ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 31, 2009

ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்:

சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை :-

இலங்கையில் விரைவில் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணி திரட்டும் குழுவின் கண்டனக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்௦சியின் பொதுச் செயலாளர் சிறீதுங்க ஜெயசூரிய பேசியதாவது: ௦௦௦௦௦ இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை முன்னிறுத்தி தான் ராஜபக்ச வெற்றி பெற்று வருகிறார். இலங்கையில் ஏப்ரல் 25ஆம் தேதி மேல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதற்கு முன்னதாகவே தமிழர்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்து விடுவதாக இலங்கை மக்களுக்கு ராஜபக்ச உறுதி கொடுத்திருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் காரணமாக அந்த போரை அவரால் சொன்ன தேதியில் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் போர் இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் மாகாண தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னதாக தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த அதிபர் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசா பகுதியில் போர் நடந்தது. அமெரிக்க உதவியிடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது, இதுபற்றி சர்வதேச ஊடகங்கள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்று நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது இல்லை. காசா தாக்குதலை பொறுத்தவரை, மொத்தமே 2 ஆயிரம் பேர் தான் கொல்லப்பட்டனர். ஆனால், இலங்கையில் கடந்த சில வாரங்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதைப்பற்றி எந்த ஊடகமும் கவலைப்படவில்லை.

இந்த போர் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அல்ல, உலகளவில் பல வல்லரசு நாடுகள் கூட அதிபர் ராஜபக்சவின் பின்னால் உள்ளன. இந்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என ராஜபக்ச கூறுகிறார். ஆனால், இது உண்மையல்ல. இது ஓர் இனத்தையே அழித்து ஒழிக்கும் போர். இந்த போரில் ஏராளமான இலங்கை மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு எதிரான இந்த போரை ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றிணைந்து நடத்துவதாக ஓர் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பெரும்பாலான இலங்கை மக்களே கூட தமிழர்களுக்கு எதிரான இந்த போரை விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் அதிபர் ராஜபக்சவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

ஆனால், இதை யாரும் தைரியமாக வெளியே சொல்ல முடியாது. அப்படி சொன்னால் கொல்லப்படுவார்கள். எனது உயிருக்கே கூட இன்னமும் அச்சுறுத்தல் உள்ளது. ராஜபக்சவுக்கு முன்பு 5 பேர் இலங்கை அதிபர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பொதுமக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்கள். ராஜபக்ச மட்டும் தான் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். அவரை இலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து, ஓர் அறிக்கை போரே நடத்தி வருகின்றனர். ஆனால், வெறும் அறிக்கைகளால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே கூட நாளை அறிக்கை வெளியிடலாம். ஆனாலும் அந்த அறிக்கையால் இலங்கை பிரச்சினையில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழக அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து, தமிழக மக்களை ஒன்று திரட்டி, வீதியில் இறங்கி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும், ஒருநாள் தமிழகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்திவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த முறை நடந்த சிறீலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறீதுங்க ஜெயசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நடத்தும் ஈழபோரில் இதுவரை ஐயாயிரம் தமிழ் உயிர் போய்விட்டது.

வன்னியில் 5000 பொதுமக்கள் பலி, 15000 க்கும் மேற்பட்டோர் காயம்:

வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இது வரை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.


வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களில்500க்கும் மேற்பட்டோர் உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான உயிரிழப்புகளுக்கு எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களே காரணமாகின்றன எனவும், வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்களையும் குண்டுத் தாக்குதலைகளையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 13 இடைத்தங்கல் முகாம்களில் பல்வேறு அசௌகரியங்கள் நிலவுவதாகவும், அகதிகள்சிறைக் கைதிகள் போன்று அங்கு அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எல்லாவற்றுக்கும் முதலாவதாக யுத்தம் நிறுத்தப்பட்டால், இலங்கையின் அடிப்படை பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கண்டு, அதன் பின்னர் ஐக்கிய இலங்கையை ஒன்றிணைந்து கட்டியெழுப்பலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.


அத்தடன் தமிழ், முஸ்லிம் சிங்கள பேதமின்றி வாழ்வதையே நாங்களும் விரும்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும், உண்மை நிலைகளை அறிவதற்கு ஊடகவியலாளர்கள் அனைத்து பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தித்தாள் தெரிவிக்கின்றது.

ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் போர் சூழலில் இருந்து உயிர் பிழைக்கும் நோக்கத்தில் இன்று காலை 14 அகதிகள் தனுஷ்கோடி அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு வந்தனர்.இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் தினமும் 100 கணக்கில் பலியாகி வருகின்றனர்.

இலங்கை ராணுவம் விடுதலை புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளிலும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இதையடுத்து உயிருக்கு பயந்தநிலையில் இலங்கை தமிழர்கள் சொந்த வீட்டை, இடத்தை, நிலத்தை துறந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வருகின்றனர்.இந்நிலையில் இன்று இலங்கை த‌மிழ‌ர்க‌ள் 14 பே‌ர் தனு‌‌‌ஷ்கோடி அருகே உ‌ள்ள ஊ‌த்த‌ப்ப‌ட்டி கட‌ற்கரை‌க்கு தப்பி வ‌ந்தனர்.அவ‌ர்க‌ளிட‌ம் ம‌த்‌திய, மா‌நில உளவு‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌‌தீ‌விர விசாரணை‌ நட‌த்‌தின‌ர்.

விசாரணைக்கு பி‌ன்பு அவ‌ர்க‌ள் ம‌ண்டப‌ம் அ‌க‌தி‌க‌ள் முகாமு‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.அவர்கள் ம‌ன்னா‌ர் மற்றும் வ‌வு‌னியாவில் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பின்னூட்டம் :
திரை கடல் ஓடி திரவியம்
தேடினான் அன்று தமிழன்.
அலை கடல் மோதி வந்து அகதி ஆகின்றான் இன்று
தமிழன்.எல்லாளன்,சங்கிலியன் ஆண்டமண்எல்லாமே
தமிழ்இரத்தத்தில் மிதக்குது.
எங்களை காத்திட தொப்பிள்கொடிஎங்கள் தாயும் வரவில்லையே.
நாங்கள் என்ன நாடற்றவர்களா நாங்கள் என்ன நாதியற்றவர்களா.
இருந்தோம் நம்பியிருந்தோம் இன்றுவரை நம்புகின்றோம்.
என்றுவரை நம்புவது எனிமேலும் நம்புவதா.
தமிழினமே தமிழினமேதவிக்கின்றோம் தவிக்கின்றோம்.
தமிழனாய் பிறந்தது குற்றமா
தமிழ் ஈழத்தில் பிறந்தது குற்றமா.
ஓயோம் .

Monday, March 30, 2009

தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. கூட்டணி: விஜய டி.ராஜேந்தர் அறிக்கை

பின்னூட்டம் :
ராஜேந்தர் கூட்டணி மற்றும் ஆதரவு தெரிவிப்பதை விட காங்கிரஸ் கட்சிக்கு எதிராய் பிரச்சாரம் செய்யலாம்.

தனித் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்று விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது குறித்து இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர்களை யார் கை கழுவினாலும், தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் இவர்களை கை கழுவுவார்கள். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாக, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நேற்று வரை கை கட்டி வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள் வெற்றியைத் தட்டி பறிக்க பார்க்கிறார்கள்.

காங்கிரசுக்கும், கருணாநிதிக்கும் ஒரு கோரிக்கை. காலம் கடந்தாவது தேடுங்கள் பிராயச்சித்தம். இனிமேலாவது செய்யுங்கள் இலங்கையில் போர் நிறுத்தம். பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதிக்கு கடிதம் எழுதினால் போதாது, இலங்கை மண்ணில் இருக்கும் எம் தமிழர்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும்.

இவ்வாறு விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ``இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை, இந்திய அரசு உடனடியாக செய்யவேண்டும். தமிழீழ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தனித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த கருத்துகளோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்களிடம் மட்டுமே இலட்சிய தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ளும்.


இந்த தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், நம் நிலைப்பாடு குறித்தும் விவேகத்தோடு முடிவெடுக்கும் பொறுப்பை தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு இந்த பொதுக்குழு முழு மனதோடு வழங்குகிறது'' என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.


வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று வீராப்புப் பேசி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் அவர் சகோதரர்களும் இன்று திரை மறைவில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினக் கொலை யுத்தத்தில் பலகோடிகளை ஏப்பம் விடப்பட்ட நிலையில் இப்போது இலங்கை அரசு பலத்த நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா கொடுத்த நூறு மில்லியன் டொலர் கடன் பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்கள் வாங்கி தமிழினக் கொலை யுத்தத்தில் வீணாக்கி முடிந்த்து விட்ட நிலையில் மேலும் ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசிற்கு நிதி தேவைப் படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தாலிச் சனியாளிடம் இருந்து இலங்கை அரசு பகிரங்க உதவிகளை எதிர் பார்க்க முடியாதுதமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.இலங்கை அரச நிதியைக் காலி செய்து பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு போர் வெறியூட்டி இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை நிர்மூலம் செய்து தமிழர்களை நிர்க்கதியாக்கி உயிரழித்து உடமை அழித்து அகதி முகாம்களில் அடைத்த ராஜபக்சே சகோதரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ய என்று கூறி சர்வதேச நாணயநிதியத்திடம் பிச்சை கேட்கின்றனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்கும் மக்களை மீள் குடியேற்றவும் மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கும் தற்போதுள்ள இடைத்தங்கல் முகாம்களை பராமரிப்பதற்கும் என்று சொல்லி சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்கின்றனர்.சிங்களக் குடியேற்றத்திற்கே பயன்படும்தமிழர் தரப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றத்திற்கே பயன் படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது. இந்தக் கடன் தொகை இராணுவ நடவடிக்கை போல் தோற்றமளிக்கும் எந்தவித செயற்பாட்டிற்கும் பயன்படுத்துவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும்

http://veltharma.blogspot.com/2009/03/blog-post_30.html aa

விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம்ஸ் பேச்சு: சிறிலங்கா அரசு சீற்றம்

பின்னூட்டம் :
உலகம் ஈழத்தை அதன் போராட்டத்தை அங்கீகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியாக சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த உரையாடல் வன்னியில் தங்கியுள்ள மக்கள் தொடர்பானது எனவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதானது அல்ல எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போது அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.


இந்த கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக தகவல்களை நாம் பெற விரும்புகின்றோம். ஆனால், அது குறித்த உறுதியான தகவல் எதுவும் எம்மிடம் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாபனுக்கும் ஜோன் ஹோல்ம்சுக்கும் இடையிலான இந்த கலந்துரையாடலை நோர்வேயே ஏற்படுத்தி கொடுத்திருந்ததாக விமல் வீரசன்ச குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 28, 2009

ஈழத்தில் இந்தியா நடத்தும் போர்.தேவையில்லாமல் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்?

