிடம் கூட கேட்டோம்

" எவ்வளவோ பிரச்சினைகள் தொகுதி பங்கீட்டில் உள்ளது . உங்களுக்காக தாயகத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் காத்திருக்கிறார்கள் நீங்கள் இங்கே வரும் யார் என்று தெரியாத மாணவர்களுக்காக காதிருக்க்ரீர்கலே "

"வருவது யார் என்பது முக்கியம் இல்லை , இன்று எனக்கு வந்த செய்தி (லண்டன் லிருந்து) அங்கே (ஈழத்தில்)இன்னும் சில நாட்களில் அனைத்து தமிழர்களையும் கொல்ல எல்லா வேலைகளையும் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து செய்துவிட்டது , அவர்களுக்காக அவர்களின் ஆதரவிற்காக வரும் எந்த குரலும் , அது யாராக இருந்தாலும் அவர்களை உற்சாக படுத்த வேண்டும் . அதற்காகத்தான் வந்தேன் " என்றார்.


புகை வண்டி வந்தது . மதிமுகவினர் சில நூறு பெரும் வந்திருந்தனர். வெள்ளையனும் வந்திருந்தார்.

மாணவர்கள் கோசம் போட்டனர்.

மதிமுகவினரும் கோசம் போட்டனர்.

உச்சமாய் திரு வைகோ அவர்களே கோசம் போட்டார்.
பின் பேச ஆரம்பித்தார் , மாணவர்களில் பல பேர் கேட்டனர் , வைகோ வந்ததனால் , நிருபர்கள் மாணவர்கள சிலரை தள்ளிவிட்டு அவரை சூழ்ந்து கொண்டனர் . இதில் சில மாணவர்கள் கடுப்பானார்கள். இதைப்பற்றியே சில மாணவர்கள் அதிமுக எதிர்ப்பு கோசம் போட்டார்கள்.

வைகோ வே வெளியே போ ,என்று இரண்டு பேர் கத்தினார்கள் , அவர்கள் அனைவரின் போட்டோ வும் இங்கே போடுகிறோம் அவர்கள் அனைவரும் வைகோ வை ஆரம்பம் முதல் திட்ட முனையும் திமுகவை சேர்ந்தவர்கள்.




இந்தா செய்திதான் வைகோவை எட்டாம் தேதி போராட்டம் செய்ய அழைத்தது

ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்


இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்


விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.

இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.


போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்


எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்

Wednesday, April 1, 2009

ஈழ துரோகி கருணாநிதி அன்றும் இன்றும்.


அன்று


“இன்றைக்கு இலங்கைத் தமிழன் பாதிக்கப்படுகிறான். தமிழ்நாட்டிலே ஓர் அரசும் இல்லை. ஆகவே படை அனுப்பப்படவில்லை. எனவே அந்த அரசு இல்லையே என்கின்ற என்னுடைய ஏக்கத்தை வெளியிடுகிறேனே அல்லாமல் வேறல்ல. அப்படி ஓர் அரசை உருவாக்க வேண்டும். இந்தியாவிலே நாங்கள் 1962 இல் கைவிட்டு விட்ட பிரிவினைவாதத்தை இனி எடுத்து வைத்து அதற்கு ஆதாரம் தேடுகிறேன் என்று யாராவது அவசர அரசியல்வாதிகள் பேச முன் வருவார்களேயானால் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், துன்பத்தால் துயரத்தால் மகனை பறி கொடுத்துவிட்ட பரிதாபத்தால் அழுது கொண்டிருக்கின்ற ஒரு தாய் கண்ணீரும் கம்பலையுமாக ஐயோ பாவி போய்விட்டானே என்று சொன்னால், பாவி என்று சொன்னதற்கு அந்த நேரத்திலே அவனை திட்டுகின்ற பொருளல்ல. அன்பு, பாசம், பற்று இவைகளால் தான், “ஐயோ! பாவி போய்விட்டாயே” என்று இறந்த மகனைப் பற்றிக்கூட சொல்லுவார்கள். அதைப்போலத்தான் நான். ஆதங்கப்படுகிறேன், ஏக்கமடைகிறேன், வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்றால் இராஜராஜசோழன் இருந்தான்; இராஜேந்திரச் சோழன் இருந்தான். அவர்களுக்குக் கீழே தமிழகத்தில் ஒரு அரசு இருந்தது. இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் உடனே படை சென்றது. இலங்கைத் தமிழன் காப்பாற்றப்பட்டான். இன்றைக்கு அங்கே அரசில்லை. ஆனால் ‘டெசோ’ இயக்கமென்ற முரசு இருக்கிறது..... நாம் வடநாட்டை எட்டிப் பார்த்து, வட நாட்டிற்கு நடந்து நடந்து பார்த்து, முறையீடுகளை கொண்டுப்போய்க் கொடுத்து கொடுத்துப் பார்த்து, கிளர்ச்சிகளை நடத்தி நடத்திப் பார்த்து, சிறைச்சாலைகளை நிரப்பி நிரப்பிப் பார்த்து, இங்கே இருக்கின்ற திராவிடர் கழக வீரமணி தலைமையிலே ஆகஸ்டு தினத்தை துக்க தினம் என்றெல்லாம் அறிவித்துப் பார்த்து, மாவீரன் நெடுமாறன் அவர்கள் தியாகப் பயணத்தை நடத்திப் பார்த்து, தி.மு.க.வினர் இரண்டு மூன்று முறை சிறைச்சாலைகளை நிரப்பி, 30,000; 40,000 பேர் சிறைச்சாலைகளிலே அடைக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய தேக்குமர தேகங்களுக்குத் தீயிட்டுக் கொண்டு முடிந்த எல்லாவற்றிற்கும் பிறகு, வடக்கே இருக்கிற டெல்லிப் பட்டணம் - அங்கே அமர்ந்திருக்கின்ற மத்திய அரசு - ராஜீவ் காந்தியினுடைய அரசு; இன்னமும் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்குமேயானால், வேறு வழி என்ன?” (கருணாநிதி ‘டெசோ’ கூட்டங்களில் 1985 இல் பேசியது. தி.மு.க. வெளியீடான ‘தமிழனுக்கு ஒரு நாடு - தமிழ் ஈழ நாடு’ நூல்.)

