ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 31, 2009

ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்:

சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை :-

இலங்கையில் விரைவில் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணி திரட்டும் குழுவின் கண்டனக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்௦சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய பேசியதாவது: ௦௦௦௦௦ இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை முன்னிறுத்தி தான் ராஜபக்ச வெற்றி பெற்று வருகிறார். இலங்கையில் ஏப்ரல் 25ஆம் தேதி மேல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதற்கு முன்னதாகவே தமிழர்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்து விடுவதாக இலங்கை மக்களுக்கு ராஜபக்ச உறுதி கொடுத்திருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் காரணமாக அந்த போரை அவரால் சொன்ன தேதியில் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் போர் இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் மாகாண தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னதாக தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த அதிபர் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசா பகுதியில் போர் நடந்தது. அமெரிக்க உதவியிடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது, இதுபற்றி சர்வதேச ஊடகங்கள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்று நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது இல்லை. காசா தாக்குதலை பொறுத்தவரை, மொத்தமே 2 ஆயிரம் பேர் தான் கொல்லப்பட்டனர். ஆனால், இலங்கையில் கடந்த சில வாரங்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதைப்பற்றி எந்த ஊடகமும் கவலைப்படவில்லை.

இந்த போர் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அல்ல, உலகளவில் பல வல்லரசு நாடுகள் கூட அதிபர் ராஜபக்சவின் பின்னால் உள்ளன. இந்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என ராஜபக்ச கூறுகிறார். ஆனால், இது உண்மையல்ல. இது ஓர் இனத்தையே அழித்து ஒழிக்கும் போர். இந்த போரில் ஏராளமான இலங்கை மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு எதிரான இந்த போரை ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றிணைந்து நடத்துவதாக ஓர் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பெரும்பாலான இலங்கை மக்களே கூட தமிழர்களுக்கு எதிரான இந்த போரை விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் அதிபர் ராஜபக்சவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

ஆனால், இதை யாரும் தைரியமாக வெளியே சொல்ல முடியாது. அப்படி சொன்னால் கொல்லப்படுவார்கள். எனது உயிருக்கே கூட இன்னமும் அச்சுறுத்தல் உள்ளது. ராஜபக்சவுக்கு முன்பு 5 பேர் இலங்கை அதிபர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பொதுமக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்கள். ராஜபக்ச மட்டும் தான் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். அவரை இலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து, ஓர் அறிக்கை போரே நடத்தி வருகின்றனர். ஆனால், வெறும் அறிக்கைகளால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே கூட நாளை அறிக்கை வெளியிடலாம். ஆனாலும் அந்த அறிக்கையால் இலங்கை பிரச்சினையில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழக அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து, தமிழக மக்களை ஒன்று திரட்டி, வீதியில் இறங்கி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும், ஒருநாள் தமிழகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்திவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த முறை நடந்த சிறீலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறீதுங்க ஜெயசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.