வன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200 இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்கள் மீது ஏனிந்தத் தீராப்பகைமை? -சென்காட்டான்

"என்னைப் போல் உத்தமர் எவரும் இல்லை' என்று பீற்றித் திரிவதில் சி.பி.எம். கட்சியை வெல்ல யாராலும் முடியாது. குறிப்பாக "இலங்கைத் தமிழர் பிரச்சினை' என்று சொல்லப்படும் ஈழத் தமிழர் இனச் சிக்கலில் அன்று முதல் இன்று வரை "நானே சரி, என்னைத் தவிர யாரும் சரியில்லை' என்று மார்தட்டுகிறார்கள் மார்க்சியக் கட்சியினர். தமிழீழத்தில் சிங்கள அரசின் இனக் கொலைப் போர் தீவிரமடைந்து, அதனால் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு எழுச்சி தோன்றி தமிழக மக்களின் அனைத்துப் பிரிவினரும் தெருவில் இறங்கிப் போராடி வரும் நிலையிலும் சிபிஎம்மின் பீற்றலும் பிதற்றலும் ஓய்ந்த பாடில்லை. எனவே, நாம் சிபிஎம்மைக் கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழக சிபிஎம்மின் தமிழ் நாளேடான "தீக்கதிர்' 2009 சனவரி 29 "திசை திருப்பும் கோஷங்கள் தீர்வுக்கு வழியாகாது' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆசிரியர் உரையை இந்தக் குறுக்கு விசாரணைக்கு அடிப்படையாகக் கொள்கிறோம். அன்பான சிபிஎம் தோழர்களே!

1) ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்று தீக்கதிர் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களின் கட்சித் தீர்மானங்கள், அறிக்கைகள், தலைவர்களின் உரைகள், எழுத்துக்கள், எல்லா வற்றிலும் ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்றே குறிப்பிடுகிறீர்கள். ஆனால் அது என்ன பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனையா, வர்க்கப் பிரச்சனையா, மனிதாபிமானப் பிரச்சனையா என்பதை மட்டும் வரையறுத்துச் சொல்ல மறுக்கிறீர்களே, ஏன்?

2) தமிழீழ மக்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் போரின் தன்மை என்ன? சென்ற அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டு தீர் மானங்கள் இயற்றினீர் கள். முதல் தீர்மானமே ‘இனக் கொலைப்போரை நிறுத்த வேண்டும்’ என்பதுதான். இந்தத் தீர்மானத்திலிருந்து உங்கள் கட்சி இன்று வரை விலகிக் கொள்ள வில்லை. அப்படி யானால் மகிந்த இராச பட்சேயின் அரசு நடத்தி வருவது இனப் படுகொலைப் போரே என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

3) அக்டோபர் 14 அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் தீர் மானம் முப்பது ஆண்டு களாகத் தொடர்ந்து நடக்கும் இனப்படு கொலையைக் கண்டிக் கிறது. அதாவது செய வர்த்தனா, பிரேம தாசா, சந்திரிகா, இரணில் விக்கரமசிங்கா, இராச பட்சே ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இனக் கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று பொருள். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மையானால், சந்திரிகா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டுமென்று உங்கள் தலைவர் உமாநாத் அறிக்கை வெளியிட்டதற்காகத் தற்குற்றாய்வு (சுயவிமர்சனம்) செய்து கொள்வீர்களா?

4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்ட நீங்கள் உங்கள் கட்சியின் தீர்மானங் களிலோ, தீக்கதிர் ஆசிரியர் உரைகளிலோ வேறு இடங்களிலோ இனப்படுகொலை என்ற வரையறையைக் குறிப்பிடுவதில்லையே, ஏன்?

5) இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடப்பது இனப்படுகொலைதான் என்றால் அதற்குத் தீர்வு இன விடுதலை தவிர வேறென்ன?

6) இன்றுள்ள “சர்வதேசச் சூழலில் இந்திய அரசு அண்டை நாடுகளுடன் தலையிடுவதற்குச் சில வரம்புகள் உண்டு” என்று, தீக்கதிர் தலையங்கம் எடுத்துக் காட்டுகிறது. அது என்ன ‘சர்வதேசச் சூழல்'? இந்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவாகத் தலையிடுவதை வரம்புக்குட்படுத்தும் சர்வதேசச் சூழல் சிங்கள அரசுக்கு ஆதரவாக வரம்பின்றித் தலையிடுவதை மட்டும் அனுமதிப்பது எப்படி என்பதை விளக்குவீர்களா?

7) 1987இல் கைச்சாத்திடப் பெற்ற இந்திய - இலங்கை ஒப்பந்தம் எனப்படும் இராசீவ் - செய வர்த்தனா உடன்பாட் டின்படி அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தின் மீது இந்தியா நடத்திய ஆக்கிரமிப் பையும் தலையீடாக நீங்கள் கருதவில்லையா?

8) அக்டோபர் 14 அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் இரண் டாவது தீர்மானம் இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்வதை நிறுத்தக் கோருகிறது. இந்தத் தீர்மானத்தை உங்கள் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் உள் நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில், போரின் ஒரு தரப் பாகிய இலங்கை அரசுக்குப் படைக் கருவிகளும் படைப் பயிற்சிகளும் தருவது தலையீடு ஆகாதா?

9) “இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான் என்று குற்றம் சாட்டி, இந்தி அரசே மறைமுகப் போரை நிறுத்து” என்று வேறொரு குரல் கேட்பதாக தீக்கதிர் ஆசிரியர் உரையில் சொல்கிறீர்கள். இது உங்கள் கருத்து அல்லவென்றால் சிங்கள அரசு நடத்தும் இனக் கொலைப் போரில் இந்தியா முனைப்பாகப் பங்கு வகித்து வருவது குறித்து உங்கள் பார்வை என்ன?

10) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்தை ஏற்புடன் எடுத்துக் காட்டுகிறீர்கள். இராணுவத் தீர்வை மறுத்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியதை அதே போல் எடுத்துக் காட்டுகிறீர்கள். அப்படியானால் இந்தச் சிக்கலில் இந்திய அரசு சொல்வதுதான் உங்கள் நிலைப்பாடா?

11) “இறுதித் தீர்வுக்கான வழி இராணுவ நடவடிக்கை அல்ல, அரசியல் தீர்வே என்பதை உணர்ந்து செயலாற்ற இலங்கை அரசு பிரணாப் முகர்ஜியின் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டால் நிலைமை மாறும்” என்று ஒரு மாபெரும் அறிவுரை வழங்கியுள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்பதைப் படித்தவர்களும் பாமரர்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் அன்புகூர்ந்து விண்டுரைப்பீர்களா?

12) இராணுவத் தீர்வு என்பதும், அரசியல் தீர்வு என்பதும் தீர்வு காண்பதற்கான வழிகளைக் குறிக்குமே தவிர என்ன தீர்வு என்பதைக் குறிக்க மாட்டா. நீங்கள் சொல்லும் இறுதித் தீர்வுதான் என்ன? சிக்கல் என்ன என்பதையே வரையறுக்காத நீங்கள் சிக்கலுக்கு எப்படித் தீர்வு சொல்வீர்கள்?

13) இறுதித் தீர்வு விடுதலைதான் எனக் கொண்டால் இராணுவ வழியில் அந்த இலக்கை அடைவது இராணுவத் தீர்வாக இருக்கும். அரசியல் வகையில் அடைவது அரசியல் தீர்வாக இருக்கும். எனவே இராணுவத் தீர்வு, அரசியல் தீர்வு என்பதெல்லாம் வழிமுறை பற்றியதே தவிர அடைய வேண்டிய இலக்கு பற்றியது அல்ல என்பதை மறைத்துக் குழப்பம் செய்வோரின் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொண்டது ஏன்?

14) தமிழீழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்பதைப் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளீர்கள். தமிழீழ மக்கள் விரும்புவது விடுதலையைத்தான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? ஒரு தேசிய இனம் விரும்பும் தீர்வை ஏற்க மறுத்து விரும்பாத தீர்வைத் திணிக்கச் சொல்வது எவ்வகையான சனநாயகம்? எவ்வகையான மார்க்சிய-லெனினியம்?

15) விடுதலைக்கு மாற்றாக நீங்கள் முன்மொழி யும் தீர்வுதான் என்ன? இப்போது திடீரென்று ‘சுயாட்சி உரிமை’ என்று முழக்கம் தருகிறீர்கள். இதன் பொருள் என்ன என்பதை அன்புகூர்ந்து விளக்குவீர்களா? சுயாட்சி என்றால் என்ன? சுயாட்சி உரிமை என்றால் என்ன? சுயாட்சி என்பது அதிகாரப் பரவலாக்கமா? அல்லது அதிகாரப் பகிர்வா?

16) நீங்கள் கேட்பது சுயாட்சி உரிமைதானே தவிர சுயாட்சி அல்ல என்று புரிந்து கொள்ளலாமா? இதுதான் நீங்கள் கூறும் அரசியல் தீர்வென்றால் இதை அடைவதற்கு நீங்கள் முன்மொழியும் வழிமுறை என்ன?

17) சுயாட்சி என்றாலும் சரி, சுயாட்சி உரிமை என்றாலும் சரி, எதற்கும் சிறீலங்கா குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் ஒற்றையாட்சி முறையில் எள்முனையளவும் இடமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

18) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள தமிழ் மக்கள் சுயாட்சி உரிமை பெறுவதற்கான பாதையை வரைந்து காட்டுவீர்களா?

19) அமைதிப் பேச்சு நடைபெற வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறீர்கள். இப்படி விருப்பம் தெரிவிப்பதில் தவறில்லை என்னும் அதேபோது, யாரும் யாரும் எது பற்றிப் பேசுவது என்று தெளிவுபடுத்த வேண்டாமா? சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்பதே உங்கள் குறிக்கோள் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லலாமே? விடுதலைப் புலிகளோடு பேசுவதில் உடன்பாடு இல்லையென் றால் வேறு யாரோடு பேசச் சொல்கிறீர்கள்?

20) விடுதலைப் புலிகள் இருக்கட்டும், அவர்கள் ஆயுதப் போராளிகள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசச் சொல்லலாம்தானே? இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடனடியாக அமைதி ஏற்படுத்துவது குறித்தும், இறுதியாக அரசியல் தீர்வு காண்பது குறித்தும் பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?

21) தமிழீழ மக்களின் சார்பாகப் பேச புலிகளையும் ஏற்க மாட்டீர்கள்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏற்க மாட்டீர்கள் என்றால் வேறு யாரைத்தான் ஏற்றுக் கொள்வீர்கள்? அதிபர் இராச பட்சேயும் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவும் பேச்சு நடத்த வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா? அல்லது கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி வகையறாக்களுடன் பேச்சு நடத்தச் சொல்கிறீர்களா? இவர்களோடு இராசபட்சே பேசிக் கொண்டுதானே இருக்கிறார்? அவ்வளவு சிரமம் ஏன், இராசபட்சே தன் இளவல்கள் ஃபசில், கோத்தபயா ஆகியோருடன் பேச்சு நடத்தி சிக்கலைத் தீர்க்கலாம்தானே?

22) விடுதலைப் புலிகளையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ ஏற்றுக் கொள்ளாமலே பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று வாயடிப்பதன் உண்மைப் பொருள் உருப்படியான எவருடனும் பேசாதே என்பதும், அடித்து நொறுக்கி முடிவு கட்டு என்பதும்தானே? இவ்வாறு இராசபட்சே எதை முன்மொழிகிறாரோ அதையே நீங்கள் வழி மொழிகிறீர்கள் என்பது தவிர வேறென்ன?

23) அல்ல அல்ல, விடுதலைப் புலிகளோடுதான் பேசச் சொல்கிறோம் என்று கூறுவீர்களானால், பேசுவதற்கு வசதியாக புலிகள் மீதான தடையை நீக்குமாறு கேட்பீர்களா?

24) “ஆயுதம் தாங்கிய போராட்டத்தை வழிமுறையாகக் கைக்கொண்டுள்ள விடுதலைப் புலிகளையும் இராணுவத் தாக்குதலை மேற் கொண்டுள்ள இலங்கை அரசையும், அவற்றின் ஆயுத மோதலுக்கு இடையே அகப்பட்டுத் திண்டாடும் அப்பாவித் தமிழ் மக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்” என்று தீக்கதிர் தலையங்கம் சொல்கிறது. அதாவது புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று நேராகச் சொல்லாமல், இராணுவப் படையினரை குறுக்கே நிறுத்தி மறைமுகமாகச் சொல்கிறீர்கள். இதிலும் இந்திய சிங்கள அரசுகளின் குரலையே எதிரொலிக்கிறீர்கள் என்பது புரிகிறதா?

25) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, விடுதலைப் புலிகளின் வரலாறு ஆகிய வற்றின் அடிப்படையில் புலிகளை மக்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்ட உங்களால் முடியுமா?

26) “இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் தற்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் கோஷங்களும் தடம்புரண்டு திசைமாறிச் செல்வது” குறித்து தீக்கதிர் தலையங்கத்தில் கவலைப்படுகிறீர்கள். தடம் எது? திசை எது?

27) போரை உடனே நிறுத்தும்படி கோருவதும், இந்திய அரசைக் குற்றம் சாட்டுவதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இவற்றை ‘திசை திருப்பும் கோஷங்கள்’ என்று சாடுகிறீர்கள். திசை திருப்பாத முழக்கங்கள் எவை என்று நீங்களே சொல்வீர்களா?

28) இது கடைசிக் கேள்வி. இறுதியாகப் பார்க்குமிடத்து ஈழத் தமிழர் போராட்டம் குறித்து உங்கள் நிலைப்பாடும் இராசபட்சே - மன்மோகன் சிங் நிலைப்பாடும் ஒன்றே எனத் தெரிகிறதல்லவா? உங்களின் இந்தத் தமிழர் விரோதப் போக்கினைக் கைவிட்டு என்றாவது திருந்துவீர்களா?

ஈழத் தமிழர்களின் மீது ஏனிந்தத் தீராப் பகைமை?

காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகோதரத்தமிழன்

போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக
அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்...
ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர்ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர்.

இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை
தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக இனவெறி சிஙள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும் நிதியங்களை கொட்டிகொடுத்தும் தொழினுட்பங்களையும்
ஆளணிகளையும் கோழைத்தனமாக மறைத்துக் கொடுத்தும் வாக்களித்த தமிழர்களின் கழுத்தை அறுத்து ஈழத்து சொந்தங்களை இனப்படுகொலை செய்யச்சொல்லி
ஆனந்தப்படுவதும் ஆற்றாது அழுது புரண்டு போரை நிறுத்தச்சொல்லி மன்றாட்டம் செய்தால்.. ஓடோடிச்சென்று சிங்கவளனை பாராட்டுவதையும் .we are not
concerned about LTTE... I am not fond of LTTE.. என்று ஏகடியம் பேசுவதையும் பார்த்து நாம் நெஞ்சு கொதித்து நின்ற நேரம் ஏதோ துளி ஆறுதல்.

உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் முலாயம் மற்றும் லாலு முறையே தந்த சம்மட்டியடிக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸுக்கு ஒரு மரண அடியே
தந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

இத்தாலிக்காரி சோனியாவின் தான்தோன்றித்தனத்துக்கு மக்களும் தம் பங்குக்கு நெற்றியடி தர தயாராகி வருகிறார்கள். இதுவே இன்றைய நாட்டு நடப்பு. இவ்வேளையில் இன எதிரி ஜெயலலிதாவோடு கூட்டா? என கேட்கும் சகோதரர்களுக்கு எனது தாழ்மையான பதில் இதுதான். இது காலத்துக்கு தேவையான ராஜரீக நகர்வு அவ்வளவே.

இனப்பகைவன் பிரேமதாஸாவோடு கைகோர்த்து சதிகார இந்திய துரோகப்படையை புலிகள் ஈழத்திலிருந்து வெளியேற்றியதைப்போல முதலில் கொலை வெறி காங்கிரஸையும் அதன் கைக்கூலிகளையும் தமிழ் மண்ணைவிட்டு வெளியேற்றுவோம். பிறகு மற்றதை பார்க்கலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் அரசியல் வானில் சுழற்கோளாய் வலம் வரும் திருமாவோ கருணாநிதியின் திருதராஷ்டிர ஆலிஙகனத்தில் சிக்கித் தவிக்கிறார். அந்த
சக்கர வியூகத்திலிருந்து வெளியேற தா.பாண்டியன் மற்றும் வை.கோபாலசாமி போன்ற தலைவர்கள் தான் உதவ வேண்டும்

திருமா அவர்களே ஒரு பாரத ரத்னா விருதுக்காக தமிழினப் படுகொலைக்கு துணை போகும் கருணாநிதி தான் வடிக்கும் முதலைக் கண்ணீரை தமிழ் மக்கள் நம்ப
வேண்டும் என்பதற்காக உங்களை அருகில் வைத்துக்கொள்ள துடிக்கிறார். தயவு செய்து அந்த துரோகத்துக்கு துணை போய் வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம்
என்று சகோதரத் தமிழன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, March 26, 2009

தொடரும் திருமாவின் துரோக செயல்கள்

திருமாவின் இந்த அறிக்கை கருணாநிதியின் அறிக்கைக்கு சற்றும் சளைத்ததல்ல.
ஏன் திருமா துரோக கும்பலோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு இப்படிப்பட்ட துரோகத்தை செய்கிறார் என்று தெரியவில்லை.

அவரது அறிக்கையை இங்கே படியுங்கள் .
அதற்கு முன் அதற்கான பின்நூட்டக்களை படியுங்கள்


பதிவு செய்தவர்: திருமா பதிவு செய்தது: 26 Mar 2009 05:47 pm அன்னை சோனியாஜி வாழ்ககலைஞர் வாழ்கராகுல் வாழ்கபிரியங்கா வாழ்ககனிமொழி வாழ்க நான் வாழ்க

பதிவு செய்தவர்: எஸ் ஜெ ஆர் பதிவு செய்தது: 26 Mar 2009 05:43 pm முன்பெல்லாம் எதிரியாக இருந்த சோன்னியா! இப்போது தோழமையாக மாறிவிட்டார். என்னகொடுமையடா சாமி! அடிக்கிற இடத்தில பல்டி அடிக்கிறாங்கப்பா.தமிழ் வெல்லட்டும்.தமிழ் வாழட்டும்.

பதிவு செய்தவர்: ரஜீவன் பதிவு செய்தது: 26 Mar 2009 05:38 pm திருமா நீங்கள் ஓர் நல்ல நடிகர் என்பதை அடிகடி நிருபிக்கிறீர்கள், கருணாவுக்கு பிறகு எங்கட மக்களுக்கு துரோகம் செய்வதில் நீங்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிருபிக்கிரீர்.

பதிவு செய்தவர்: மாரி முத்து பதிவு செய்தது: 26 Mar 2009 05:34 pm திருமாவளன் தனித்து போட்டிஈடு வேண்டும்


பதிவு செய்தவர்: அறிக்கை பதிவு செய்தது: 26 Mar 2009 05:27 pm டேய்!!! இன்னும் எத்தனை naalda என்னை vida poreenga...valikkudhudaa..aludhuduven!!!

பதிவு செய்தவர்: obama பதிவு செய்தது: 26 Mar 2009 05:26 pm thiruma is a stupid mokkai

பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 26 Mar 2009 05:24 pm ஒஷியட்டும் தமிழ் துரோகிகளின் கூட்டணி.... அழியட்டும் தமிழின விரோத அரசியல்.


போர் நிறுத்தம்-சோனியாவுக்கு திருமா வேண்டுகோள்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடு்த்துள்ளார்.இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முல்லைத்தீவில் நடக்கும் இனப்படுகொலை மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 9,985 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஐநாவின் மனித உரிமை அமைப்பின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.இது தொடர்பாக அண்மையில் டெல்லிக்கு வந்திருந்த ஐநா மனித உரிமை அமைப்பின் செயலாளர் நவநீதம் பிள்ளை இந்த அதிர்ச்சியான உண்மையை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து இந்திய அரசு அமைதி காப்பதும் வேடிக்கை பார்ப்பதும் மனித நேயமுள்ள ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலையடைய செய்துள்ளது.சர்வதேச சமூகத்தையே உலுக்கியிருக்கிற இலங்கை இனவெறியர்கள் நடத்தும் மனிதப் பேரவலம் தொடர்பாக இந்திய அரசு கருத்து ஏதும் கூறாமல், தடுப்பு நட வடிக்கை மேற் கொள்ளாமல் இலங்கை ராணுவத்தை ஊக்கப் படுத்தும் வகையில் நடந்து கொள்வது சகித்துக் கொள்ளவே முடியாததாக உள்ளது.தமிழக மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிற இந்த இனப்படுகொலை பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்திய அரசோ, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியோ இதில் விரைந்து தலையிட்டு போர் நிறுத்தத்திற்குரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது என கூறியுள்ளார் திருமாவளவன்.

Tuesday, March 24, 2009

விடுதலை சிறுத்தைகளின் துரோகம் - சாயம் வெளுக்கிறது.

அதிமுகவுடன் சேருவது ஈழத் தமிழர்களுக்கு விரோதமானது - திருமா.
பின்னூட்டம் : அதற்காத்தான் காங்கிரஸ் க்கு முட்டு கொடுக்க்ரீர்களா?

பதிவு செய்தவர்: அருள் குமார் பதிவு செய்தது: 25 Mar 2009 10:25 am சபாஷ் திருமா அவர்களே ..ஒரு நாள் நாடகம் ஜெ இருந்தது . நான்கு நாள் நாடகமா நீங்கள் இருந்தது .. பிரபாகரனை கைது செய்ய சொல்லிய ஜெ தமிழ் இனத்திற்கு எதிராய் பேசிய ஜெ சகோதர உதத்த்தை பற்றி பேசவில்லை . இலங்கை தமிழர்களுக்காக நிறைய செய்து இருப்பதாக தங்களால் மொழியப்படும் தி .மு .க தான் சொல்லியது . பிரபாகரனை போராளி என்று சொல்லும் திருமா அவர்களே ...அதே பிரபாகரனை சர்வாதிகாரி என்று எந்த நேரத்தில் சொல்ல கூடாதோ அந்த நேரத்தில் சொல்லிய உங்களின் தானே தலைவர் யாரை திருப்தி படுத்த சொல்லினார் என்பதை நீங்கள் அறிவிங்கள்


பதிவு செய்தவர்: பற்று பதிவு செய்தது: 25 Mar 2009 10:18 am இந்த எடிடோரின் பற்று என்னவென்று சொல்வதுஈழத் தமிழருக்காக எழுதும் போது கருணா அல்லது திருமா சேர்ந்து வந்தால் போதும் உடனே அதனை நீக்கி தனது பற்றை வெளிப்படுத்துகிறார்.காங்கிரஸ் வாழ்க, கருணா வாழ்க, அழகிரி வாழ்கஇப்போது இந்தக் கருத்தின் கருது புரியும் வரை சிறிது நேரம் இருக்கும்!!


பதிவு செய்தவர்: ரகடி பதிவு செய்தது: 25 Mar 2009 10:07 am இதெல்லாம் ஒரு கட்சி, இதுக்கு ரெண்டு சீட், ஒரு தலைவர், தூ..


பதிவு செய்தவர்: muthudevar பதிவு செய்தது: 25 Mar 2009 10:06 am துரோகி திருமாதுரோகி திருமாதுரோகி திருமாதுரோகி திருமா


பதிவு செய்தவர்: பொன் சேகர் பதிவு செய்தது: 25 Mar 2009 09:59 am நான் சொன்னது தப்பா? ஆம் இல்லைன்னு ஒன்னு சொல்லுங்கள் வாசகர்களே!