இன்று
.... “இந்தியா இறையாண்மை மிக்க நாடு. அதைப் போலவே இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டிற்கு எந்த வகையான வேண்டுகோளை விடுக்கலாம். அந்த நாட்டின் மீது எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கலாம்; அரசியல் சட்ட ரீதியாக இருந்துவரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் அறிவார்கள்” - டெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு கருணாநிதி பேட்டி. ‘முரசொலி’ (23.3.2009) நன்றி - புரட்சிப்பெரியார் முழக்கம்

சோனியா போரை நிறுத்த கோரிக்கையாம்.

இவர்களின் ஏமாற்று வேலைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது . கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் இலங்கையில் போர் நின்று விடும் என்பதை எந்த முட்டாளும் நம்ப தயார் இல்லை .

இலங்கையின் இரு அமைச்சர்களே இந்தியாதான் போர் நடத்துகிறது என்று பகிரங்கமாக சொல்கிறார்கள் . இங்கே கருணாநிதி , பிரதமர், சோனியாகாந்தி தமிழனை மென்மேலும் முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.


இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும்: சோனியா காந்தி

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்றும், அவ்வாறு போர் நிறுத்தம் உருவாக இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கூறி இருக்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றில், இலங்கையின் போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களின் துயரங்கள் இந்தியாவை மிகுந்த கவலைக்கு ஆளாக்கி இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் அம்மக்களைப் பாதுகாக்கவும் அவர்கள் நலனைப் பேணவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும், முதற்கட்டமாக அங்கே போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று மேலும் கூறும் சோனியா காந்தி, இந்தியா இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


Tuesday, March 31, 2009

ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்:

சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை :-

இலங்கையில் விரைவில் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணி திரட்டும் குழுவின் கண்டனக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்௦சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய பேசியதாவது: ௦௦௦௦௦ இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை முன்னிறுத்தி தான் ராஜபக்ச வெற்றி பெற்று வருகிறார். இலங்கையில் ஏப்ரல் 25ஆம் தேதி மேல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதற்கு முன்னதாகவே தமிழர்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்து விடுவதாக இலங்கை மக்களுக்கு ராஜபக்ச உறுதி கொடுத்திருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் காரணமாக அந்த போரை அவரால் சொன்ன தேதியில் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் போர் இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் மாகாண தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னதாக தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த அதிபர் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசா பகுதியில் போர் நடந்தது. அமெரிக்க உதவியிடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது, இதுபற்றி சர்வதேச ஊடகங்கள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்று நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது இல்லை. காசா தாக்குதலை பொறுத்தவரை, மொத்தமே 2 ஆயிரம் பேர் தான் கொல்லப்பட்டனர். ஆனால், இலங்கையில் கடந்த சில வாரங்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதைப்பற்றி எந்த ஊடகமும் கவலைப்படவில்லை.

இந்த போர் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அல்ல, உலகளவில் பல வல்லரசு நாடுகள் கூட அதிபர் ராஜபக்சவின் பின்னால் உள்ளன. இந்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என ராஜபக்ச கூறுகிறார். ஆனால், இது உண்மையல்ல. இது ஓர் இனத்தையே அழித்து ஒழிக்கும் போர். இந்த போரில் ஏராளமான இலங்கை மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு எதிரான இந்த போரை ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றிணைந்து நடத்துவதாக ஓர் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பெரும்பாலான இலங்கை மக்களே கூட தமிழர்களுக்கு எதிரான இந்த போரை விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் அதிபர் ராஜபக்சவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

ஆனால், இதை யாரும் தைரியமாக வெளியே சொல்ல முடியாது. அப்படி சொன்னால் கொல்லப்படுவார்கள். எனது உயிருக்கே கூட இன்னமும் அச்சுறுத்தல் உள்ளது. ராஜபக்சவுக்கு முன்பு 5 பேர் இலங்கை அதிபர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பொதுமக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்கள். ராஜபக்ச மட்டும் தான் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். அவரை இலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து, ஓர் அறிக்கை போரே நடத்தி வருகின்றனர். ஆனால், வெறும் அறிக்கைகளால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே கூட நாளை அறிக்கை வெளியிடலாம். ஆனாலும் அந்த அறிக்கையால் இலங்கை பிரச்சினையில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழக அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து, தமிழக மக்களை ஒன்று திரட்டி, வீதியில் இறங்கி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும், ஒருநாள் தமிழகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்திவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த முறை நடந்த சிறீலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறீதுங்க ஜெயசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நடத்தும் ஈழபோரில் இதுவரை ஐயாயிரம் தமிழ் உயிர் போய்விட்டது.

வன்னியில் 5000 பொதுமக்கள் பலி, 15000 க்கும் மேற்பட்டோர் காயம்:

வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இது வரை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.


வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களில்500க்கும் மேற்பட்டோர் உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான உயிரிழப்புகளுக்கு எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களே காரணமாகின்றன எனவும், வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்களையும் குண்டுத் தாக்குதலைகளையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 13 இடைத்தங்கல் முகாம்களில் பல்வேறு அசௌகரியங்கள் நிலவுவதாகவும், அகதிகள்சிறைக் கைதிகள் போன்று அங்கு அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எல்லாவற்றுக்கும் முதலாவதாக யுத்தம் நிறுத்தப்பட்டால், இலங்கையின் அடிப்படை பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கண்டு, அதன் பின்னர் ஐக்கிய இலங்கையை ஒன்றிணைந்து கட்டியெழுப்பலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.


