ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Sunday, March 8, 2009

வைகோ அறிக்கை

கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழாவும், திருப்பலியும் நடக்கும். இதுதொடர்ந்து பாரம்பரியமாக இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பார்கள்.

கச்சத்தீவு உடன்படிக்கையிலும் தமிழக மீனவர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க உரிமையும் இருக்கிறது. இச்சூழலில் திடீரென்று இலங்கை அரசு தமிழகத்தில் இருந்து ஐம்பது பேர் மட்டுமே கச்சத்தீவுக்குச் செல்லமுடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்து இருக்கிறது.

இதனால் அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் மத்தியில் வேதனையும், மனக்கொதிப்பும் ஏற்பட்டு உள்ளது. அம்மக்களின் உணர்வுகளை இலங்கை அரசு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அலட்சியப்படுத்துகிறது. எனவே, இந்த ஆண்டும் அம்மீனவ மக்கள் யாரும் கச்சத் தீவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பாரமுகமாக தொடர்ந்து இருக்கின்றது. சிவகங்கை மறைமாவட்டத் தலைமைக் குரு அமல்ராஜ் அடிகளாரும் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே மீனவர்கள் இலங்கை கப்பற்படையினரால் நித்தம் நித்தமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வேதனையோடு வாழுகின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்களுடைய குறைகளைச் சொல்லி ஜெபிக்கக்கூட அனுமதி இல்லாமல் இலங்கை அரசு செய்துவிட்டது. இது கடுமையான கண்டனத்திற்குரியது.

இன்றைக்குத் தமிழக முதலமைச்சர் இவ்வளவு பெரிய சிக்கலைப்பற்றிப் பேசாமல், தமிழகத்தின் உயிர் ஆதாரமான பிரச்சனைகளில் அனைத்திலும் தன் கடமையைச் செய்யாமல் வெற்று அறிக்கைகளை பக்கம் பக்கமாக வெளியிட்டுக் கொண்டு இருக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்தப் பிரச்னையிலும் கடமை தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறேன்.

கிறிஸ்தவ மக்களின் கச்சத்தீவு செல்கின்ற உரிமையை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வைகோ
‘தாயகம்

சென்னை - 8
08.03.2009

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.