பதிவு செய்தவர்: vasu பதிவு செய்தது: 25 Mar 2009 09:59 am foolish thiruma, better to sucide instead of living in the world


பதிவு செய்தவர்: பிரபா புலம்பல்கள் பதிவு செய்தது: 25 Mar 2009 09:58 am அதிமுகவுடன் சேருவது ஈழத் தமிழர்களுக்கு விரோதமானது, எனவே நான் காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறேன். - திருமா.சூப்பர் தமாசு தான்!!!


பதிவு செய்தவர்: சாமி பதிவு செய்தது: 25 Mar 2009 09:52 am சீமான் குளத்தூர் மணி போன்றவர்களை உள்ளே போடும் போது திருமாவை மட்டும் காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி வெளியே வைத்திருந்த கருணாநிதிக்கு திருமா செய்யும் கைமாறு இது.அரசியலில் இது சாதாரணமப்பா!

திருமா வின் செய்தி இது :-
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. திமுக கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் பாமக இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பாமக குறித்தும் பேசப்பட்டது.திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.பின்னர் வெளியில் வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக அதிமுக கூட்டணிக்குப் போவதை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார்.அவர் கூறுகையில்,

இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிராக பேசியவர் ஜெயலலிதா.ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒருநாள் கூத்தை நடத்தினார். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் ஒப்பிட முடியாத கட்சி. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க. நேர் எதிரான கட்சி.அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு, எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பா.ம.க.வுக்கு அழைப்பு விடுத்தோம். அந்த தீர்மானத்தையும் விலக்கிக்கொண்டு, நேற்று இரவு நீண்ட நேரம் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினேன். அப்போது, தோழமை உரிமையுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன்.ஒரே அணியில் இருந்தால் சமூக எழுச்சியை வளர்க்க முடியும் என்று அப்போது நான் கேட்டுக்கொண்டேன். எங்கள் கோரிக்கையை புறம்தள்ளாமல், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி கூறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.சூசகமாக என்னை அதிமுகவுக்கு அழைத்தார்..தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. எங்களை அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு டாக்டர் ராமதாஸ் அழைக்கவில்லை. பா.ம.க.வுடன் வர சூசகமாக அவர் அழைத்தார். நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். அணிமாறுவது குறித்து எந்த ஊசலாட்டமும் எங்களிடம் இல்லை.சிதம்பரம் தொகுதியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் தனித்தனி அணியில் நின்று போட்டியிட நேரிட்டால், எங்களுக்குள் போட்டிதான் இருக்குமே தவிர, மோதல் இருக்காது.3 சீட் கேட்டுள்ளோம்...பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலான உறவு கொண்டதை முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்தார். தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவ கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதை முதல்-அமைச்சர் கருணாநிதி அப்போது சுட்டிக்காட்டினார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு மடலாக கருதுகிறேன்.கூட்டணி உறவை மனப்பூர்வமாக ஏற்று, மகிழ்ச்சியோடு தேர்தலை சந்திக்கிறோம். ஈழத்தமிழர் ஆதரவுக்காக எங்கள் குரல் வலுவாக ஒலிக்கும்.

இலங்கை தமிழர்கள் வாழ்விற்காக தி.மு.க. எவ்வளவோ செய்துள்ளது. அதற்காக எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துள்ளது.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, பிரதமரை சென்று சந்தித்தது, மனிதச்சங்கிலி நடத்தியது போன்றவற்றில் முதல்-அமைச்சர் கருணாநிதி முன் நின்றார். இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு.க.வுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் திருமாவலவான்

இநதியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்னிக்கமுடியாத துரோகம்.

இந்தியாவின் பெருந்துரோகதிற்கு மற்றொரு வாக்குமூலம். சோனியாவும் கருணாநிதியும் துரோகிகள் என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும் . போரை நாங்கள் நடத்தவில்லை நடத்துவது இந்தியாதான் என்பதிற்கு ஒப்புதல் வாக்குமூலம் இது.

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது: அமைச்சர் நிமால்
சோர்ஸ் :http://tamilwin.com/view.php?2a36QV14b34Z9E834dbSWnPeb0217GQc4d2iYpD2e0dfZLuIce03g2hF2ccdlj0o0e

இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.
அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:
இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நிலைமைவேறு.
இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.
இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:
இந்தியா எமது யுத்த நடவடிக்கையை ஏற்றுள்ளது. எமது படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதேவேளை, அப்பாவி மக்களையும் காப்பாற்றுகின்றனர் என்றார்.
யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதை நன்கு விளங்கி வைத்துள்ளன. அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்த முற்படமாட்டா என்றார்.


அங்கு வைத்து விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:
இந்தியா நினைத்தால் யுத்தத்தை நிறுத்தவும் முடியும். அதைத் தொடர வைக்கவும் முடியும். ஆனால், இது தொடர்பில் இந்தியா எமக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அதேவேளை, நாம் ஏனைய நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமது அரசியல் நடத்தைகளை மாற்றியமைக்க முடியாது.
அரசியல் நடத்த வேறு கோஷம் எதுவும் இல்லாதவர்களே இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்திய வைத்தியர்கள் இங்கு வந்தமை பிழை என்கின்றனர் என்றார்

Monday, March 23, 2009

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

பின்னூட்டம் :
ஐயா ராமதாஸ் அவர்கள் மதிமுக அணிக்கு வந்துவிட்டார்கள் காங்கிரஸ் பெறப்போவது பூச்சியம் தான் .

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி என்று குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக ராமதாஸ் அவர்கள் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.
அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன. வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.


ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ""இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது'' என்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.


இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.


இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.


இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது. ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.
ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.
ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது. அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.
அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும்.


போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ

இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர். இந்த துரோகத்திற்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு 10ஆயிரம் பணம் கொடுத்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பண உதவிகள் வரும் என வைகோ தெரிவித்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம், இலங்கையில் வன்னிப் பகுதியில் ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள இராணுவம்.


உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது.
இப்படிப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர். இந்த துரோகத்திற்கு நாம் நல்ல பாடம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

Sunday, March 22, 2009

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர் இன்று மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.
சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.


கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் கவலை தெரிவித்து வந்த பாலசுந்தரம், இன்று மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம் அடைந்த பாலசுந்தரம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொத்தமங்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.


பாலசுந்தரம் உடலுக்கு தமிழின உணர்வாளர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னூட்டம் :
தேமுதிக வைச் சேர்ந்த இரண்டாவது நபர் தீக்குளித்து இறந்துள்ளார் . இதை அதன் தலைமை உணரவேண்டும். தேர்தல் கணக்கில் காங்கிரஸ் க்கு சாதகமான் முடிவை அதன் தலைமை எடுக்குமானால் தேமுதிகா வில் உள்ள திராவிட நண்பர்களால் அதை ஜீரணிக்க முடியாது. அவர்கள் அதன் தலைமுக்கும் கட்டுப்பட மாட்டர்கள்.

Saturday, March 21, 2009

சென்னையில் இன்று கண்டன ஆர்பாட்டம்

நாஞ்சில் சம்பத் , இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. விரிவான செய்திகள் அடுத்த சில மணித்துளிகளில் இங்கே பதியப்படும்.

Friday, March 20, 2009

தமிழின கொலை பட்டியல்

நண்பர்களே சமீபத்தில் நாம் காணும் மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் நடக்கிறது அதை ஊன்றி நடத்துவது இந்தியாதான். ஏன் இந்திய காங்கிரஸ் அரசாங்கத்திருக்கு தமிழர்கள் மேல் இவ்வளவு ரத்தவெறி ?. இப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு காடிகொடுத்த எட்டபனை போல் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் நாய்களையும் திமுக துரோகிகளையும் ஓட விரட்டுங்கள் நண்பர்களே.

ஈழ இனஅழிப்பை வோட்டுக்கு காசு கொடுத்தால் முட்டாள் தமிழன் மறந்து விடுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஓர் தொகுதிக்கு முப்பது கோடி செலவழிக்க ஆயத்த மாகிகொண்டுள்ள காங்கிரஸ் நாய்களோடு சேர்ந்த கூட்டணிவேட்பாளளர்களை தோற்கடிக்க செய்யுங்கள் நண்பர்களே.

இந்த தேர்தலில் காங்கிரஸ் நாய்கள் வெற்றி பெற்றால் ஈழத்தில் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் தமிழக தமிழர்கள் கூட இரண்டாம் குடி மக்களைபபோல் நடததபட்டுவிடுவார்கள்.

நண்பர்களே நாய்களை விரட்டி அடிப்போம் நம் சுயமரியாதையையும் நம் இனத்தையும் காப்போம்.


கீழே உள்ள இன அழிப்பு 2009 ஆண்டில் மட்டும் நடந்தது.

2009 Tamil Ethnic Cleansing Index
படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்Tamils KILLED - 2847
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்Tamils critically வௌண்டேது -6483
வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்Tamils Killed in Vanni -2794
வன்னியில் படுகாயப் படுத்தப்பட்ட தமிழர்கள்
Tamils CRITICALLY Wounded in Vanni -6470
சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்Tamils Killed UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION -53
சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்Tamils CRITICALLY Wounded UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION -13
சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் பலவந்தமாய் கடத்தப்பட்டோர் அல்லது காணமல் போனோர்ENFORCED Tamil Disappearances UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / அட்மிநிச்ற்றடின் -198
சிறிலங்கா படைகளால் கைதானோர்Tamils Arrested by Sri Lankan Armed forces -௭0௧

விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்களால் தாக்குகின்றனர்: படையினர் தெரிவிப்பு

பின்னூட்டம் :
போராளிகளின் உண்மையான நோக்கம் நிறைவேறியே தீரும். ஈழம் நிச்சயம் மலரும். இந்தியா மற்றும் இலங்கை க்கு எதிரான தமிழர் போராட்டம் வெல்லும்.தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகம் அழிந்தே தீரும்.

முல்லைத்தீவில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மீது விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்துவதாக, சிறீலங்கா படைத்தரப்பு கூறுகின்றது.
படை நடவடிக்கையில் ஈடுபட்டு்ள்ள 11ஆம் காலாட் படை இதனால் கடும் இழப்புக்கள சந்தித்துள்ளதாகவும், இவ் ஆயுதங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதால், அவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டவையாக அல்லது நவீனப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னர் அனுராதபுரம் விமானப்படைத்த்தளம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியபோது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல வெளிநாட்டு படையதிகாரிகளால் கூட அடையாளம் காணமுடியாதவையாக இருந்தன என சிறீலங்கா அரசும் படைகளும் திண்டாடியமை சுட்டிக்காட்டத்தக்கது.