அத்தடன் தமிழ், முஸ்லிம் சிங்கள பேதமின்றி வாழ்வதையே நாங்களும் விரும்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும், உண்மை நிலைகளை அறிவதற்கு ஊடகவியலாளர்கள் அனைத்து பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தித்தாள் தெரிவிக்கின்றது.

ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் போர் சூழலில் இருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் இன்று காலை 14 அகதிகள் தனுஷ்கோடி அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு வந்தனர்.இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் தினமும் 100 கணக்கில் பலியாகி வருகின்றனர்.

இலங்கை ராணுவம் விடுதலை புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இதையடுத்து உயிருக்கு பயந்தநிலையில் இலங்கை தமிழர்கள் சொந்த வீட்டை, இடத்தை, நிலத்தை துறந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வருகின்றனர்.இந்நிலையில் இன்று இலங்கை த‌மிழ‌ர்க‌ள் 14 பே‌ர் தனு‌‌‌ஷ்கோடி அருகே உ‌ள்ள ஊ‌த்த‌ப்ப‌ட்டி கட‌ற்கரை‌க்கு தப்பி வ‌ந்தனர்.அவ‌ர்க‌ளிட‌ம் ம‌த்‌திய, மா‌நில உளவு‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌‌தீ‌விர விசாரணை‌ நட‌த்‌தின‌ர்.

விசாரணைக்கு பி‌ன்பு அவ‌ர்க‌ள் ம‌ண்டப‌ம் அ‌க‌தி‌க‌ள் முகாமு‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.அவர்கள் ம‌ன்னா‌ர் மற்றும் வ‌வு‌னியாவில் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பின்னூட்டம் :
திரை கடல் ஓடி திரவியம்
தேடினான் அன்று தமிழன்.
அலை கடல் மோதி வந்து அகதி ஆகின்றான் இன்று
தமிழன்.எல்லாளன்,சங்கிலியன் ஆண்டமண்எல்லாமே
தமிழ்இரத்தத்தில் மிதக்குது.
எங்களை காத்திட தொப்பிள்கொடிஎங்கள் தாயும் வரவில்லையே.
நாங்கள் என்ன நாடற்றவர்களா நாங்கள் என்ன நாதியற்றவர்களா.
இருந்தோம் நம்பியிருந்தோம் இன்றுவரை நம்புகின்றோம்.
என்றுவரை நம்புவது எனிமேலும் நம்புவதா.
தமிழினமே தமிழினமேதவிக்கின்றோம் தவிக்கின்றோம்.
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழ் ஈழத்தில் பிறந்தது குற்றமா.
ஓயோம் .

Monday, March 30, 2009

தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. கூட்டணி: விஜய டி.ராஜேந்தர் அறிக்கை

பின்னூட்டம் :
ராஜேந்தர் கூட்டணி மற்றும் ஆதரவு தெரிவிப்பதை விட காங்கிரஸ் கட்சிக்கு எதிராய் பிரச்சாரம் செய்யலாம்.

தனித் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது குறித்து இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர்களை யார் கை கழுவினாலும், தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் இவர்களை கை கழுவுவார்கள். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நேற்று வரை கை கட்டி வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள் வெற்றியைத் தட்டி பறிக்க பார்க்கிறார்கள்.

காங்கிரசுக்கும், கருணாநிதிக்கும் ஒரு கோரிக்கை. காலம் கடந்தாவது தேடுங்கள் பிராயச்சித்தம். இனிமேலாவது செய்யுங்கள் இலங்கையில் போர் நிறுத்தம். பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் போதாது, இலங்கை மண்ணில் இருக்கும் எம் தமிழர்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும்.

இவ்வாறு விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ``இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை, இந்திய அரசு உடனடியாக செய்யவேண்டும். தமிழீழ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தனித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த கருத்துகளோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்களிடம் மட்டுமே இலட்சிய தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ளும்.


இந்த தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், நம் நிலைப்பாடு குறித்தும் விவேகத்தோடு முடிவெடுக்கும் பொறுப்பை தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு இந்த பொதுக்குழு முழு மனதோடு வழங்குகிறது'' என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.


வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று வீராப்புப் பேசி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் அவர் சகோதரர்களும் இன்று திரை மறைவில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினக் கொலை யுத்தத்தில் பலகோடிகளை ஏப்பம் விடப்பட்ட நிலையில் இப்போது இலங்கை அரசு பலத்த நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா கொடுத்த நூறு மில்லியன் டொலர் கடன் பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்கள் வாங்கி தமிழினக் கொலை யுத்தத்தில் வீணாக்கி முடிந்த்து விட்ட நிலையில் மேலும் ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசிற்கு நிதி தேவைப் படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தாலிச் சனியாளிடம் இருந்து இலங்கை அரசு பகிரங்க உதவிகளை எதிர் பார்க்க முடியாதுதமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.இலங்கை அரச நிதியைக் காலி செய்து பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு போர் வெறியூட்டி இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை நிர்மூலம் செய்து தமிழர்களை நிர்க்கதியாக்கி உயிரழித்து உடமை அழித்து அகதி முகாம்களில் அடைத்த ராஜபக்சே சகோதரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ய என்று கூறி சர்வதேச நாணயநிதியத்திடம் பிச்சை கேட்கின்றனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்கும் மக்களை மீள் குடியேற்றவும் மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கும் தற்போதுள்ள இடைத்தங்கல் முகாம்களை பராமரிப்பதற்கும் என்று சொல்லி சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்கின்றனர்.சிங்களக் குடியேற்றத்திற்கே பயன்படும்தமிழர் தரப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றத்திற்கே பயன் படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது. இந்தக் கடன் தொகை இராணுவ நடவடிக்கை போல் தோற்றமளிக்கும் எந்தவித செயற்பாட்டிற்கும் பயன்படுத்துவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும்

http://veltharma.blogspot.com/2009/03/blog-post_30.html aa

விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம்ஸ் பேச்சு: சிறிலங்கா அரசு சீற்றம்

பின்னூட்டம் :
உலகம் ஈழத்தை அதன் போராட்டத்தை அங்கீகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியாக சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த உரையாடல் வன்னியில் தங்கியுள்ள மக்கள் தொடர்பானது எனவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதானது அல்ல எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போது அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.


