ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Monday, March 2, 2009

வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை

திருநெல்வேலி: தூத்துக்குடியில், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிக் கைதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெல்லை கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது.
தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வைகோ தலைமையில் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்பினர் சேர்ந்து கருப்புக் கொடியையும், துடைப்பங்களையும் காட்டி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 195 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். வைகோ உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில் இன்று நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் மாஜிஸ்திரேட் ஹேமந்த் குமார் முன்பு வைகோவுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் கோரிக்கைக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிபதி ஹேமந்த் குமார் வைகோவை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.