Wednesday, March 18, 2009

கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்களில் சிறிலங்கா அரசு பொருளாதார தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் மகிந்த அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் புதிய, புதிய கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படுவதாகவும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் மீது திணிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகளினால் சாதாரண மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அங்கு சென்று வந்த பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையில் உள்ள கரடியனாறு, தாத்தாமலை, உன்னிச்சை, மாவடிஓடை மற்றும் வாகரையில் உள்ள மதுரங்குளம், குஞ்சங்குளம் போன்ற மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் சிறிலங்கா படையினர் தமது வசதிக்கும் விருப்பங்களுக்கு எற்பவும் நாளுக்கு வெவ்வேறுபட்ட புதிய நடைமுறைகளை முன்னறிவித்தல் எதுவும் இன்றி அறிவிப்பதனால் மக்கள் செய்வதறியாது அவதிப்படுகின்றனர் என்று பிரதேச அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடும்பத்தில் நான்கு பேர் இருப்பார்களாயின் அவர்கள் ஒரு நாளைக்கு நான்கு சுண்டு அரிசியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். அவ்வாறே பால்மா வகைகள் மற்றும் ரின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கவோ அல்லது அப்பகுதிக்கு கொண்டு செல்லவோ முடியாதவாறும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அரச அதிகாரிகள் முறையிடுகின்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட படை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவ்வாறான புதிய, புதிய கட்டுப்பாடுகள் மேலிடத்து உத்தரவு என தெரிவிப்பதாகவும் அரச அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, அப்பகுதியில் மேய்ச்சல் தரைகளுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கு ஏற்கனவே சிறிலங்கா படையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் பல கால்நடைகள் காடுகளில் அநாதரவாக நடமாடுவதாகவும் அவற்றை உரியவர்கள் மீள பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்றும் கிராமசேகவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கிராமசேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அரசியல் துரோகிகள் - அடையாளம் காண்பீர் நண்பர்களே

ஈழத் தமிழர்களுக்கு சோப்பு சீப்பு கண்ணாடி வழங்கும் கருணாநிதியும், ஈழத் தமிழர் காதில் பூ சுற்றும் ராமதாசும்: தமிழக தமிழின உணர்வாளர்

ஈழத்தில் இனவெறிப் படுகொலை நின்ற பாடில்லை. நாளாந்தம் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இந்தியா சார்க் மாநாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கி ஈழத் தமிழினத்தைக் கொன்று குவித்து வருகிறது.

என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களைக் காப்பேன் என்று கரடி விட்ட கருணாநிதி வழக்கம் போல தன் துரோக நாடகத்தை அரங்கேற்றி இப்போது இலங்கை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பட்டிற்கே வந்து நிற்கிறார்.

இலங்கையில் போரை இந்தியா நடத்தவில்லை என்றும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் சொன்னதன் மூலம் இது வரை தான் கட்டி வைத்திருந்த தமிழ், தமிழர், திராவிடர் என்னும் முகமூடி பலூனை நீண்ட காலத்திற்குப் பிறகு கருணாநிதியே உடைத்திருக்கிறார்.

இது ஒரு வகையில் நல்லதுதான். இனிமேலாவது நாம் விழிப்புணர்வு பெறவும் புதிய அரசியல் தலைமைக்காக முயற்சிக்கவும் ஒரு தொடக்கமாக அமையும். கருணாநிதி மீதான இந்த அயற்சியிலிருந்து மீள நாம் புதிய தலைமைகளைத் தேடும் சூழலுக்கு (தமிழர்கள்) தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதெல்லாம் நல்ல மாற்றம் தான்.

ஆனால் கருணாநிதி இங்கே வெளிப்படையாக அம்பலமான அளவுக்கு இதே தமிழின முகமூடிகளைச் சுமந்திருக்கும் ஏனைய தமிழ் லவடாக்கள் அம்பலமாகவில்லையோ என்று தோன்றுகிறது.

திருமாவளவன், தியாகி முத்துக்குமாரின் எழுச்சிகரமான இறுதி நிகழ்வின் போது “வரும் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவது” என்பது பொது வேலைத் திட்டமாக அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கூட்டங்களிலேயே வெளிப்படையாக காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்கள் பலரும். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், திருமா இருவரும் இல்லாத காவடி எல்லாம் தூக்கினார்கள்.
சிறுத்தைகளுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இத்தாலிய வெள்ளைப் பெண்மணி சோனியாவின் உருவபொம்மையை ராஜீவின் கொடும்பாவியை கொளுத்தியதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள் 23 பேருக்கு மேலானோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறையிலடைத்திருக்கிறது கருணாநிதி அரசு. (காங்கிரஸ்காரனை அறிக்கை விடச் சொல்லி அறிக்கை விட்ட பிறகு கைது செய்து விட்டு காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள் ஆகவே செய்கிறேன் என்பதை எல்லா கைதுகளுக்குமே ஒரு காரணமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கருணாநிதி)

இந்தக் குத்தாட்டங்கள் காமெடிக் காட்சிகள் ஈழ மக்களை முன் வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தபோது இந்த கோமாளிகளுக்கு புதிய அவலைக் கொடுத்தது தேர்தல் கமிஷன். அதுதான் தேர்தல் அறிவிப்பு. அவ்வளவுதான் ஈழ ஜுரம் முடிவுக்கு வந்து “யார் மனசுல யாரு.. உங்க மனசுலே நானு” என்று கோமாளிக் கூட்டணி பேரத்தில் மூழ்கிவிட்டார்கள். திருமாவளன் நிலை பரிதாபம்தான் “திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதை கருணாநிதிதான் சொல்ல வேண்டும்” என்று தொடர்ந்து கதறினார் திருமா. சந்திப்புகளுக்கான நேரங்களைக் கேட்டு அது கடைசி வரை திருமாவுக்குக் கிடைக்கவே இல்லை.

ஆனால் கருணாநிதி சொன்னார் “இப்போதான் காங்கிரஸோடு கூட்டணி பேசத் தொடங்கியிருக்கிறோம். உங்கள் ஆசை நிறைவேறலாம் நிறைவேறாமலும் போகலாம்” என்றார். அதாவது காங்கிரஸ்காரன் தயவு செய்தால் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் இணைப்பேன் அல்லது இடமில்லை என்பதைத்தான் கருணாநிதி தந்திரமாக பத்திரிகையாளர்கள் கேட்டது மாதிரி கேட்டு பதிலைச் சொன்னது மாதிரி சொன்னார் திருமாவிற்கு.

ஆனால் ராமதாஸ் கூட்டணிக்கு வருவாரா? வரமாட்டாரா? அறிவாலயமா? போயஸ்கார்டனா? என்று பேரம் பேசித் திரிந்த போது, கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு போணியாகாதோ என்று பயந்த கருணாநிதி உடனே “அவர் நீண்ட காலமாக எங்கள் அணியில் உள்ளார். ஏனென்றால் சமத்துவக் கொள்கை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை கொள்கை இவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நாங்களும் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள். அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள்” என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்த அறிக்கையால் குளிர்ந்து போன திருமா சொன்னது “அம்பேத்கார், பெரியார் ஆகிய மகத்தான தலைவர்களின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், ஒட்டுமொத்த தமிழினத்தின் நலன்களுக்காகவும் போராடி வரும் எம்மை அரசியல் அரங்கில் அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் அறிவிப்பு பேருவகையளிக்கிறது. சாதி ஒழிப்பு, சமத்துவம், பொதுவுடமை மற்றும் ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் தமிழினத்தின் நலன்களுக்கான களங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார் திருமா.
அதாவது “ஈழத் தமிழர் விவாகரத்தில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு” என்று திருமாவளவன் குரல் கொடுப்பாராம். திருமாவின் உடன்பாட்டை கொள்கை உடன்பாடு என அவரது வார்த்தைகளில் இருந்து நாம் புரிந்து கொண்டால், ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஈழத் தமிழர் விவாகரத்தில் ஒன்றுதான்’ என்று சொன்ன கருணாநிதியின் கொள்கையோடும் காங்கிரஸின் கொள்கையோடும் திருமா இணைந்து போவதை திருமாவின் வார்த்தைகளில் இருந்தே நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.
நாங்கள் திமுகவோடுதான் கூட்டணியில் உள்ளோம் காங்கிரசோடு அல்ல என்று திருமா சொன்னாலும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே திருமாவளவன் நீடித்திருக்க வேண்டியதாயிற்று. அப்படி என்றால் . காங்கிரஸை வீழ்த்துவோம் என்கிற பொது வேலைத் திட்டம் பற்றிய திருமாவின் கருத்து என்ன? ஒரே மேடையில் தங்கபாலுவும், கருணாநிதியும், திருமாவும் தோன்றுவார்களா? துரோகத்தின் விளைநிலமாக மாறிப் போன கருணாநிதி இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப் போவதாக சொல்லும் சட்டிப்பானை, சோப்பு, சீப்பு, கண்ணாடி நிவாரணத்தில் திருமாவும் தன்னை இணைத்துக் கொள்வாரோ என்னவோ?

வெறும் கையால் முழம் போடும் ராமதாஸ்

ஈழத்தமிழர்கள் மீதான இனவெறிப் போரை ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கும் மத்திய காங்கிரஸ் அரசில் தன் மகன் அன்புமணி உடபட சிலருக்கு மந்திரிப் பதவிகள் வாங்கிக் கொடுத்து அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கும் ராமதாஸ் ஈழத் தமிழர் தொடர்பாக பேசிய பேச்சுக்களை வரிசையாகப் பார்த்தாலே போதும். ராமதாஸுக்குள் எத்தனை கருணாநிதிகள் ஒளிந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

1. “தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனை பின்பற்றுவோம்” திமுகவின் இராஜிநாமா நாடகத்தில் ராமதாஸ் பங்கேற்றபோது கூறியது.

2. “இலங்கை தமிழர் பிரச்சினை தி.மு.க-பா.ம.க. இடையே மீண்டும் ஒற்றுமையைக் கொண்டு வருமா?" என்று ஒரு நிருபர் கேட்டார். ராமதாஸ், "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டுமே ஒற்றுமை" புதுடில்லியில் காங்கிரஸ் கூட்டாளிகளை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது திருவாய் மலர்ந்தது.

3. “இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.”

அதே மேடையில் “தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.” இவையெல்லாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த திருமாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்த ராமதாஸ் அதே உண்ணாவிரத மேடையில் பேசியது.

4 இலங்கைப் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண எவ்வளவு முயன்றும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மனிதச்சங்கிலிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கம், பிரதமருடன் சந்திப்பு என்று பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு தமிழக மக்களை மதிக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலைகுனிகிறோம். தமிழர்களையும். தமிழக அரசையும் ஓட்டு மொத்தமாக இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது. காங்கிரசுடன் கூட்டணி இனியும் நீடிக்க வேண்டுமா என்று எல்லோரும் கேட்கிறார்கள். இது குறித்து நாங்கள் ஒரு மாதத்தில் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வோம். இலங்கையில் நடப்பது இன அழிப்புப் போர் என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது.” சென்னையில் நடந்த விழா ஒன்றில் ராமதாஸ் பேசியது.
அன்புமணியும், சோனியாவும்
5. “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம். இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சென்றுள்ளது. போர்நிறுத்தம் இல்லாமல் எப்படி பேச்சுவார்த்தை தொடங்க முடியும், அமைதி ஏற்படும், அதிகார பகிர்வு ஏற்படும்?
இது ராஜபக்ச கட்சியின் தீர்மானம் போல் உள்ளது. இவையெல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம். மொத்தத்தில் அன்றாடம் செத்து மடியும் இலங்கைத் தமிழர்களை திமுகவும், ஆளும் திமுக அரசும் கைவிட்டுவிட்டன. தமிழர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். ராஜபக்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்படையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்.” பத்திரிகையாளர் சந்திப்பின் போது.