இந்த கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக தகவல்களை நாம் பெற விரும்புகின்றோம். ஆனால், அது குறித்த உறுதியான தகவல் எதுவும் எம்மிடம் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாபனுக்கும் ஜோன் ஹோல்ம்சுக்கும் இடையிலான இந்த கலந்துரையாடலை நோர்வேயே ஏற்படுத்தி கொடுத்திருந்ததாக விமல் வீரசன்ச குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 28, 2009

ஈழத்தில் இந்தியா நடத்தும் போர்.தேவையில்லாமல் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்?

வன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200 இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்கள் மீது ஏனிந்தத் தீராப்பகைமை? -சென்காட்டான்

"என்னைப் போல் உத்தமர் எவரும் இல்லை' என்று பீற்றித் திரிவதில் சி.பி.எம். கட்சியை வெல்ல யாராலும் முடியாது. குறிப்பாக "இலங்கைத் தமிழர் பிரச்சினை' என்று சொல்லப்படும் ஈழத் தமிழர் இனச் சிக்கலில் அன்று முதல் இன்று வரை "நானே சரி, என்னைத் தவிர யாரும் சரியில்லை' என்று மார்தட்டுகிறார்கள் மார்க்சியக் கட்சியினர். தமிழீழத்தில் சிங்கள அரசின் இனக் கொலைப் போர் தீவிரமடைந்து, அதனால் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு எழுச்சி தோன்றி தமிழக மக்களின் அனைத்துப் பிரிவினரும் தெருவில் இறங்கிப் போராடி வரும் நிலையிலும் சிபிஎம்மின் பீற்றலும் பிதற்றலும் ஓய்ந்த பாடில்லை. எனவே, நாம் சிபிஎம்மைக் கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழக சிபிஎம்மின் தமிழ் நாளேடான "தீக்கதிர்' 2009 சனவரி 29 "திசை திருப்பும் கோஷங்கள் தீர்வுக்கு வழியாகாது' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆசிரியர் உரையை இந்தக் குறுக்கு விசாரணைக்கு அடிப்படையாகக் கொள்கிறோம். அன்பான சிபிஎம் தோழர்களே!

1) ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்று தீக்கதிர் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களின் கட்சித் தீர்மானங்கள், அறிக்கைகள், தலைவர்களின் உரைகள், எழுத்துக்கள், எல்லா வற்றிலும் ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்றே குறிப்பிடுகிறீர்கள். ஆனால் அது என்ன பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனையா, வர்க்கப் பிரச்சனையா, மனிதாபிமானப் பிரச்சனையா என்பதை மட்டும் வரையறுத்துச் சொல்ல மறுக்கிறீர்களே, ஏன்?

2) தமிழீழ மக்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் போரின் தன்மை என்ன? சென்ற அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டு தீர் மானங்கள் இயற்றினீர் கள். முதல் தீர்மானமே ‘இனக் கொலைப்போரை நிறுத்த வேண்டும்’ என்பதுதான். இந்தத் தீர்மானத்திலிருந்து உங்கள் கட்சி இன்று வரை விலகிக் கொள்ள வில்லை. அப்படி யானால் மகிந்த இராச பட்சேயின் அரசு நடத்தி வருவது இனப் படுகொலைப் போரே என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

3) அக்டோபர் 14 அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் தீர் மானம் முப்பது ஆண்டு களாகத் தொடர்ந்து நடக்கும் இனப்படு கொலையைக் கண்டிக் கிறது. அதாவது செய வர்த்தனா, பிரேம தாசா, சந்திரிகா, இரணில் விக்கரமசிங்கா, இராச பட்சே ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இனக் கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று பொருள். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மையானால், சந்திரிகா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டுமென்று உங்கள் தலைவர் உமாநாத் அறிக்கை வெளியிட்டதற்காகத் தற்குற்றாய்வு (சுயவிமர்சனம்) செய்து கொள்வீர்களா?

4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்ட நீங்கள் உங்கள் கட்சியின் தீர்மானங் களிலோ, தீக்கதிர் ஆசிரியர் உரைகளிலோ வேறு இடங்களிலோ இனப்படுகொலை என்ற வரையறையைக் குறிப்பிடுவதில்லையே, ஏன்?

5) இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடப்பது இனப்படுகொலைதான் என்றால் அதற்குத் தீர்வு இன விடுதலை தவிர வேறென்ன?

6) இன்றுள்ள “சர்வதேசச் சூழலில் இந்திய அரசு அண்டை நாடுகளுடன் தலையிடுவதற்குச் சில வரம்புகள் உண்டு” என்று, தீக்கதிர் தலையங்கம் எடுத்துக் காட்டுகிறது. அது என்ன ‘சர்வதேசச் சூழல்'? இந்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவாகத் தலையிடுவதை வரம்புக்குட்படுத்தும் சர்வதேசச் சூழல் சிங்கள அரசுக்கு ஆதரவாக வரம்பின்றித் தலையிடுவதை மட்டும் அனுமதிப்பது எப்படி என்பதை விளக்குவீர்களா?

