ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Thursday, March 5, 2009

பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார் பாடியிருந்தால் எப்படியிருக்கும்:வைகோ


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் பாரதி செல்லம்மாள் உயில் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.


இவ்விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

‘’காலத்தால் அழியாத பெரும்புகழை பெற்றுள்ள பாரதியார் மண்டபத்தில் அவரது மனைவி செல்லம்மாள் எழுதிய உயிலை பாரதி செல்லம்மாள் உயில் என்ற தலைப்பில் எழுத்தாளர் திவான் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்.

பாரதியார் மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும்போது நாடு சுதந்திரம் பெறவில்லை. காந்தியடிகள் இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழில் அனுப்பிய வாழ்த்து செய்தி மண்டபத்தில் பொறிக்கப்பட்டுருக்கிறது. பாரதியாரின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு மற்றும் அவரது கட்டுரைகள் உயிர் தன்மை வாய்ந்தது. அவை காலத்தை கடந்தவை.

இலங்கையில் கூட்டம் கூட்டமாக தமிழ் மக்கள், குழந்தைகள் கொல்லப்படுவதும், சகோதரிகள் நாசமாக்கப்படுவதும் நானிலத்தோருக்கும் மனசாட்சி செத்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பிரபாகரனை பற்றியும், விடுதலை புலிகளை பற்றியும் பாரதியார் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.

பாரதியார் காட்டிய பாதையில் சாதி சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால் பாரதியின் கனவு நனவாகும்’’ என்று தெரிவித்தார்।



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.