6. ‘‘இங்கு பேசுவோர் எந்த அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ விமர்சிக்கக் கூடாது” இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கலந்தாலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் (இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் திமுகவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தபோது ராமதாஸ் கேட்டுக் கொண்டது) புலிகள் போராளிகள் அவர்கள் தாயக விடுதலைக்காக போராடுகிறவர்கள். அவர்களை எவனாலும் வெல்ல முடியாது என்றெல்லாம் சொல்லி விட்டுஇ ‘புலிகளை யாரென்றே எங்களுக்குத் தெரியாது எந்தக் குழுவையும் நாங்கள் ஆதரிக்கவில்லை’ என்றெல்லாம் திருவாய் மலர்ந்ததை நாம் இங்கு எடுத்து கையாளவில்லை.
நண்பர்களே! மேலே ராமதாஸ் சொன்ன கருத்துக்களை இன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் சொன்னதில் ஏதாவது ஒன்றுகூட நடந்ததா? தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்றாரே அப்படி எதுவும் நடந்ததா? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்தபோது அதை ஒடுக்க தமிழக கருணாநிதி அரசு பல வழிகளைக் கையாண்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இருந்த போது ராமதாஸ் சொன்னார். “யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலே போதும் போராட்டம் வெற்றி பெறும்”” என்றார்.
இப்படி போராடியதன் விளைவுதான் ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சியை தமிழகத்தில் காயடித்தது. இன்றைக்கு வரை ராமதாஸ் மகன் அன்புமணி ஈழத் தமிழர் விவாகரம் குறித்து ஏதாவது எதிர்த்தோ ஆதரித்தோ ஒரு கருத்தாவது சொல்லியிருப்பாரா? (இதைக் கேட்டால் அன்புமணியின் பசுமைத் தாயகம்தான் ஈழத் தமிழர் விவாகரத்தை ஐநா அமைப்புக்கு கொண்டு சென்றது என்று கூட செல்வார்கள். அன்புமணியாலோ, பசுமைத் தாயகம் என்கிற தன்னார்வக் குழுவாலோ அப்படி ஏதும் ஐநாவில் விவாதங்கள் நடந்ததாக தெரியவில்லை)
மேலே கண்ட ராமதாசின் இம்மாதிரியான வெற்றுச் சவடால்களோடுதான் இன்றைக்கு கூட்டணிக்காக ராமதாஸ் நடத்துகிற பேரங்களையும் நாம் பார்க்க வேண்டும். டில்லிக்குச் சென்று சோனியா காந்தியைப் பார்த்து போர் நிறுத்தம் கோரப் போவதாக டில்லிக்குச் சென்று, டில்லியிலேயே ராமதாஸ் இருந்த போதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்படி ராமதாஸின் மூக்கை அறுத்தார். “இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.”

தமிழகத்தில் ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு சவக்குழியாக மாறுகிறது என்பதை அறிந்த பிரணாப் தூத்துக்குடியில் பேசியபோது “‘புலிகளின் போர் நிறுத்தக் கோரிகையை இலஙகை அரசாங்கம் ஏற்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும்” என்று சொன்னபோது கருணாநிதி உச்சி குளிர்ந்து போனார். அதே அளவு குதூகாலத்தை ராமதாசும் அடைந்தார். “தற்போது இந்தியா கொஞ்சம், கொஞ்சம் தயக்கத்தை கைவிட்டு போர் நிறுத்தம் பற்றி பேசத் தொடங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இந்த மாற்றம் பேச்சளவில் நின்றுவிடாமல் செயல் அளவில் இருக்க வேண்டும்” என்று கருத்துச் சொன்னார்.

இவர்கள் அனைவருமே இன்று ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் கொள்கையோடு ஈழ விவாகரத்தில் உடன்பட்டுப் போகிறார். ராமதாஸோ ஈழ விவாகரத்தில் கருணாநிதியைத் திட்டி காங்கிரஸ் குறித்து விமர்சனமே வைக்காமல் காலத்தைத் தள்ளி விட்டார். திமுக காலைவாரிவிட்டது உண்மைதான். ஏன் அதே அளவு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ராமதாசுக்கு கிடையாதா? கடைசி வரை தன் மகனின் பதவியைக் காப்பாற்றிக் கொண்டதோடு, அதே காங்கிரஸோடு மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதில் இருந்து ராமதாஸுக்குள் பத்து கருணாநிதிகள் ஒழிந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
‘பத்து நாட்கள் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம். தடாலடி தண்டால்கள் எடுப்போம். நாங்கள் வித்தியாசமான கட்சி’ என்றெல்லாம் பேசும் ராமதாஸ் ஈழத் தமிழகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக எழுந்து விட்ட பெருநெருப்பில் குதித்து எல்லா நாடகங்களையும் அரங்கேற்றி பாதகம் ஏதும் இல்லாமல் காய் நகர்த்தி இலங்கைத் தமிழர் பேரவையையும் அதன் போராட்டங்களையும் காயடித்து, இயல்பாக எழுந்த ஈழத் தமிழர் ஆதரவு அலையை வீணடித்து அதை வெற்றுச் சடங்காக மாற்றி இன்றைக்கு எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு கூடுதல் சீட்டுக்காக அதிமுக, திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கிற ராமதாஸ்தான் இந்தத் தலைமுறையில் நான் பார்த்த மிகப் பெரும் துரோகி. இந்தப் போராட்டங்கள் வீணடிக்கப்பட்டதற்கும் அவரே பொறுப்பாளி. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையை ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி மேடையைப் போல் மாற்றி விட்டார்.

அடுத்த பிரதமராக வருவதற்கே தகுதியுள்ளவர் என்று புளகாங்கிதப்படும் அன்புமணி மட்டும் என்ன செய்தார்? சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர் மருந்துகளின் கையிருப்பு குறைந்திருப்பது தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இலங்கை சுகாதார அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா, “இலங்கையில் போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தை இந்தியா அனுப்புகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் ‘பெதாடைன்' என்கிற அந்த மருந்தை இந்தியா அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்தியா மருந்து அனுப்பும்” என்றும் தெரிவித்தார்.

போரால் காயமடைந்த சிங்கள வீரர்களுக்கு மருந்துகள் அனுப்புவது ராமதாசின் மகன் அன்புமணிக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றால் இவ்விதமான ஒரு அமைச்சர் எதிர்காலத்தில் பிரதமராக வந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தக் கூத்துக்களைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து மருத்துவக் குழு ஒன்றை அனுப்புவதாக நாடகம் ஆடி இந்திய இராணுவ விமானத்தில் இராணுவ மருத்துவ அதிகாரிகளோடு ஒரு மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தக் குழு புல்மோட்டையில் ஒரு மருத்துவமனையை நிறுவி இலங்கை சுகாதார அமைச்சகத்தோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்கிறார்கள், சிகிச்சை போரால் காயமடையும் அனைவருக்கும் என்றால் இராணுவத்தினருக்கும் சேர்த்துதானே! (இதெல்லாம் யார் செய்தது? அன்புமணிக்கு இதெல்லாம் தெரியாதா?) ஆனால் இந்த மருத்துவக் குழு என்ற போர்வையில் இந்திய இராணுவத்தினரும் உளவு நிறுவனமும் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக ஜனதா விமுக்தி பெரமுனா பாராளுமன்றத்திலே வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறது.

இது வெறுமனே மருத்துவ குழு என்றால் ஏன் அதை இலங்கை தாதிமார்ச் சங்கம் எதிர்க்கிறது? இலங்கை மருத்துவர் சங்கம் ஏன் இந்தக் குழுவின் வருகையை எதிர்க்கிறது? இந்திய இராணுவக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை மருத்துவமனை குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியின் அனுரகுமார திசநாயக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா “இந்தியாவின் ஒத்துழைப்பு மட்டும் கிடைக்காது போயிருந்தால் இந்தப் போரில் இந்தளவுக்கு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்காது. சர்வதேச நாடுகள் பலவும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, இந்தியா பெரும் சக்தியாக இருந்து இந்தப் போருக்கு ஆதரவு வழங்கியது. இந்த மருத்துவமனை அமைவது குறித்து இந்தியாவும் இலங்கையும் சில பேச்சுக்களை நடத்தியது என்றும், அந்தப் பேச்சுக்களின் அடிப்படையிலேயே இராணுவ மருத்துவமனை அமைய இலங்கை அனுமதித்தது எனவும், 45 படுக்கைகளைக் கொண்ட ஒரு மருத்துவமனை அமைவதால் ஒரு நஷ்டமும் ஏற்படப் போவதில்லை எனவும், அதனால் ஏற்படும் லாபமே அதிகம்” என்றும் ஜே.வி.பி உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர்.

கேபினெட் அந்தஸ்துள்ள அன்புமணி ராமதாசின் ஒப்புதல் இல்லாமலா இந்த இராணுவ மருத்துவமனை இலங்கையில் அமைக்கப்பட்டது? அந்த மருத்துவமனையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி என்று சொல்லி விட்டு அங்கு சிங்கள இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது அன்புமணி ராமதாசின் ஒப்புதலோடுதானா?இல்லையா? மிகத் தந்திரமாக ராமதாஸ் அவர்கள் கட்சிக்காரர்களுடனோ கருணாநிதியிடமோ அரசியல் நடத்தலாம் ஆனால் எல்லோரையும் முட்டாள்கள் என நினைக்கக் கூடாது.

பொறுப்பானவர்களாக இருந்தால் நேர்மையாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
நீண்ட வியாக்கியானங்களை நாம் செய்தாயிற்று. இப்போது கடந்த முறையை விட இரண்டு ஆசனம் யார் அதிகம் தருவார்களோ அவர்களுடன் கூட்டு. அப்போது ஈழம்? போர் நிறுத்தம்? வெங்காயம் அதெல்லாம் தேர்தலுக்கு அப்புறம் பாக்கலாம். அதான் இந்தியா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறதே என்றெல்லாம் இந்திய பார்ப்பனச் சக்திகளுக்கு வக்காலத்து வாங்கும் ராமதாசின் யோக்கியத்தனம் இரண்டே இரண்டு நாடாளுமன்ற ஆசனத்திலேயே தங்கியிருக்கிறது.

எப்படி வேண்டுமானாலும் பேசலாம் கடைசியில் ஒட்டு வாங்கி ஜெயித்து விட்டு மகனை அமைச்சராக்கி, எல்லா நாடகங்களையும் அரங்கேற்றலாம் என்கிற காங்கிரஸ், திமுக, ராமதாஸ் கூட்டணிக்கு மக்கள் சாவு மணி அடிக்க வேண்டும். இல்லை என்றால் ஈழத்திலே வீசப்பட்ட குண்டு தமிழகத்தில் வீசப்பட அதிக நேரம் ஆகாது. இவர்களால் ஈழத் தமிழனை மட்டுமல்ல இந்தியத் தமிழனையும் காப்பாற்ற முடியாது.

நண்பர்களே! ஈழத் தமிழர் மீதான சிங்கள இனவெறிப் போரை முட்டுக் கொடுத்து நடத்திய காங்கிரஸை வீழ்த்துவதுதான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. போருக்கு துணைபோகும் காங்கிரஸ்காரனை யாரெல்லாம் தங்கள் முதுகில் சுமந்து வருகிறார்களோ (திமுக, பாமக வேறு யாரானாலும்) அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் படுகொலைகளில் கை நனைக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அவர்களுக்கும் சேர்த்தே முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் நமது திட்டமாக இருக்க வேண்டும்.

தொம்பன்

உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் - உடல் சிதறிப்பலி - கருவிலிருந்த குழந்தையும் சிதறிய பரிதாபம்

பாதுகாப்பு வலயத்தில் சிங்கள கொடூர இராணுவத்தினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் உலகில் எங்குமே நடைபெறா கோரச் சாவை தமிழினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.


நேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்த படுகொலை ஒன்று ஈழத்தமிழினம் இதுவரை சந்தித்தாரத கொடூரம். படையினர் ஏவிய எறிகணையொன்று ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.





தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது.


தமிழினப் படுகொலையை மெளனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம், இந்தப் படுகொலையை எவ்வாறு நியாயப்படுத்தப்போகின்றதோ..?