7) 1987இல் கைச்சாத்திடப் பெற்ற இந்திய - இலங்கை ஒப்பந்தம் எனப்படும் இராசீவ் - செய வர்த்தனா உடன்பாட் டின்படி அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தின் மீது இந்தியா நடத்திய ஆக்கிரமிப் பையும் தலையீடாக நீங்கள் கருதவில்லையா?

8) அக்டோபர் 14 அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் இரண் டாவது தீர்மானம் இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்வதை நிறுத்தக் கோருகிறது. இந்தத் தீர்மானத்தை உங்கள் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் உள் நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில், போரின் ஒரு தரப் பாகிய இலங்கை அரசுக்குப் படைக் கருவிகளும் படைப் பயிற்சிகளும் தருவது தலையீடு ஆகாதா?

9) “இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான் என்று குற்றம் சாட்டி, இந்தி அரசே மறைமுகப் போரை நிறுத்து” என்று வேறொரு குரல் கேட்பதாக தீக்கதிர் ஆசிரியர் உரையில் சொல்கிறீர்கள். இது உங்கள் கருத்து அல்லவென்றால் சிங்கள அரசு நடத்தும் இனக் கொலைப் போரில் இந்தியா முனைப்பாகப் பங்கு வகித்து வருவது குறித்து உங்கள் பார்வை என்ன?

10) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்தை ஏற்புடன் எடுத்துக் காட்டுகிறீர்கள். இராணுவத் தீர்வை மறுத்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியதை அதே போல் எடுத்துக் காட்டுகிறீர்கள். அப்படியானால் இந்தச் சிக்கலில் இந்திய அரசு சொல்வதுதான் உங்கள் நிலைப்பாடா?

11) “இறுதித் தீர்வுக்கான வழி இராணுவ நடவடிக்கை அல்ல, அரசியல் தீர்வே என்பதை உணர்ந்து செயலாற்ற இலங்கை அரசு பிரணாப் முகர்ஜியின் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டால் நிலைமை மாறும்” என்று ஒரு மாபெரும் அறிவுரை வழங்கியுள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்பதைப் படித்தவர்களும் பாமரர்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் அன்புகூர்ந்து விண்டுரைப்பீர்களா?

12) இராணுவத் தீர்வு என்பதும், அரசியல் தீர்வு என்பதும் தீர்வு காண்பதற்கான வழிகளைக் குறிக்குமே தவிர என்ன தீர்வு என்பதைக் குறிக்க மாட்டா. நீங்கள் சொல்லும் இறுதித் தீர்வுதான் என்ன? சிக்கல் என்ன என்பதையே வரையறுக்காத நீங்கள் சிக்கலுக்கு எப்படித் தீர்வு சொல்வீர்கள்?

13) இறுதித் தீர்வு விடுதலைதான் எனக் கொண்டால் இராணுவ வழியில் அந்த இலக்கை அடைவது இராணுவத் தீர்வாக இருக்கும். அரசியல் வகையில் அடைவது அரசியல் தீர்வாக இருக்கும். எனவே இராணுவத் தீர்வு, அரசியல் தீர்வு என்பதெல்லாம் வழிமுறை பற்றியதே தவிர அடைய வேண்டிய இலக்கு பற்றியது அல்ல என்பதை மறைத்துக் குழப்பம் செய்வோரின் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொண்டது ஏன்?

14) தமிழீழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்பதைப் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளீர்கள். தமிழீழ மக்கள் விரும்புவது விடுதலையைத்தான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? ஒரு தேசிய இனம் விரும்பும் தீர்வை ஏற்க மறுத்து விரும்பாத தீர்வைத் திணிக்கச் சொல்வது எவ்வகையான சனநாயகம்? எவ்வகையான மார்க்சிய-லெனினியம்?

15) விடுதலைக்கு மாற்றாக நீங்கள் முன்மொழி யும் தீர்வுதான் என்ன? இப்போது திடீரென்று ‘சுயாட்சி உரிமை’ என்று முழக்கம் தருகிறீர்கள். இதன் பொருள் என்ன என்பதை அன்புகூர்ந்து விளக்குவீர்களா? சுயாட்சி என்றால் என்ன? சுயாட்சி உரிமை என்றால் என்ன? சுயாட்சி என்பது அதிகாரப் பரவலாக்கமா? அல்லது அதிகாரப் பகிர்வா?

16) நீங்கள் கேட்பது சுயாட்சி உரிமைதானே தவிர சுயாட்சி அல்ல என்று புரிந்து கொள்ளலாமா? இதுதான் நீங்கள் கூறும் அரசியல் தீர்வென்றால் இதை அடைவதற்கு நீங்கள் முன்மொழியும் வழிமுறை என்ன?

17) சுயாட்சி என்றாலும் சரி, சுயாட்சி உரிமை என்றாலும் சரி, எதற்கும் சிறீலங்கா குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் ஒற்றையாட்சி முறையில் எள்முனையளவும் இடமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

18) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள தமிழ் மக்கள் சுயாட்சி உரிமை பெறுவதற்கான பாதையை வரைந்து காட்டுவீர்களா?

19) அமைதிப் பேச்சு நடைபெற வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறீர்கள். இப்படி விருப்பம் தெரிவிப்பதில் தவறில்லை என்னும் அதேபோது, யாரும் யாரும் எது பற்றிப் பேசுவது என்று தெளிவுபடுத்த வேண்டாமா? சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்பதே உங்கள் குறிக்கோள் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லலாமே? விடுதலைப் புலிகளோடு பேசுவதில் உடன்பாடு இல்லையென் றால் வேறு யாரோடு பேசச் சொல்கிறீர்கள்?

20) விடுதலைப் புலிகள் இருக்கட்டும், அவர்கள் ஆயுதப் போராளிகள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசச் சொல்லலாம்தானே? இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடனடியாக அமைதி ஏற்படுத்துவது குறித்தும், இறுதியாக அரசியல் தீர்வு காண்பது குறித்தும் பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?

