ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, March 14, 2009

இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர்.

இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலை புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கை படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

விசுவமடு, யாழ்ப்பாணம், கிளாலி உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் இராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலை புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர். புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், விசுவமடுவில் படயினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வன்னி பகுதியில் இலங்கை இராணுவம் நேற்று நடத்திய தாக்குதல்களில் 57 தமிழர்கள் பலியானார்கள்.

பின்னூட்டம் :-
ஈழம் மலர்ந்தே தீரும் . தேசப்போராளிகளை காலமும் உண்மையும் காக்கும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.