அண்மையில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கருவில் உள்ள குழந்தையொன்று காயமடைந்த நிலையில் பிறந்தது. மருத்துவர்களின் தீவிர சத்திரசிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தவறான அணுகுமுறை மற்றும் நடத்தைகள் -அமெரிக்கா வின் மேலாண்மை

அமெரிக்காவை நோக்கி திசைதிரும்பும் தமிழ்மக்களின் கோரிக்கைகள் -பருத்தியன்


உலகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சர்வதேசத்தினை நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்நிலையில், அவர்களுடைய பார்வை தற்பொழுது அமெரிக்காவை நோக்கித் திரும்புவதை உணரமுடிகிறது.


இதுவரை காலமும், இந்தியாவை பிரதானமாக வைத்து எழுப்பப்பட்ட குரல்களும் ஐரோப்பிய நாடுகளை நோக்கியதான கோரிக்கைகளும் இன்றைவரைக்கும் எதுவித பலனையும் தராத நிலையில்,உலகின் நீதிபதி என தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவை நோக்கி தமது நீதிக்கான கோரிக்கைகளை உலகத்தமிழ்மக்கள் முன்வைக்க முனைந்துள்ளனர்.


இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டிய இந்தியாவே ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இனவழிப்புப் போருக்கு சகல வழிகளும் துணைநிற்கின்றது.


இந்திய மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களனைவரும் ஒருசேர வேண்டுகோள் விடுத்தும் கெஞ்சி மன்றாடியும் அது தமிழ்மக்கள் மீது இரக்கங் காட்டவேயில்லை.போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பாற்றுவதற்கான அடிப்படை மனிதாபிமான காரியத்தையேனும் செய்யவில்லை என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்ததுடன் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


ஐரோப்பிய நாடுகளும் தம்பங்கிற்கு ஒருசில அறிக்கைகளை மாத்திரம் தெரிவித்துவிட்டு பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசின் போர்வெறியை கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் இந்நாடுகள் மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.


இந்நிலையில், இவற்றை நம்பி எந்தவொரு பலனும் கிடைக்காது என முடிவெடுத்தனரோ... என்னவோ..!? தற்பொழுது அமெரிக்காவை நோக்கி, அதாவது ... இலங்கைத் தமிழர் பிரச்சனையை ஓரளவேனும் புரிந்துவைத்துள்ள அமெரிக்க ஐனாதிபதி ஒபமா மற்றும் கிளாரி கிளிண்டன் அம்மையார் ஆகியோரை நோக்கி தமிழ்மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கத்தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு இனிவரும் காலங்களில் எப்படியிருக்கும் எனப் பார்ப்போமானால்... ஒபமா அரசினைப் பொறுத்தவரையில், அதன் முதற்கடமையாக, தனது நாட்டின் வீழ்ந்துபோயுள்ள பொருளாதாரத்தினை மீளகட்டியெழுப்புவதனையே பிரதானமாக கருத்தில் கொண்டுள்ளது.


அதற்கு அடுத்தபடிதான் மற்றைய விடயங்கள் என்பது தெளிவு. ஆயினும் இலங்கை விடயத்தில் அது காத்திருந்தது இக்காரணத்தினால் மட்டுமன்று. இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன, அவ்விடயத்தினை அது எவ்வாறு கையாள்கிறது, இந்திய அரசின் செயற்பாடுகள் குறித்து தமிழ்மக்களின் அபிப்பிராயங்கள் என்ன? என்பவைபற்றி மிகநுணுக்கமாக அவதானித்து வந்தது.


இந்தியாவும் தமிழ்மக்களை கைவிட்டநிலையில், அமெரிக்கா தற்போது தான் தலையிடுவதற்கான சந்தர்ப்பமாக இதைக் கருதலாம். இந்திய நாடாளுமன்ற தேர்தலின்பின் ஆட்சிமாற்றம் வந்து, அதன்மூலம் பாரதிய ஐனதா கட்சி அரசேறினால் அக்கட்சி ஈழத்தமிழ்மக்கள் விடயத்தினை வித்தியாசமான முறையில் கையாள எத்தனிக்கும் என்பதனையும் அமெரிக்கா நன்கறியும் என்பதனால், அதற்கு முன்பாகவே தான் தலையிட்டு தன் அதிகாரத்தினைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா முயற்சிக்கலாம்.


எது எப்படியாகினும், தற்போது இலங்கை விடயங்களைக் கையாளும் பொறுப்பை கிளாரி கிளிண்டன் அம்மையாரிடமே அமெ.ஐனாதிபதி ஒபமா அவர்கள் ஒப்படைத்திருக்கிறார்.


"ஒரு இலட்சியத்திற்காக, ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் ஒரு இயக்கத்தினை 'பயங்கரவாதிகள்' என கருதமுடியாது. பயங்கரவாதத்தினையும் ஒரு இலட்சியத்துடனான விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்" என முன்னொருதடவை கிளாரி கிளிண்டன் அம்மையார் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி நல்லவிதமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.


இவ்வகையில், ஈழத்தமிழர் தொடர்பாக ஆதரவுக்கொள்கையுடைய ஒபமா அரசினை நோக்கி உலகத்தமிழர் அனைவரினதும் கோரிக்கைகள் திரும்பியுள்ள நிலையில்... அதனை நோக்கி தமிழ் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மிகவும் வலுவானதாகவும், நிரந்தரத் தீர்வினை பெற்றுத்தர கூடியதுமானதாகவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.அவற்றில் முக்கியமானவை, வன்னி மக்களின் அவலத்தினை நீக்கும் பொருட்டு உடனடியான யுத்த நிறுத்தம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாதிகள் என்ற பெயரிலுள்ள தடையை உடனடியாக நீக்கி விடுதலைப் புலிகளே நம் தமிழினத்தின் ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


நிரந்தரத் தீர்வாக நம்மை நாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடைய தமிழீழம் எனும் தனிநாட்டுத் தீர்வே அமையவேண்டும். என்பவற்றை ஆணித்தரமாக வலியுறுத்தல் வேண்டும். அமெரிக்காவை நோக்கி வலியுறுத்தப்படும் இக்கோரிக்கைகள் முழு உலகத்தையும் வலியுறுத்துவதாகவும் அமையும்.


அக்கோரிக்கைகளை ஏற்று அமெரிக்கா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் "தமிழீழம்" மிகவிரைவில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.


உலகத்தமிழர் அனைவரும் ஒன்றுசேர்ந்து அமெரிக்காவை கேட்கும் அதேசமயத்தில் அமெரிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் பலரும், பொது அமைப்புக்கள் பலவும் ஈழத்தமிழருக்காக பேசத்தொடங்கியுள்ளனர் என்பது நல்லதொரு ஆரம்பம் என்றே சொல்லலாம்.


ஈழத்தமிழர் பிரச்சினையை அமெரிக்கா தனித்தன்மையுடனும் நீதியுடனும் கையாளுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தாலும் அதனை உறுதிப்படுத்துவது நம் கைகளிலேயே உள்ளது. எனவே , தற்பொழுது அமெரிக்கா நோக்கி திரும்பியுள்ள நமது நீதிக்கோரிக்கைப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


ஆனாலும் நமது போராட்டம் அமெரிக்காவை மட்டுமே சுற்றி நில்லாமல் சர்வதேசம் முழுவதையும் நோக்கியதாகவும் தொடர்ந்து வைத்திருங்கள். ஏனெனில், நம் தமிழர் தரணியாம் தமிழீழம் சர்வதேச நாடுகள் அனைத்தினதும் ஆதரவுடனும் அங்கீகாரத்துடனும் அமையவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.


வலுப்பெறுவோம் நாம் உருப்பெறுவோம்!
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நம் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்"

வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது.

வன்னியில் 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் பொருட்டு அங்கு உடனடியாக ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு சென்று பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்வை காணும் முயற்சிகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழனின் இரத்தத்தை கொதிக்க வைக்கும் அறிக்கை - திமுக காங்கிரஸ் கூட்டணி யின் பெரும் துரோகம்

இதற்கு கருணாநிதியும் காங்கிரஸ் நாய்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.


இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்:
சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.

அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றது.

---------------


இந்தியா வழங்கிய உதவியாலேயே யுத்தத்தில் புலிகளை ஒழிக்க முடிந்தது: நாடாளுமன்றில் சபை முதல்வர் நிமால் அறிவிப்பு

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. என சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்புக் காரணமாகவே புலிப் பயங்கரவாதத்தைத் தம்மால் இந்தளவுக்கு ஒழித்துக்கட்ட முடிந்துள்ளது என்று அரசு நேற்று நாடாளுமன்றில் உறுதிபடக் கூறியது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்குத் தொடர்ந்தும் இந்தியா வழங்கிவரும் இந்த உதவிகள் அளவிட முடியாதவை என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க இந்திய வைத்தியர்களின் வருகை தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அக்கூற்றுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே அப்போது இதனைக் கூறினார்.
இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. அந்த ஒத்துழைப்பு எமக்குத் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பஸில் ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயங்களின் அடிப்படையில்தான் இந்தியா இந்த உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது.
அந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகத்தான் இந்தியா, வைத்தியர்களை எமக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ வைத்தியர்கள் அல்லர். இராணுவத்திற்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள்.
ஆனால், இந்த வைத்தியர்களின் வருகையை ஜே.வி.பியினர் எதிர்க்கின்றனர். ஜே.வி.பியின் சுவரொட்டிப் போராட்டத்தில் புதிய தொனியைச் சேர்ப்பதற்காகவே ஜே.வி.பியினர் இந்த விடயத்தைப் பெரிதாகத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது அந்த நெருப்பை அணைக்கும் நடவடிக்கையில்தான் நாம் இப்போது ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் எமக்கு உதவி வழங்கும் நாடுகளை நாம் பகைத்துக்கொள்ள மாட்டோம்.

இந்தியா எமக்கு மருந்துப் பொருள்களையும் வழங்கியது. அவற்றை நாம் எமது சுகாதார அமைச்சின் ஊடாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநியோகித்துள்ளோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் விமானம் மூலம் பருப்பு போட்டது போல் அந்நாடு இப்போது செய்யவில்லை.

இலங்கை வந்திருக்கும் இந்திய வைத்தியர்களின் திறமை தொடர்பில் நாம் திருப்தியடைகின்றோம். அவர்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை வைத்தியசாலை நிரந்தரமானதல்ல. அது நடமாடும் வைத்தியசாலை. தேவையில்லாத பட்சத்தில் அது இல்லாது செய்யப்படும்.
புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளாலோ அல்லது இந்திய மருத்துவர்களாலோ எமது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படாது. இதை ஜே.வி.பி. நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது இந்தியாவின் உதவியைப் பெறுமாறு கூறிய ஜே.வி.பி. இப்போது இந்தியாவிடமிருந்து எந்த உதவிகளையும் பெறக்கூடாது என்கிறது. அக்கட்சி அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகின்றது.

புல்மோட்டைக்கு வந்துள்ள இந்திய மருத்துவர்கள் அங்குள்ள கணியவளங்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்கள் அதற்காக வரவில்லை. மக்களுக்குச் சிகிச்சையளிக்கவே வந்துள்ளனர்.
இந்தப் புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே வழங்கப்படும். அதன்பிறகு நோயாளிகள் பதவிய, கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுவர்.

எமக்கு உதவி வழங்கத் தயாராகவுள்ள நாடுகளிடமிருந்து உதவியைப் பெற நாம் தயாராகவுள்ளோம். அந்த உதவிகளை நாம் நிராகரிக்க மாட்டோம்.