21) தமிழீழ மக்களின் சார்பாகப் பேச புலிகளையும் ஏற்க மாட்டீர்கள்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏற்க மாட்டீர்கள் என்றால் வேறு யாரைத்தான் ஏற்றுக் கொள்வீர்கள்? அதிபர் இராச பட்சேயும் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவும் பேச்சு நடத்த வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா? அல்லது கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி வகையறாக்களுடன் பேச்சு நடத்தச் சொல்கிறீர்களா? இவர்களோடு இராசபட்சே பேசிக் கொண்டுதானே இருக்கிறார்? அவ்வளவு சிரமம் ஏன், இராசபட்சே தன் இளவல்கள் ஃபசில், கோத்தபயா ஆகியோருடன் பேச்சு நடத்தி சிக்கலைத் தீர்க்கலாம்தானே?

22) விடுதலைப் புலிகளையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ ஏற்றுக் கொள்ளாமலே பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று வாயடிப்பதன் உண்மைப் பொருள் உருப்படியான எவருடனும் பேசாதே என்பதும், அடித்து நொறுக்கி முடிவு கட்டு என்பதும்தானே? இவ்வாறு இராசபட்சே எதை முன்மொழிகிறாரோ அதையே நீங்கள் வழி மொழிகிறீர்கள் என்பது தவிர வேறென்ன?

23) அல்ல அல்ல, விடுதலைப் புலிகளோடுதான் பேசச் சொல்கிறோம் என்று கூறுவீர்களானால், பேசுவதற்கு வசதியாக புலிகள் மீதான தடையை நீக்குமாறு கேட்பீர்களா?

24) “ஆயுதம் தாங்கிய போராட்டத்தை வழிமுறையாகக் கைக்கொண்டுள்ள விடுதலைப் புலிகளையும் இராணுவத் தாக்குதலை மேற் கொண்டுள்ள இலங்கை அரசையும், அவற்றின் ஆயுத மோதலுக்கு இடையே அகப்பட்டுத் திண்டாடும் அப்பாவித் தமிழ் மக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்” என்று தீக்கதிர் தலையங்கம் சொல்கிறது. அதாவது புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று நேராகச் சொல்லாமல், இராணுவப் படையினரை குறுக்கே நிறுத்தி மறைமுகமாகச் சொல்கிறீர்கள். இதிலும் இந்திய சிங்கள அரசுகளின் குரலையே எதிரொலிக்கிறீர்கள் என்பது புரிகிறதா?

25) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, விடுதலைப் புலிகளின் வரலாறு ஆகிய வற்றின் அடிப்படையில் புலிகளை மக்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்ட உங்களால் முடியுமா?

26) “இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் தற்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் கோஷங்களும் தடம்புரண்டு திசைமாறிச் செல்வது” குறித்து தீக்கதிர் தலையங்கத்தில் கவலைப்படுகிறீர்கள். தடம் எது? திசை எது?

27) போரை உடனே நிறுத்தும்படி கோருவதும், இந்திய அரசைக் குற்றம் சாட்டுவதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இவற்றை ‘திசை திருப்பும் கோஷங்கள்’ என்று சாடுகிறீர்கள். திசை திருப்பாத முழக்கங்கள் எவை என்று நீங்களே சொல்வீர்களா?

28) இது கடைசிக் கேள்வி. இறுதியாகப் பார்க்குமிடத்து ஈழத் தமிழர் போராட்டம் குறித்து உங்கள் நிலைப்பாடும் இராசபட்சே - மன்மோகன் சிங் நிலைப்பாடும் ஒன்றே எனத் தெரிகிறதல்லவா? உங்களின் இந்தத் தமிழர் விரோதப் போக்கினைக் கைவிட்டு என்றாவது திருந்துவீர்களா?

ஈழத் தமிழர்களின் மீது ஏனிந்தத் தீராப் பகைமை?

காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகோதரத்தமிழன்

போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக
அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்...
ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர்ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர்.

இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை
தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக இனவெறி சிஙள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும் நிதியங்களை கொட்டிகொடுத்தும் தொழினுட்பங்களையும்
ஆளணிகளையும் கோழைத்தனமாக மறைத்துக் கொடுத்தும் வாக்களித்த தமிழர்களின் கழுத்தை அறுத்து ஈழத்து சொந்தங்களை இனப்படுகொலை செய்யச்சொல்லி
ஆனந்தப்படுவதும் ஆற்றாது அழுது புரண்டு போரை நிறுத்தச்சொல்லி மன்றாட்டம் செய்தால்.. ஓடோடிச்சென்று சிங்கவளனை பாராட்டுவதையும் .we are not
concerned about LTTE... I am not fond of LTTE.. என்று ஏகடியம் பேசுவதையும் பார்த்து நாம் நெஞ்சு கொதித்து நின்ற நேரம் ஏதோ துளி ஆறுதல்.

உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் முலாயம் மற்றும் லாலு முறையே தந்த சம்மட்டியடிக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸுக்கு ஒரு மரண அடியே
தந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

இத்தாலிக்காரி சோனியாவின் தான்தோன்றித்தனத்துக்கு மக்களும் தம் பங்குக்கு நெற்றியடி தர தயாராகி வருகிறார்கள். இதுவே இன்றைய நாட்டு நடப்பு. இவ்வேளையில் இன எதிரி ஜெயலலிதாவோடு கூட்டா? என கேட்கும் சகோதரர்களுக்கு எனது தாழ்மையான பதில் இதுதான். இது காலத்துக்கு தேவையான ராஜரீக நகர்வு அவ்வளவே.

