ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Monday, March 9, 2009

போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100 நாடுகள் வலியுறுத்தும்: ஜெ. உண்ணாவிரத மேடையில் வைகோ ஆவேசம்

இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தினால் உலகில் 100 நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும். ஆனால் இந்தியாவே போர் நிறுத்தத்தை வலியுறுத்தாதபோது மற்ற நாடுகள் எப்படி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார்.

தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர்.

பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வரும் என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நிமிடமும் கொத்துயிரும் குலையுயிருமாக ஆகிக்கொண்டிருக்கும் நம் தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது. எங்களுக்கு நம்பிக்கை வருகிறது’’ என்று தெரிவித்தார்.

‘’ இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தினால் உலகில் 100 நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்.

ஆனால் இந்தியாவே போர் நிறுத்தத்தை வலியுறுத்தாதபோது மற்ற நாடுகள் எப்படி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.

‘’வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது அவரிடம் இலங்கை அரசு பணம் கொடுத்தால் ஆயுத உதவி அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பணம் கொடுத்தாலும் ஆயுதம் கொடுக்க மாட்டேன் என்றார். அதன்படியே நடந்து கொண்டார்.

ஆனால் இந்த காங்கிரஸ் அரசு ஆயுத உதவி அளிக்கிறது. 5 ராடார்கள் கொடுத்திருக்கிறது.

போரை நிறுத்துங்கள் என்று உலக நாடுகள் எல்லாம் சொல்கிறது.

இந்திய அரசு ஏன் சொல்லவில்லை. இந்திய அரசுதானே ஈழத்தமிழர்கள் மீது போரை நடத்துகிறது. பின்பு எப்படி போரை நிறுத்தச்சொல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.
’’ஈழத்தமிழர் பிரச்சனைக்கு யார் காரணம்? இந்திய அரசுதான் காரணம். இந்தியாவில் ஆட்சி நடத்தும் கட்சி காரணம். அக்கட்சியிலே கூட்டணி வைத்திருப்போர் காரணம்.
ஈழத்தமிழர் படுகொலைக்கான கூட்டுச்சதியில் கருணாநிதிக்குதான் முதலிடம்’’ என்று தெரிவித்தார்.

வினையை விதைக்காதே-வினையை அறுக்காதே: ராஜபக்சவுக்கு வைகோ எச்சரிக்கை

பின்னர் அவர் பேசியபோது, ‘’ராஜபக்சே! எந்த தைரியத்தில் நீ எம்மக்களை கொன்று குவிக்கிறாய். இந்தியா உதவி செய்கிறது என்பதற்காக, இந்தியா பக்க பலமாக இருக்கிறது என்பதற்காக நீ மமதையில் ஆடுகிறாய்.


உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். வினையை விதைக்காதே! வினையை அறுக்காதே!!’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.