இது தொடர்பில் சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அந்நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

Tuesday, March 17, 2009

போலிசின் போலித்தனம் - தமிழ் உணர்வாளர்கள் மறியல்

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தவர் வயிற்று வலியில் தற்கொலை என வழக்கு: தமிழ் உணர்வாளர்கள் மறியல்

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் வயிற்று வலியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதனைக் கண்டித்து கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூரில் பெரும் பதற்றம் நிலவியது.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி சிற்றூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் இராஜசேகர் (வயத 30) நேற்று முன்நாள் ஞயிற்றுக்கிழமை தீக்குளித்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்பை பயனின்றி இன்று காலை இறந்தார்.ஆனால், அவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உடையார்பாளையம் காவல்துறை ஆய்வாளர் இராமசாமி, காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து எழுதப்படாத வெள்ளைத்தாளில் இராஜசேகரின் கைரேகையைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இராஜசேகரின் தாய் ரோகம்பாள், இராஜசேகரின் மனைவி செல்வி ஆகியோரிடமும் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், காவல்துறையினரிடம், கையெழுத்து எதற்கு வாங்கியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் விடையளிக்காமல் சென்று விட்டனர்.

இது தகவலறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி மாநிலச் செயலாளர் பெ.மணியரசன், வழக்கறிஞர்கள் நல்லதுரை, கருணாநிதி, சின்னசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் சொக்கா.ரவி உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழரைக் காக்கக் கோரி இராஜசேகர் இறந்துள்ள உண்மை நிலையை வழக்காகப் பதிவு செய்தால்தான்அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு விடுவோம் எனக் கூறி தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 161(3) கீழ் பெற்றோர் மற்றும் உறவினரின் வாக்குமூலம்படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இதனால் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் இராமசாமி, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் இராஜசேகரின் மனைவி செல்வி, தாய் ரோகம்பாள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் இராஜசேகர் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து நிலைமை சீரடைந்தது.

ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக குரல்வளையை நசுக்கிறது: செய்தியாளர்களிடம் வைகோ

இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் சீமானைப் பார்த்து விட்டு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்குநர் சீமானை புதுச்சேரி அரசு முதலில் சாதாரண குற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் பாசிச ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதி, சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தன் கையில் உள்ள காவல் துறையை ஏவி விட்டு ஏற்பாடு செய்தார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் பேசாததையா இயக்குநர் சீமான் பேசிவிட்டார்?
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை கடல் எல்லையில் கண்ணி வெடி வைத்துள்ளனர். இலங்கை இராணுவம் சுட்டதில் இதுவரை தமிழக மீனவர்கள் 500 பேர் இறந்துள்ளனர். இதுவரை யாரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் பணம் வட்டியில்லாமல் கொடுத்துள்ளது. இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது.
இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷியா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. இப் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும்.
காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்று சீமான், நாஞ்சில்சம்பத், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தந்திரமாக கைது செய்துவிட்டனர்.
இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை 11 இளைஞர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை என்ற தீ தமிழர்கள் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மதிமுக சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் கோவையில் நான் பங்கேற்க உள்ளேன் என்றார் வைகோ.
பேட்டியின் போது மதிமுக மாநில அமைப்பாளர் மணிமாறன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருணாநிதியின் அடுத்த துரோக நடவடிக்கை

கருணாநிதி இன் துரோகத்திற்கு வரம்பு இல்லாமல் போய்விட்டது, மத்திய அரசில் பங்கு மற்றும் நல்ல அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலை இருந்தும் மாநில அரசில் முழு அதிகாரம் இருந்தும் போர் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல் " சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்"
அனுப்புவது மட்டுமே என் வேலை என்பது போல் அவரின் இந்த நடவடிக்கை தமிழர் துரோக நடவடிக்கை .
-----------------------------
’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்"

ஈழத்தமிழர்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் அனுப்பி உதவி செய்யவிருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களுடன், குளிப்பதற்கான சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை ஆகிய பொருட்கள் மற்றும் சமையல் செய்வதற்கான எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கேற்ற வகையில் தனித்தனியே சிப்பங்களாக தயார் செய்து விரைவில் அனுப்பப்படவுள்ளன.

இந்தப் பொருட்கள் இந்திய அரசின் அனுமதியுடன் இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு, முறையாக பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும். அந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சமையல் பாத்திரங்களை முதலமைச்சர் கருணாநிதி 14.3.2009 அன்று பார்வையிட்டு தேர்வு செய்தார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. தொண்டர்கள் மரணம்

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23). மற்றும் அரியலூர் மாவட்டம் ராஜசேகர் (வயது 24) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார்.

புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 24). பா.ம.க.வை சேர்ந்த இவர் இலங்கை தமிழர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார்.

இதையடுத்து அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

முன்னதாக தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜசேகர் சிகிக்சை பெற்று வந்த போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.

பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ

புதுச்சேரி: பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிய இக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
இதில் வைகோ பேசுகையில்,இலங்கை தமிழ் மக்களின் தலைவராக பிரபாகரன் போன்று யாரும் தோன்ற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள்.இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏன் கூறவில்லை? தமிழக சட்டசபை தீர்மானம் என்ன ஆனது? தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான். தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்றார்ஜி.கே.மணி பேசுகையில், தமிழ் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.
வட இந்தியர்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசு சும்மா இருக்குமா?. இலங்கையில் போர் நிறுத்தம் வரவில்லை என்றால் தமிழ் இளைஞர்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள் என்றார்.பழ.நெடுமாறன் பேசுகையில், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தமிழ் மக்களின் நெஞ்சை புண்ணாக்குவதாக உள்ளது. தேர்தலை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உயிர் தியாகத்தை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாடம் புகட்ட தவறக்கூடாது என்றார்.

இக் கூட்டத்தில் தீக்குளித்து இறந்த கடலூரை சேர்ந்த வாலிபர் தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.

கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க நாஞ்சில் சம்பத், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் திண்டுக்கல்லில் 16.03.2009 அன்று மாலை 4.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.சம்பத் தலைமையில் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் க.சூ.இரவணா, ம.தி.மு.க மாவட்டச்செயலாளர் செல்வராகவன், விடுதலைச்சிறுத்தைகள் நகரச்செயலாளர் அன்பரசு, திருச்சித்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் பேட்ரிக் சகாயராஜ், அருட்திரு பிலிப் சுதாகர், தமிழர் தேசிய இயக்க மாநிலத் துணைத்தலைவர் கு.செ.வீரப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி பாண்டியன், சி.பி.ஐ.( எம்.எல்) மாவட்டச்செயலாளர் ஆபிரகாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெ.தி.க நகரத் தலைவர் துரை.சுப்பிரமணி நன்றி கூறினார்.பெரியார் நம்பி, பழனி நல்லதம்பி, திருச்செல்வம், முருகன், குணா, செம்பட்டி ஆல்பர்ட், பாரத், கிருட்டிணமுர்த்தி உட்பட பல தோழர்களும் கலந்துகொண்டனர்.

Monday, March 16, 2009

இலங்கை-பாமக-வி.சி. தொண்டர்கள் தீக்குளிப்பு

கடலூர்& அரியலூ: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் பாமக தொண்டர் ஒருவரும் இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி தீக்குளித்துள்ளனர். இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் ஆனந்த்(23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

காலையில் ஆனந்த் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி தீக்குளித்து விட்டதாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாமக தொண்டரும் தீக்குளிப்பு:
அதே போல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காட்டுநாகலேரியை சேர்ந்த ராஜசேகர் (24) பாட்டாளி மக்கள் கட்சி தொண்டராவ்ர்.
இவர் நேற்று மாலை மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ராஜசேகர் தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராஜசேகருக்கு செல்வி என்ற மனைவியும் 10 வயதில் அஜித் என்ற மகனும் உள்ளனர். ராஜசேகர் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி மிகவும் வேதனையுடன் பேசி வந்துள்ளார். இந் நிலையில்தான் தீக்குளித்துள்ளார்.

தஞ்சை மருத்துவமனையில் அவர் அளித்த வாக்குமூலத்திலும் இலங்கைத் தமிழர் படும் துயரத்தை தாங்க முடியாமல் தீக்குளித்ததாகக் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் பயங்கரவாதியானார் - இலங்கை அரசாங்கத்தின் அட்டகாசம்

வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது: அவுஸ்திரேலிய நிருபரிடம் சீறி வெடித்த கோத்தபாய

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது என்று அவுஸ்திரேலிய நிருபரிடம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்துள்ளார்.
கொழும்பில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் கரும்புலித் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி கொழும்பில் கடந்த மாதம் 26 ஆம் நாள் ந.வித்தியாதரன் கடத்தப்பட்ட பின்னர் கைது என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.


அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் 'டேட் லைன்' என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோது கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்தவாறு பதில்களை வழங்கினார்.

போர் குற்றங்கள் புரியும் சிங்கள அரசாங்கம் - ஐ நா

எமது அறிக்கை சரியானது: சிறிலங்காவுக்கு ஐ.நா. பதிலடி

போர்க் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்கள் சரியானது என ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் றூபெட் கொல்விலி தெரிவித்துள்ளதாவது:


சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே.
சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை பலதரப்பு தகவல்களுடன் ஒப்பிட்ட பின்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே கடந்த வெள்ளிக்கிழமை எமது அலுவலகம் வெளியிட்ட தகவல் சரியானது என்றார் அவர்.

ஈழத்தின் விசயமாக அனைத்து செய்திகளும்

நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .

Sunday, March 15, 2009

இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிப்பு

தமிழ்நாடு, கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான நாகலிங்கம். ஆனந்த்(வயது 23) என்ற வாலிபர் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உயிரை தியாகம் செய்கிறேன் என தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று காலையில் ஆனந்த் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபர் ஆனந்திடம் "எப்படி தீக்காயம் ஏற்பட்டது?" என்று டாக்டர் கேட்டபோது "இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்தேன்" என்று கூறினார். தீக்குளித்த வாலிபர் ஆனந்துக்கு 95 சதவீதம் தீக்காயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Saturday, March 14, 2009

மருந்துகள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை; இலங்கை இராணுவத்துக்கே அனுப்பப்படுகின்றன: வைகோ

தமிழக தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்துப் பொருட்கள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பப்படவில்லை. இலங்கை இராணுவத்துக்கே அனுப்பப்படுகின்றன என்று வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார்.
இன்று ஸ்ரீபெரும்புதூர் ம.தி. மு.க. ஒன்றிய செயலாளர் துரை பாலாஜி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை மொத்தமாக ஓரிடத்தில் அடைத்து பெண்களின் கற்பை சூறையாடி, கொலை செய்தும் இளைஞர்களை கொடூரமாக சுட்டு வீழ்த்தியும் வருகிறது.

இதற்கு முழுக்க இந்திய அரசு துணை நிற்கிறது. உலக நாடுகளும் ஐநாசபையும் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லி வருகிறது. ஆனால் இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இன்று வரை வலியுறுத்தவில்லை. ஏன் என்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் செய்வது இந்திய அரசுதான். தமிழக தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்துகளை ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை.


இலங்கை இராணுவத்துக்காகவே அனுப்பப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பற்றி நாங்கள் பேசியது இல்லை.ஆனால் இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசுவோம். கருணாநிதி கடந்த 3 வருடங்களாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை பிரிக்க பல வழிகளில் சதி செய்து வருகிறார். இதன் பலனாக நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு, கண்ணப்பன் கட்சி மாற்றம் நடைபெற்றது. கண்ணப்பன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.அவர் எங்கிருந்தாலும் வாழ்க.அ.தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.வை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு வைகோ கூறினார்.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.