இனப்பகைவன் பிரேமதாஸாவோடு கைகோர்த்து சதிகார இந்திய துரோகப்படையை புலிகள் ஈழத்திலிருந்து வெளியேற்றியதைப்போல முதலில் கொலை வெறி காங்கிரஸையும் அதன் கைக்கூலிகளையும் தமிழ் மண்ணைவிட்டு வெளியேற்றுவோம். பிறகு மற்றதை பார்க்கலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் அரசியல் வானில் சுழற்கோளாய் வலம் வரும் திருமாவோ கருணாநிதியின் திருதராஷ்டிர ஆலிஙகனத்தில் சிக்கித் தவிக்கிறார். அந்த
சக்கர வியூகத்திலிருந்து வெளியேற தா.பாண்டியன் மற்றும் வை.கோபாலசாமி போன்ற தலைவர்கள் தான் உதவ வேண்டும்

திருமா அவர்களே ஒரு பாரத ரத்னா விருதுக்காக தமிழினப் படுகொலைக்கு துணை போகும் கருணாநிதி தான் வடிக்கும் முதலைக் கண்ணீரை தமிழ் மக்கள் நம்ப
வேண்டும் என்பதற்காக உங்களை அருகில் வைத்துக்கொள்ள துடிக்கிறார். தயவு செய்து அந்த துரோகத்துக்கு துணை போய் வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம்
என்று சகோதரத் தமிழன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, March 26, 2009

தொடரும் திருமாவின் துரோக செயல்கள்

திருமாவின் இந்த அறிக்கை கருணாநிதியின் அறிக்கைக்கு சற்றும் சளைத்ததல்ல.
ஏன் திருமா துரோக கும்பலோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு இப்படிப்பட்ட துரோகத்தை செய்கிறார் என்று தெரியவில்லை.

அவரது அறிக்கையை இங்கே படியுங்கள் .
அதற்கு முன் அதற்கான பின்நூட்டக்களை படியுங்கள்


பதிவு செய்தவர்: திருமா பதிவு செய்தது: 26 Mar 2009 05:47 pm அன்னை சோனியாஜி வாழ்ககலைஞர் வாழ்கராகுல் வாழ்கபிரியங்கா வாழ்ககனிமொழி வாழ்க நான் வாழ்க

பதிவு செய்தவர்: எஸ் ஜெ ஆர் பதிவு செய்தது: 26 Mar 2009 05:43 pm முன்பெல்லாம் எதிரியாக இருந்த சோன்னியா! இப்போது தோழமையாக மாறிவிட்டார். என்னகொடுமையடா சாமி! அடிக்கிற இடத்தில பல்டி அடிக்கிறாங்கப்பா.தமிழ் வெல்லட்டும்.தமிழ் வாழட்டும்.

பதிவு செய்தவர்: ரஜீவன் பதிவு செய்தது: 26 Mar 2009 05:38 pm திருமா நீங்கள் ஓர் நல்ல நடிகர் என்பதை அடிகடி நிருபிக்கிறீர்கள், கருணாவுக்கு பிறகு எங்கட மக்களுக்கு துரோகம் செய்வதில் நீங்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிருபிக்கிரீர்.

பதிவு செய்தவர்: மாரி முத்து பதிவு செய்தது: 26 Mar 2009 05:34 pm திருமாவளன் தனித்து போட்டிஈடு வேண்டும்


பதிவு செய்தவர்: அறிக்கை பதிவு செய்தது: 26 Mar 2009 05:27 pm டேய்!!! இன்னும் எத்தனை naalda என்னை vida poreenga...valikkudhudaa..aludhuduven!!!

பதிவு செய்தவர்: obama பதிவு செய்தது: 26 Mar 2009 05:26 pm thiruma is a stupid mokkai

பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 26 Mar 2009 05:24 pm ஒஷியட்டும் தமிழ் துரோகிகளின் கூட்டணி.... அழியட்டும் தமிழின விரோத அரசியல்.


போர் நிறுத்தம்-சோனியாவுக்கு திருமா வேண்டுகோள்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடு்த்துள்ளார்.இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முல்லைத்தீவில் நடக்கும் இனப்படுகொலை மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 9,985 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐநாவின் மனித உரிமை அமைப்பின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.இது தொடர்பாக அண்மையில் டெல்லிக்கு வந்திருந்த ஐநா மனித உரிமை அமைப்பின் செயலாளர் நவநீதம் பிள்ளை இந்த அதிர்ச்சியான உண்மையை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து இந்திய அரசு அமைதி காப்பதும் வேடிக்கை பார்ப்பதும் மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலையடைய செய்துள்ளது.சர்வதேச சமூகத்தையே உலுக்கியிருக்கிற இலங்கை இனவெறியர்கள் நடத்தும் மனிதப் பேரவலம் தொடர்பாக இந்திய அரசு கருத்து ஏதும் கூறாமல், தடுப்பு நட வடிக்கை மேற் கொள்ளாமல் இலங்கை ராணுவத்தை ஊக்கப் படுத்தும் வகையில் நடந்து கொள்வது சகித்துக் கொள்ளவே முடியாததாக உள்ளது.தமிழக மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிற இந்த இனப்படுகொலை பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்திய அரசோ, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியோ இதில் விரைந்து தலையிட்டு போர் நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது என கூறியுள்ளார் திருமாவளவன்.

Tuesday, March 24, 2009

விடுதலை சிறுத்தைகளின் துரோகம் - சாயம் வெளுக்கிறது.

அதிமுகவுடன் சேருவது ஈழத் தமிழர்களுக்கு விரோதமானது - திருமா.
பின்னூட்டம் : அதற்காத்தான் காங்கிரஸ் க்கு முட்டு கொடுக்க்ரீர்களா?

