ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Monday, March 2, 2009

பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்- சிறையிலிருந்து பிரசாரம் தொடங்குகிறேன்: வைகோ

நெல்லை: கருணாநிதியின் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். தூக்குத் தண்டனைக்கே அஞ்ச மாட்டேன். பாளையங்கோட்டை சிறை வாசலிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


தூத்துக்குடியில் புதிய அனல்மின்நிலையத்துக்கு கடந்த 28-ம் தேதி மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்பு கொடி காட்டியும், துடைப்பங்களைக் காட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


பின்னர் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்தையும் சிலர் எரித்தனர். இதையடுத்து வைகோ உள்ளிட்ட 159 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜவஹர் தலைமையிலான நிர்வாகிகள் தூத்துக்குடி 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர்.

இதை ஏற்ற நீதிபதி ஹேமந்த் குமார் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை வைகோ உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறை வாசலில் மதிமுகவினர் வைகோ உள்ளிட்டோரை பட்டாசுகள் வெடித்து வரவேற்றனர்.

பின்னர் சிறை வாசலில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்,

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு, இந்த நிமிடம் வரை கேட்கவில்லை என்று இலங்கை வெளியுறவு செயலாளர் பலிதா கோகலே அறிவித்து இருக்கிறார். ஆனால் தூத்துக்குடிக்கு வந்த பிரணாப் முகர்ஜி, இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டிருப்பதாக பேசினார். இது தமிழர்களை ஏமாற்றும் வேலை.

தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி எத்தனை நாட்கள் ஆகிஉள்ளது? இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது உண்டா? மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றபோது கூட போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ராஜபக்சேவிடம் கேட்கவில்லை. மத்திய அரசு பிரபாகரனை ஒழிக்க முடிவு செய்து விட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கூட்டாக செய்து சதி செய்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். விடுதலைப்புலிகள் தமிழர்களை அழிக்கிறார்கள் என்பது பொய் பிரசாரம்.

என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டு உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த படத்தை வெளியிட்டு உள்ளனர். அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

மீண்டும் வன்னிக்குப் போவேன்...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னி பகுதிக்கு செல்வேன். விடுதலைப்புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தை பாளையங்கோட்டை ஜெயில் வாசலில் இருந்து தொடங்குகிறேன் என்றார் வைகோ.

பின்னர் செய்தியாளர்கள், தேசத்தலைவர்களின் படத்தை எரித்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று முதல் -அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், தூக்குத்தண்டனைக்கே பயப்படமாட்டேன் என்று ஆவேசமாக பதிலளித்தார்.



Source :

http://thatstamil.oneindia.in/news/2009/03/03/tn-i-dont-bother-about-karunanidhis-warning-vaiko.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.