பதிவு செய்தவர்: அருள் குமார் பதிவு செய்தது: 25 Mar 2009 10:25 am சபாஷ் திருமா அவர்களே ..ஒரு நாள் நாடகம் ஜெ இருந்தது . நான்கு நாள் நாடகமா நீங்கள் இருந்தது .. பிரபாகரனை கைது செய்ய சொல்லிய ஜெ தமிழ் இனத்திற்கு எதிராய் பேசிய ஜெ சகோதர உதத்த்தை பற்றி பேசவில்லை . இலங்கை தமிழர்களுக்காக நிறைய செய்து இருப்பதாக தங்களால் மொழியப்படும் தி .மு .க தான் சொல்லியது . பிரபாகரனை போராளி என்று சொல்லும் திருமா அவர்களே ...அதே பிரபாகரனை சர்வாதிகாரி என்று எந்த நேரத்தில் சொல்ல கூடாதோ அந்த நேரத்தில் சொல்லிய உங்களின் தானே தலைவர் யாரை திருப்தி படுத்த சொல்லினார் என்பதை நீங்கள் அறிவிங்கள்


பதிவு செய்தவர்: பற்று பதிவு செய்தது: 25 Mar 2009 10:18 am இந்த எடிடோரின் பற்று என்னவென்று சொல்வதுஈழத் தமிழருக்காக எழுதும் போது கருணா அல்லது திருமா சேர்ந்து வந்தால் போதும் உடனே அதனை நீக்கி தனது பற்றை வெளிப்படுத்துகிறார்.காங்கிரஸ் வாழ்க, கருணா வாழ்க, அழகிரி வாழ்கஇப்போது இந்தக் கருத்தின் கருது புரியும் வரை சிறிது நேரம் இருக்கும்!!


பதிவு செய்தவர்: ரகடி பதிவு செய்தது: 25 Mar 2009 10:07 am இதெல்லாம் ஒரு கட்சி, இதுக்கு ரெண்டு சீட், ஒரு தலைவர், தூ..


பதிவு செய்தவர்: muthudevar பதிவு செய்தது: 25 Mar 2009 10:06 am துரோகி திருமாதுரோகி திருமாதுரோகி திருமாதுரோகி திருமா


பதிவு செய்தவர்: பொன் சேகர் பதிவு செய்தது: 25 Mar 2009 09:59 am நான் சொன்னது தப்பா? ஆம் இல்லைன்னு ஒன்னு சொல்லுங்கள் வாசகர்களே!


பதிவு செய்தவர்: vasu பதிவு செய்தது: 25 Mar 2009 09:59 am foolish thiruma, better to sucide instead of living in the world


பதிவு செய்தவர்: பிரபா புலம்பல்கள் பதிவு செய்தது: 25 Mar 2009 09:58 am அதிமுகவுடன் சேருவது ஈழத் தமிழர்களுக்கு விரோதமானது, எனவே நான் காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறேன். - திருமா.சூப்பர் தமாசு தான்!!!


பதிவு செய்தவர்: சாமி பதிவு செய்தது: 25 Mar 2009 09:52 am சீமான் குளத்தூர் மணி போன்றவர்களை உள்ளே போடும் போது திருமாவை மட்டும் காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி வெளியே வைத்திருந்த கருணாநிதிக்கு திருமா செய்யும் கைமாறு இது.அரசியலில் இது சாதாரணமப்பா!

திருமா வின் செய்தி இது :-
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. திமுக கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் பாமக இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பாமக குறித்தும் பேசப்பட்டது.திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.பின்னர் வெளியில் வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக அதிமுக கூட்டணிக்குப் போவதை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார்.அவர் கூறுகையில்,

இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிராக பேசியவர் ஜெயலலிதா.ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒருநாள் கூத்தை நடத்தினார். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் ஒப்பிட முடியாத கட்சி. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க. நேர் எதிரான கட்சி.அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு, எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பா.ம.க.வுக்கு அழைப்பு விடுத்தோம். அந்த தீர்மானத்தையும் விலக்கிக்கொண்டு, நேற்று இரவு நீண்ட நேரம் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினேன். அப்போது, தோழமை உரிமையுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன்.ஒரே அணியில் இருந்தால் சமூக எழுச்சியை வளர்க்க முடியும் என்று அப்போது நான் கேட்டுக்கொண்டேன். எங்கள் கோரிக்கையை புறம்தள்ளாமல், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி கூறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.சூசகமாக என்னை அதிமுகவுக்கு அழைத்தார்..தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. எங்களை அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு டாக்டர் ராமதாஸ் அழைக்கவில்லை. பா.ம.க.வுடன் வர சூசகமாக அவர் அழைத்தார். நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். அணிமாறுவது குறித்து எந்த ஊசலாட்டமும் எங்களிடம் இல்லை.சிதம்பரம் தொகுதியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் தனித்தனி அணியில் நின்று போட்டியிட நேரிட்டால், எங்களுக்குள் போட்டிதான் இருக்குமே தவிர, மோதல் இருக்காது.3 சீட் கேட்டுள்ளோம்...பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலான உறவு கொண்டதை முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்தார். தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவ கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதை முதல்-அமைச்சர் கருணாநிதி அப்போது சுட்டிக்காட்டினார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு மடலாக கருதுகிறேன்.கூட்டணி உறவை மனப்பூர்வமாக ஏற்று, மகிழ்ச்சியோடு தேர்தலை சந்திக்கிறோம். ஈழத்தமிழர் ஆதரவுக்காக எங்கள் குரல் வலுவாக ஒலிக்கும்.

இலங்கை தமிழர்கள் வாழ்விற்காக தி.மு.க. எவ்வளவோ செய்துள்ளது. அதற்காக எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துள்ளது.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, பிரதமரை சென்று சந்தித்தது, மனிதச்சங்கிலி நடத்தியது போன்றவற்றில் முதல்-அமைச்சர் கருணாநிதி முன் நின்றார். இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு.க.வுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் திருமாவலவான்

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.